Vanangaan : ‘வணங்கான் திரையிடுவதில் சிக்கல்.. பணப் பிரச்னையால் கடைசி நேரத்தில் சோகம்.. தியேட்டருக்கு வந்தோர் ஏமாற்றம்’
Vanangaan : பல பிரச்சனைகளை தாண்டி, வணங்கான் இன்று வெளியாக இருந்த சமயத்தில் தற்போது பிரச்சனை ஏற்பட்டுள்ளது. KDM பிரச்சனை காரணமாக படத்தை திரையிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Vanangaan : தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குநர்களில் ஒருவர் பாலா. தொடர் தோல்விகள், பர்சனல் பிரச்சினைகள், நெகட்டிவான விமர்சனங்கள் என தன்னுடைய கேரியரின் மோசமான காலக்கட்டத்தில் இருக்கும் பாலா, சூர்யாவுடன் வணங்கான் திரைப்படத்தில் இணைந்தார். ஆனால் படப்பிடிப்பில் சில கசப்பான சம்பவங்கள் அரங்கேற, சூர்யா அந்தப்படத்தில் இருந்து விலகினார். இதனையடுத்து அந்தப்படத்தில் அருண் விஜய் கமிட் செய்யப்பட்டார்.
பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படம் வணங்கான். இந்த படத்தில் முதலில் சூர்யா, கிரித்தி ஷெட்டி, மமிதா பைஜு நடிக்க இருந்தார்கள். கருத்து வேறுபாடு காரணமாக சூர்யா விலகினார். அவரைத் தொடர்ந்து கிரித்தி ஷெட்டி, மமிதா பைஜு நீக்கப்பட்டனர். இதில் மமிதா பைஜு, சூர்யாவின் தங்கையாக நடிக்க இருந்தார்.
சூர்யா விலகல்
சில காரணங்களினால் சூர்யா இந்த படத்திலிருந்து விலகிய பிறகு, அருண் விஜய் இந்த படத்தில் ஹீரோவாக கமிட் ஆனார். கடந்த ஓராண்டுக்கும் மேல், இப்படத்தின் பணிகள் நடைப்பெற்றது. வணங்கான் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ரோஷினி நடித்திருக்கிறார். சமுத்திரகனி, ஜான் விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் பாடல்களுக்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். அதேபோல் பின்னணி இசையை சாம் சி.எஸ் போட்டிருக்கிறார்.
வணங்கான் படம், கடந்த வருடமே வெளியாக இருந்தது. இதையடுத்து, ஒரு வழியாக இந்த பொங்கலுக்கு வெளியிட படக்குழு முடிவு செய்தது. அதன்படி படம் ஜனவரி 10ஆம் தேதியான இன்று திரையரங்குகளில் வெளியாக இருந்தது. இந்த நிலையில், தியேட்டர் ரிலீஸில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
KDM பிரச்சனை
பல பிரச்சனைகளை தாண்டி, படம் இன்று வெளியாக இருந்த சமயத்தில் தற்போது பிரச்சனை ஏற்பட்டுள்ளது. KDM பிரச்சனை காரணமாக படத்தை திரையிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் காலை 9 மணிக்கு இப்படத்தின் சிறப்பு காட்சியை திரையிடவும் அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் இன்று காலை 9 மணிக்கு வணங்கான் படத்தை காண தியேட்டருக்கு வந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இப்படத்தின் 9 மணி காட்சிகள் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இப்படத்தை ரிலீஸ் செய்ய KDM இன்னும் கிடைக்கவில்லையாம். அந்த லைசன்ஸ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் இதுவரை படம் ரிலீஸ் ஆகவில்லையாம். வணங்கான் படத்தை பார்க்க காலை ஷோவிற்கு புக் செய்து வைத்திருந்த மக்கள், இப்போது 1 மணி ஷோவிற்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
KDM பிரச்சனை என்றால் என்ன?
யாருக்காவது பணம் கொடுக்கவில்லை என்றால் qube (or LAB) ல் கடிதம் கொடுத்தால் பிரதி நிறுத்தி வைக்கப்படும். ஒருமுறை படம் வெளியாகிவிட்டால் பணம் கிடைப்பது கஷ்டம். இது காலம் காலமாக கடைபிடிக்கப்படும் வழிமுறை. கடைசி நேரத்தில் பல பஞ்சயாத்துகளை தாண்டி தான் எந்த ஒரு படமும் வெளிவரும்.
KDM (Key Delivery Message) என்றால் தியேட்டரில் படத்தை க்யூப் எனும் சாட்டிலைட் முறையில் திரையிடுவதற்கான encrypted கோட் ஆகும். இது திரையரங்குகளுக்கு கொடுக்கப்பட்டால் தான் படம் ரிலீசாகும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்