‘அவ என் மகள் மாதிரி.. அவளப்போய் நான் அடிப்பேனா?.. செய்தி பரப்பிட்டாங்க; மமீதா சர்ச்சைக்கு பதிலடி கொடுத்த பாலா பேட்டி!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ‘அவ என் மகள் மாதிரி.. அவளப்போய் நான் அடிப்பேனா?.. செய்தி பரப்பிட்டாங்க; மமீதா சர்ச்சைக்கு பதிலடி கொடுத்த பாலா பேட்டி!

‘அவ என் மகள் மாதிரி.. அவளப்போய் நான் அடிப்பேனா?.. செய்தி பரப்பிட்டாங்க; மமீதா சர்ச்சைக்கு பதிலடி கொடுத்த பாலா பேட்டி!

Kalyani Pandiyan S HT Tamil
Dec 30, 2024 03:19 PM IST

மமீதா என் மகள் போன்றவள்; அவளை போய் நான் அடிப்பேனா..? ஒரு சின்ன பொம்பள பிள்ளையை போய் யாராவது அப்படி அடிப்பார்களா..? - பாலா

 ‘அவ என் மகள் மாதிரி.. அவளப்போய் நான் அடிப்பேனா?.. செய்தி பரப்பிட்டாங்க; மமீதா சர்ச்சைக்கு பதிலடி கொடுத்த பாலா பேட்டி!
‘அவ என் மகள் மாதிரி.. அவளப்போய் நான் அடிப்பேனா?.. செய்தி பரப்பிட்டாங்க; மமீதா சர்ச்சைக்கு பதிலடி கொடுத்த பாலா பேட்டி!

இதனையடுத்து அவர் அருண்விஜயை கதாநாயகனாக வைத்து வணங்கான் படத்தை எடுத்து இருக்கிறார். வணங்கான் திரைப்படம் வருகிற பொங்கல் பண்டிகையையொட்டி திரைக்கு வருகிறது. இந்த நிலையில், அந்த படம் தொடர்பாக பாலா கலாட்டா யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்து இருக்கிறார். அதில் அதில் வணங்கான் திரைப்படத்தில் முன்னதாக நடிக்க கமிட் ஆன மமீதா அவர் அடித்ததாக கூறி உருவான சர்ச்சைக்கு விளக்கம் கொடுத்து இருக்கிறார்.

 

பாலா
பாலா

இது குறித்து அவர் பேசும் போது, ‘மமீதா என் மகள் போன்றவள்; அவளை போய் நான் அடிப்பேனா..? ஒரு சின்ன பொம்பள பிள்ளையை போய் யாராவது அப்படி அடிப்பார்களா..? அன்றைய தினம் பாம்பேவிலிருந்து வந்த மேக்கப் கலைஞர் ஒருவர், மமீதா சும்மா உக்காந்திருக்கிறார் என்று சொல்லி, அவளுக்கு மேக்கப் போட்டுவிட்டார்.

எனக்கு மேக்கப் போடுவது பிடிக்காது என்று அவருக்குத் தெரியாது; அதை இவளுக்கும் சொல்ல தெரியவில்லை. ஷாட்டுக்கு ரெடி என்று நான் சொன்னவுடன் மமீதா மேக்கப்புடன் வந்து நின்றாள். அதைப் பார்த்து யார் உனக்கு மேக்கப் போட்டார் என்று சொல்லி, அடிப்பது போல கை ஓங்கினேன்; அவ்வளவுதான் அங்கு நடந்தது; ஆனால், மமீதாவை நான் அடித்து விட்டேன் என்று சொல்லி செய்தி பரப்பி விட்டார்கள்.’ என்று பேசினார்.

நடந்தது என்ன?

முன்னதாக, சில மாதங்களுக்கு முன்னர் சூர்யாவுடன் வணங்கான் திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆன நடிகை மமீதா தனியார் சேனல் ஒன்றிற்கு பேட்டிக்கொடுத்தார். அந்த பேட்டியில், பாலா படப்பிடிப்பில் தான் கத்துவதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ள கூடாது என்று சொன்னதாகவும், காட்சி ஒன்றில் சரியாக நடிக்காத போது அவர் தன்னை திட்டியதோடு, முதுகில் அடித்தார் என்றும் பேசினார்.

இந்தப்பேட்டி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பலரும் பாலாவை சமூகவலைதளங்களில் கடுமையாக சாடினர்.

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து மமீதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் ஒன்றை அளித்திருக்கிறார். அந்த விளக்கத்தில், “ நான் ஒன்றை இங்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் நடித்த வணங்கான் திரைப்படம் தொடர்பாக ஆன்லைனில் பரவும் செய்திகள் அனைத்தும் ஆதாரமற்றவை.

நான் கொடுத்த நேர்காணலின் ஒரு பகுதியை மட்டும் கட் செய்து பதிவிட்டு, தவறான தலைப்பில் அவை செய்திகளாக மாறிக்கொண்டிருக்கின்றன. நான் பாலா சாருடன் கிட்டதட்ட ஒரு வருடம் பணியாற்றி இருக்கிறேன். அதில் படத்திற்கு முந்தைய பணிகளும், பிந்தைய பணிகளும் அடங்கும்.

அவர் என்னிடம் கனிவாக நடந்து கொண்டு என்னை ஒரு நல்ல நடிகையாக மாற்ற முயன்றார். அந்தப்படத்தில் மனரீதியாகவோ, உடல்ரீதியாகவோ நான் எந்த வித துன்பத்தையும் அனுபவிக்கவில்லை என்பதை இங்கு மீண்டும் சொல்லிக்கொள்கிறேன்.

நான் அந்தப்படத்தில் இருந்து வெளியே வந்ததற்கான காரணம் என்னுடைய தொழில்முறை சார்ந்த கமிட்மெண்ட்டுகள்தான். இது தொடர்பான செய்தியை வெளிடும் முன்னர் என்னை தொடர்பு கொண்டு பேசிய ஊடகங்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். என்னை புரிந்து கொண்டதற்கு நன்றி” என்று பதிவிட்டு இருந்தார். 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.