‘சூர்யா எனக்கு ரொம்ப பிடிச்சவன்.. ஆனா விக்ரம்… அவனுக்கு இந்த அமைதிதான் பதில்..’ - பாலா இப்படி பேசியதற்கு காரணம் என்ன?
‘சூர்யா எனக்கு ரொம்ப பிடிச்சவன்.. ஆனா விக்ரம்… அவனுக்கு இந்த அமைதிதான் பதில்..’ - பாலா இப்படி பேசியதற்கு காரணம் என்ன என்பதை இங்கே பார்க்கலாம்
வணங்கான் படப்பிரச்சினை குறித்து இயக்குநர் பாலா பேசி இருக்கிறார்.
இது குறித்து பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலுக்கு பேசும் போது, ‘சினிமா துறையில் எனக்கு பிடித்த நபர்களில் முதலிடத்தில் இருப்பது சூர்யாதான். வணங்கான் திரைப்படத்தில் எனக்கும் சூர்யாவுக்கும் பிரச்சினை என்று எழுதிய போது, நானும் அவனும் இது குறித்து நாம் எந்த விளக்கமும் கொடுக்க வேண்டாம் என்று முடிவு செய்தோம். மேலும் யார் வேண்டுமென்றாலும், என்ன வேண்டுமென்றாலும் எழுதிக்கொள்ளட்டும், பேசிக்கொள்ளட்டும்; நாம் எதுவும் சொல்ல வேண்டாம் என்றுதான் நாங்கள் இருந்தோம்.
நாங்கள் வழக்கமான தொடர்பில்தான் இருந்தோம். உண்மையில் வணங்கான் படத்தில் சூர்யா நடிக்காமல் போனதிற்கு காரணம். சூர்யாவை கன்னியாக்குமரி போன்ற சுற்றுலா தளத்தில் வைத்து எங்களால் ஷூட் செய்ய முடியவில்லை. அவரைப்பார்க்க கூட்டம் கூடி விடுகிறது. எங்களுக்கு மிக மிக சிரமமாக இருந்தது. அதுதான் இணைந்து பணியாற்ற முடியாததிற்கு முதல் காரணம். மற்றப்படி எனக்கும் அவருக்கும் தனிப்பட்ட மனத்தாங்கலெல்லாம் கிடையாது.’ என்று பேசினார்.
தொடர்ந்து விக்ரம் பற்றி கேட்கும் போது, சிறிது நேரம் அமைதியாக இருந்த பாலா.... எவ்வளவு இந்த அமைதிதான் கேள்விக்கான பதில் என்று கூறினார்.
என்ன மோதல்?
சினிமாவில், மிக நீண்ட நாட்களாக போராடிக் கொண்டிருந்த விக்ரமிற்கு திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் சேது. இந்த திரைப்படத்தை இயக்கியவர் இயக்குநர் பாலா. அதன் பின்னர் பாலா இயக்கிய பிதாமகன் திரைப்படத்திலும் அவர் நடித்திருந்தார். அந்தப் படத்தில் விக்ரமின் நடிப்பிற்காக தேசிய விருது வழங்கப்பட்டது. அதன் பின்னர் பாலாவும் விக்ரமும் இணையவில்லை.
இதற்கிடையே தன்னுடைய மகனான துருவ் விக்ரமை பாலாதான் சினிமாவில் அறிமுகப்படுத்த வேண்டும் என்று ஆசைப்பட்டு, தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி வரவேற்பு பெற்ற அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் ரீமேக்கான வர்மா படத்தை பாலாவை வைத்து எடுத்தார் விக்ரம். ஆனால், விக்ரமுக்கு திருப்தி தராத காரணத்தால், அந்தப்படம் திரையரங்கில் வெளிவில்லை;
அதன் பின்னர் அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கிய இயக்குநரான சந்திப் ரெட்டி வங்காவின் உதவி இயக்குநரை வைத்து மீண்டும் ஆதித்யா வர்மா என்ற பெயரில் அந்த படம் படமாக்கப்பட்டது. திரையரங்கில் வெளியான இந்தப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதற்கிடையே பாலா இயக்கிய வர்மா திரைப்படம் ஓடிடியில் வெளியானது. அந்தப்படத்திற்கு பாலா கடுமையான விமர்சனங்களை சந்தித்தார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்