Vanagaan Released: தடைகளைத் தாண்டி வெளியானது வணங்கான்.. முதல் பெயராக நடிகர் சூர்யாவிற்கு நன்றி அறிவிப்பு
தடைகளைத் தாண்டி வெளியானது வணங்கான்.. முதல் பெயராக நடிகர் சூர்யாவிற்கு நன்றி அறிவிப்பு எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வணங்கான் திரைப்படம், பல்வேறு தடைகளைத் தாண்டி திரையரங்குகளில் ரிலீஸானது. பணப்பிரச்னை காரணமாக வணங்கான் திரைப்படம் வெளியாவதில் சிக்கல் இருந்த நிலையில் பிரச்னை முடிவுக்கு வந்தது.
தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குநர்களில் ஒருவர் பாலா. தொடர் தோல்விகள், பெர்சனல் பிரச்னைகள், நெகட்டிவான விமர்சனங்கள் என தன்னுடைய கேரியரின் மோசமான காலகட்டத்தில் இருக்கும் பாலா, சூர்யாவுடன் வணங்கான் திரைப்படத்தில் இணைந்தார். ஆனால், படப்பிடிப்பில் சில கசப்பான சம்பவங்கள் அரங்கேற, சூர்யா அந்தப்படத்தில் இருந்து விலகினார். இதனையடுத்து அந்தப்படத்தில் அருண் விஜய் கமிட் செய்யப்பட்டார்.
திடீரென சூர்யா விலகியதும் அவரைத் தொடர்ந்து கீர்த்தி ஷெட்டி, மமிதா பைஜு நீக்கப்பட்டனர். இதில் மமிதா பைஜு, சூர்யாவின் தங்கையாக நடிக்க இருந்தார்.
