Lovers Day : இந்த கிப்ட் கொடுத்து ப்ரபோஸ் பண்ணுங்க… உங்க லவ் சக்சஸ்தான்…
New Gift Ideas : வாலண்டைன்ஸ் டே அதாவது காதலர் தினம் நெருங்கிக்கொண்டிருக்கும் நேரத்தில் உங்கள் பார்ட்னருக்கு என்ன பரிசு கொடுப்பது என்று தவித்துக்கொண்டிருக்கிறீர்களா? இதோ உங்களுக்கான சில யோசனைகள் இங்கே.
பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. அதற்காக உலகம் முழுவதும் உள்ள காதலர்கள் தங்களின் பாட்னருக்கு என்ன மாதிரியான பரிசுப்பொருள் கொடுக்கலாம் என்று மண்டையை பிய்த்துக்கொண்டிருப்பார்கள். வழக்கமாக கொடுக்கும் சாக்லேட்கள், ரோஸ், இல்லாமல் பயனுள்ளதாகவும், நினைவில் வைத்துக்கொள்ளும் வகையிலும் புதுவித கிப்ட் யோசனைகளை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
அந்தப்பரிசுப்பொருட்கள் வெறும் பொருட்களாக மட்டுமல்லாமல் அவை உணர்வுகளுடன் கலந்தவையாக இருக்க வேண்டும். அது உண்ர்வுப்பூர்வமான பரிசாக இருக்க வேண்டும் என்பதைவிட அதைகொடுக்கும் சூழ்நிலையை மேலும் உணர்வு மயமாக்குங்கள். நாம் பிறந்த நாள், பண்டிகை என்றால் பரிசுப்பொருட்களை வழங்குவோம். அப்போது அதை நாம் யாருக்கு வேண்டுமானாலும் வழங்குவோம். ஆனால் காதலர் தினத்தன்று காதலர்களுக்கு கொடுக்கும் பரிசுப்பொருட்கள் மிகவும் ஸ்பெஷலான ஒன்று, இருவரும் அன்பு, காதல், பரிசு ஆகிய அனைத்தையும் பரிமாறிக்கொள்வதோடு மட்டுமின்றி அது ஒரு மகிழ்வைகொடுக்கும் தருணமாக அமைந்துவிடும்.
எனவே வழக்கமான பரிசுப்பொருட்களாக அவை நிச்சயம் இருக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருங்கள். மேலும் அவர்களுக்கு அது பிடித்திருக்க வேண்டும். அதில் ஒரு தனித்தன்மை இருக்க வேண்டும். அவர்களின் உணர்வுகளோடு அவை ஒத்துப்போவதாக இருக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் மனதில் நீங்கள் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறீர்கள் என்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள்.
வழக்கமான ஒன்றைவிட பெண்களுக்கு கொடுக்கும்போது நகைகள், வாசனை திரவியங்கள், கைப்பைகள், வண்ண விளக்குகள் என்று வித்யாசமாக பொருட்களை பரிசாக வழங்கலாம். ஆனால் இதிலும் நீங்கள் தனித்தன்மையை காண்பிப்பதற்காக அவர்களின் குணத்தை, எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். உதாரணமாக நீங்கள் அவர்களுக்கு கைப்பையை பரிசளிக்க விரும்பினால் உங்கள் காதலி இயற்கையை விரும்புவர் என்றால், இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட கைப்பைகளை பரிசாக அளிக்கலாம்.
அவற்றை மட்டுமேயன்றி அவற்றை அழகாக பேக் செய்து, கூடவே சாக்லேட் பிரவுனிகள், பாதாம் சாக்லேட்கள், வறுத்த தானிய விதைகள் வைத்து கட்டி ரோஜாவை வைத்து கொடுக்கும்போது இன்னுமே ரொமாண்டிக்காக இருக்கும். விலையுயர்ந்த கிப்ட் ஹேம்பர்ஸ் எனப்படும் ஒரு செட்டாக உள்ளவற்றை தேர்ந்தெடுக்கலாம்.
மேலும் கஸ்டமைஸ்ட் மற்றும் பர்ஸ்னலைஸ்ட் கிப்ட்களை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். ஆண்களுக்கு கொடுக்கும்போது அது விலையுயர்ந்த வாசனை திரவியமாக இருக்கலாம். வாசனை திரவியம் என்பது மிக ரொமாண்டிக்கான பரிசாக கருதப்படுகிறது. மேலும் வெள்ளி நகைகள் குறிப்பாக வெள்ளி டாலர்களில் காதல் வாசகங்கள் பொறிக்கப்பட்டிருப்பது மிகவும் ஸ்பெஷலான வாலண்டைன்ஸ் டே கிப்டாக கருதப்படுகிறது. அப்புறமென்ன இந்த கிப்டெல்லாம் கொடுத்து லவ்வ சக்சஸ் பண்ணுங்க.
டாபிக்ஸ்