நயன்தாராவுக்கு முதல்ல தைரியம் இருக்கா? வலைபேச்சு சவாலை எப்படி சமாளிப்பார் லேடி சூப்பர் ஸ்டார்?
நடிகை நயன்தாராவுக்கு தைரியம் இருந்தால் அவரது கடைசி 10 படங்களின் அக்ரிமெண்ட்டை சோசியல் மீடியாவில் வெளியிட முடியுமா என வலைப்பேச்சு குழு கேள்வி எழுப்பியுள்ளது.

நடிகை நயன்தாராவின் ஆவணப்படமான நயன்தாரா: பியாண்ட் தி ஃபேரிடேல் பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் அவரது பிறந்தநாளன்று வெளியானது. இந்த ஆவணப்படத்தின் டீசர் வெளியானதைத் தொடர்ந்து நயன்தாராவிற்கும் தனுஷிற்குமான பிரச்சனை கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரத் தொடங்கியது. பின். அது சோசியல் மீடியா அறிக்கையால் பூகம்பமாக வெடித்தது.
பலரும் இந்த விவகாரத்தில் தங்களுக்கு தெரிந்த விஷயங்களை எல்லாம் கருத்துகளாகத் தெரிவித்து வந்தனர். இதில் பலரும் நயன்தாராவின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்கத் தொடங்கினர். இதனால், நாளுக்கு நாள் நயன்தாராவைப் பற்றி வெளிவரும் வீடியோக்கள் அதிகரிக்கத் தொடங்கின. இதுகுறித்து நயன்தாரா தி ஹாலிவுட் ரிப்போர்ட்க்கு அளித்த பேட்டியில் பேசியிருப்பார்.
லேடி சூப்பர் ஸ்டார் பட்டம்
இதையடுத்து நயன்தாரா விமர்சித்தது வலைப்பேச்சு யூடியூப் சேனலைத் தான் என பலரும் கூறி வந்த நிலையில், அவர்கள் நயன்தாராவிற்கு எதிராக பல விஷயங்களை பேசினர். இந்நிலையில், நயன்தாா தான் நடிக்கும் படங்களில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை தன் அனைத்து படங்களிலும் பயன்படுத்த வேண்டும் என அக்ரிமெண்ட் போடுகிறார்.