Pradeep Ranganathan: டபுள்.. ட்ரிப்பில் என டாப் கியரில் சம்பளம் கேட்கும் பிரதீப்.. அதுக்குள்ளவா? வம்பிழுக்கும் வலைபேச்சு
Pradeep Ranganathan: இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் இனி தான் நடிக்கும் படங்களில் 18 கோடி ரூபாய் முதல் சம்பளம் வாங்க உள்ளதாக கூறினார் என வலைப்பேச்சு குழுவினர் கூறியுள்ளனர்.

Pradeep Ranganathan: சின்ன சின்ன ஷார்ட் பிலிம் மூலம் கவனம் பெற்று பின் கோமாளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அடியெடித்து வைத்தவர் பிரதீப் ரங்கநாதன். இதைத்தொடர்ந்து லவ் டுடே படத்தில் இயக்குநரராக மட்டும் அல்லாமல் தன்னை கதாநாயகனாகவும் அடையாளப்படுத்தி இருப்பார்.
அடுத்தடுத்த படங்களில் பிரதீப்
இவரது வித்தியாசமான உடல் மொழியும், வசன உச்சரிப்பும் மக்கள் மனதில் பட்டென ஒட்டிக் கொள்ள இவரை கதாநாயகனாக வைத்து அடுத்தடுத்த படங்களை இயக்க இயக்குநர்கள் முன்வந்தனர்.
அதன் அடிப்படையில், பிரதீப் ரங்கநாதன் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்திலும், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் படத்திலும் நடித்து ரிலீஸிற்காக காத்திருக்கிறார்.
தள்ளிப்போன டிராகன் ரிலீஸ்
இந்நிலையில், அஸ்வத் மாரிமுத்து இயக்கும் டிராகன் படம் காதலர் தினத்தை ஒட்டி பிப்ரவரி 14ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. ஆனால், தற்போது, நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதால் டிராகன் படக்குழு அதன் ரிலீஸ் தேதியை மாற்றி அறிவித்துள்ளது.
அதன்படி, ஏஜிஎஸ் எண்டெர்டெயின்மென்ட் தயாரிக்கும் டிராகன் படம் பிப்ரவரி 21ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரதீப் ரங்கநாதன் பற்றியும் அவரது பட வேளைகள் பற்றியும் தங்களது யூடியூப் பக்கத்தில் வலைப்பேச்சு குழு பேசியுள்ளது.
தியேட்டர் தர மாட்டாங்க
அதில், "விடாமுயற்சி படம் பிப்ரவரி 6ம் தேதி ரிலீஸ் ஆகுது. அந்தப் படம் இந்தத் தேதியில தான் ரிலீஸ் ஆகும்ன்னு யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டாங்க. குறிப்பா ஏஜிஎஸ் என்டெர்டெயின்மெண்ட். ஏன்னா இவங்க பிரதீப் ரங்கநாதன வச்சு டிராகன்னு ஒரு படம் எடுத்துட்டு இருக்காங்க. இந்த படத்த பிப்ரவரி 14ம் தேதி ரிலீஸ் பண்ணலாம்ன்னு ரொம்ப நாளுக்கு முன்னாடியே அவங்க அறிவிச்சிட்டாங்க. இவங்க அதுக்கான வேலை எல்லாம் செஞ்சிட்டு இருக்கும் போது, திடீர்ன்னு விடாமுயற்சி உள்ள வந்திருக்கு.
பிப்ரவரி 6ம் தேதி விடாமுயற்சி வந்து, அதுக்கு அடுத்த வாரமே டிராகன் படம் ரிலீஸ் ஆனா, அதுக்கான ஸ்கிரீனிங் கிடைக்கா ரொம்ப கஷ்டமாகிடும். அதுவும் இல்லாம விடாமுயற்சி படத்த ரிலீஸ் பண்றது ரெட் ஜெயண்ட் மூவிஸ். அதுனால அவங்க அவ்ளோ சீக்கிரம் தியேடட்ரும் தர மாட்டாங்க.
யூத் எல்லாம் வருவாங்க
இருந்தாலும், டிராகன் படத்தோட தயாரிப்பு நிறுவனம் பரவாயிலல். சொன்ன தேதியிலயே படத்த ரிலீஸ் பண்ணலாம், ஆகுறது ஆகட்டும் அப்புறம் பாத்துகலாம்ன்னு இருந்தாங்க. இதுக்கு காரணம் லவ் டுடே அடைஞ்ச வெற்றி. கோமாளி, லவ் டுடேன்னு அடுத்தடுத்து ரெண்டு படமும் ஹிட் ஆனதால இளைஞர்கள் எல்லாம் பிரதீப் ரங்கநாதன் படத்த பாக்க வருவாங்கன்னு நெனச்சிட்டு இருக்காங்க.
மமிதா பைஜூக்கு ஜோடி
இதுக்கு இடையில பிரதீப் ரங்கநாதனும், மமிதா பைஜூவும் சேர்ந்து ஒரு படம் நடிக்குறாங்க. இந்தப் படத்த கீர்த்தி சோரன் இயக்குராரு. இவரு டைரக்டர் சுதை கொங்கராவோட அசிஸ்டன்ட். இந்தப் படம் முதல் கட்ட படப்பிடிப்ப முடிச்சிருக்கு. இப்போ அடுத்ததா மார்ச் 18ம் தேதி 2ம் கட்ட படப்பிடிப்ப தொடங்க இருக்காங்க. அந்கப் படம் இன்னும் கொஞ்ச நாளுல வேகம் எடுக்கப் போகுது.
18 கோடி சம்பளம்
இதுக்குள்ள பிரதீப் ரங்கநாதனுக்கு சினிமாவுல டிமாண்ட் கூடிட்டே போகுது. இவரத் தேடி படம் எடுதத நிறைய பேர் வர்றாங்களாம். இதுனால பிரதீப் ரங்கநாதன் தன்னோட சம்பளமா 18 கோடி ரூபா கேக்குறாராம். இப்போ தான் ஒரு படம் ரிலிஸாகிருக்கு. அதுக்குள்ளவான்னு எல்லாம் கேள்வி எழுப்புறாங்களாம்" எனப் பேசியுள்ளனர்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்