Valaipechu Bismi: 'மிஷ்கினுக்கு செருப்படி விழும்.. எல்லாம் காரி உமிழ்வாங்க'- கொந்தளித்த பிஸ்மி
Valaipechu Bismi: இயக்குநர் மிஷ்கினின் ஆபாசப் பேச்சுகள் தொடர்ந்தால் அவருக்கு செருப்படி விழுவது நிச்சயம் என்றும் அவர் முகத்தில் அனைவரும் காரி உமிழ்வார்கள் என்றும் வலைப்பேச்சு பிஸ்மி கோவமாக பேசியுள்ளார்.

Valaipechu Bismi: இயக்குநர் மிஷ்கின் பங்கேற்கும் அனைத்து விழாக்களிலும் தொடர்ந்து ஆபாசமாக பேசி வருகிறார் என்ற குற்றச்சாட்டு பல இடங்களில் இருந்தும் வந்த வண்ணமாக இருக்கிறது. இந்நிலையில், வலைப்பேச்சு யூடியூப் சேனலைச் சேர்ந்த பிஸ்மி இயக்குநர் மிஷ்கினை மிகவும் மோசமாக திட்டி பேசி வீடியோ பதிவிட்டுள்ளார்.
மிஷ்கின் அரை வேக்காடு
அந்த வீடியோவில், " டைரக்டர் மிஷ்கின நிறைய பேர் அறிவு ஜீவின்னு நெனச்சிட்டு இருக்காங்க. அதுமட்டுமல்லாம அவர் தமிழின் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவர்ன்னும் நெனச்சிட்டு இருக்காங்க. ஆனால் என்னைப் பொருத்தவரை மிஷ்கன் அறிவு ஜீவியும் இல்ல. மிக முக்கியமான இயக்குநரும் இல்ல. என்னால் மிஷ்கின் ஒரு அரை வேக்காடு என்று அடித்துக் கூற முடியும்.
எல்லாமே தழுவல் படம்
அவர் எடுத்த படங்களைப் பார்த்தாலே தெரியும் இவை அனைத்தும் வெளிநாட்டு படங்களின் சாயல் என்று. அதற்கு பெரிய உதாரணம் மிஷ்கின் இயக்கி நடித்த நந்தலாலா படம். அப்பட்டமான தழுவல் படம் இது. ஆனால் எந்த இடத்திலேயும் இது தழுவல் படம் என குறிப்பிட்டிருக்க மாட்டார். தன் சொந்தப்படம் போல இந்தப் படத்தை விளம்பரப்படுத்தி வந்த இவரின் குட்டு எல்லாம் பின்னர் தான் தெரிய வந்தது.
காரி உமிழ்வார்கள்
மிஷ்கின் பல படங்களை காப்பி அடித்து தான் எடுக்கிறார். இந்த விஷயம் தெரியாத பாமர ரசிகர்கள் இவர் ஏதோ மற்ற இயக்குநர்கள் போல் இல்லாமல் வித்தியாசமாக படம் எடுக்கிறார் என நினைத்துக் கொள்கின்றனர். அதனால் தான் அவரை கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் உண்மை தெரியும் போது மிஷ்கின் முகத்தில் காரி உமிழ்வார்கள். இது நிச்சயம் நடக்கும்.
ஆபாசத்தின் உச்சம்
கேமராவிற்கு பின் மிஷ்கின் எப்படி இருக்கிரார் என எல்லோருக்கும் தெரியும். திரைப்பட விழாக்களில் இவரது பேச்சு ஆபாசம், அருவருப்பின் உச்சமாக உள்ளது. பாட்டல் ராதா பட விழாவில் மிஷ்கின் பேசிய பேச்சு மன்னிக்க முடியாத ஒன்று.
சமீப காலமாக படவிழாக்கள் எல்லாம் செயற்கையாக மாறிவிட்டது. எல்லாரும் படத்திற்கு சென்றுவிட்டு பாசிட்டிவ்வாக மட்டுமே பேசிவருகின்றனர். மிகவும் போலித்தனமான விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர்.
நான் ஒருவேளை பாட்டல் ராதா படவிழாவில் கலந்து கொண்டிருந்தால், நிச்சயம் மிஷ்கினை செருப்பால் அடித்திருப்பேன். அல்லது காரி முகத்திலாவது உமிழ்ந்திருப்பேன். அந்த அளவு கோவம் இருக்கு.
குடிக்கு நியாயம் செய்கிறார்
குடிகாரர்கள் பற்றிய படம் பாட்டில் ராதா. அந்தப் படவிழாவில் பேசிய மிஷ்கின், தன்னை குடிகாரனாக அடையாளப்படுத்தி மற்றவர்களையும் குடிக்க அழைக்கிறார். தான் எப்போதெல்லாம் குடிப்பார் எனக் கூறி நியாயம் செய்கிறார்.
அடுத்ததாக மிக எளிமையாக பல ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தி பேசுகிறார். அதை மேடையில் இருக்கும் மற்ற இயக்குநர்களும் சிரித்து ரசிக்கின்றனர். சமூக பொருப்பு உள்ள இயக்குநர்கள் இப்படி கேள்வி எழுப்பாமல் இருக்கிறார்கள். இதனை பத்திரிகையாளர்கள் கூட கேள்வி எழுப்பாமல் இருப்பது எனக்கு அசிங்கமாக உள்ளது.
நானே செய்வேன்
மிஷ்கின் இதுபோன்ற பேச்சை பாட்டல் ராதா படத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் என்றைக்காவது ஒரு நாள் அவர் மீது செருப்பு விழும். அதை வீசியவன் நானாகக் கூட இருக்கலாம் எனக் கூறியுள்ளார்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்