Seenu Ramasamy: மனிஷா மட்டுமில்ல பிந்து மாதவிக்கும் தொல்லை கொடுத்த சீனு ராமசாமி.. பகீர் விஷயம் சொன்ன பிஸ்மி
சீனு ராமசாமி பல நடிகைகளுக்கு தொல்லை கொடுத்து இருப்பதாக பத்திரிக்கையாளர் பிஸ்மி பேட்டி அளித்து உள்ளார்.

இயக்குநர் சீனு ராமசாமி தொடர்பாக பத்திரிக்கையாளர் பிஸ்மி தனது Valaipechu Voice யூடியூப் சேனலில் புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளார்.
அதில், “நான் சீனு ராமசாமி தொடர்பாக கொடுத்த பேட்டியை யூடியூப் சேனலில் இருந்து நீக்கிவிட்டார்கள். அவர்கள் நீக்கினாலும் நான் இதை பற்றி சொல்லியது அழிக்கப்படமாட்டாது. சமூக வலைத்தளங்களில் அது பரவிட்டது. 100 ஆண்டு கழித்து அதை பார்த்தாலும் அது அழியாது. மக்கள் மனதில் அது பதிந்துவிட்டது.
மனிஷா யாதவ் மட்டுமில்லை அவர் இதே போன்று வேறு சில நடிகைகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்து இருக்கிறார். இந்த விஷயம் எனக்கும் தெரியும், திரையுலகத்திற்கும் தெரியும்.
நீர்ப்பறவை படத்தில் முதலில் பிந்து மாதவி நடித்து இருந்தார். அவருக்கு சீனு ராமசாமியால் பெரும் தொல்லை கொடுக்கப்பட்டது. அதற்குப் பிறகு அவங்க படத்தில் இருந்து வெளியேறினார்.
அதற்குப் பிறகு இன்னொறு நடிகையும் இருக்கிறார். அவர் பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை. திரைத்துறையைவிட்டு அவர் திருமணம், குடும்பம் என செட்டிலாகிவிட்டார்.
ஒரு நடிகையை இதே போல் அலுவலகம் வாங்க, காஸ்டீயுமிற்கு அளவு எடுக்க வேண்டும் எனக் காரணம் சொல்லி அழைத்து அவரை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றிக் கொண்டு மகாபலிபுரம் வரை அழைத்துச் சென்றார். உடனே அந்த பெண் தன் வீட்டாருக்கு மெசேஜ் அனுப்பினார்.
அதற்கு பிறகு அந்த நடிகரின் குடும்பத்தினர், சீனு ராமசாமிக்கே போன் செய்துவிட்டு வந்து அழைத்துச் சென்று இருக்கிறார்.
அதே போல் விருது வாங்க நார்வே சென்ற சீனு ராமசாமி, குடித்துவிட்டு அத்துமீறி நடந்து கொண்டார். இது அங்கு இருந்த மக்களுக்குத் தெரியும் “ என்றார்.
முன்னதாக பத்திரிக்கையாளர் பிஸ்மி குமுதம் யூடியூப் சேனலுக்கு இயக்குநர் சீனு ராமசாமி குறித்து அளித்த பேட்டியில், “ நடிகை மனிஷா யாதவ், இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான இடம் பொருள் ஏவல் படத்தில் நடிப்பதற்காக சென்று இருந்தார். படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடந்தது. அந்த இடத்தில் சீனு ராமசாமி, கடுமையான டார்சர் கொடுத்து இருக்கிறார்.
அதனால் அவரால் ஒரு வாரத்திற்கு மேல் படத்தில் நடிக்க முடியவில்லை. அங்கு இருந்து கிளம்பி வந்துவிட்டார்.
எனக்கு போன் செய்து சீனு ராமசாமி என்ன மாதிரியான பாலியல் தொல்லை கொடுத்தார் என சொன்னார். அந்த வாக்குமூலம் எல்லாம் என்னிடம் இருக்கிறது.
இயக்குநர் சீனு ராமசாமியின் இன்னொரு முகம் என்பது இது தான். அவங்க ஒரு கட்டத்தில் சினிமாவே வேண்டாம் என போய்விட்டார். பல இயக்குநர்கள் அப்படி தான் பண்ணிக் கொண்டு இருக்கிறார்கள் “ என்றார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்