Tamil News  /  Entertainment  /  Valaipechu Anthanan Latest Interview Vivek Insulting K Bhagyaraj In Front Of Kollywood Stars Show

K Bhagyaraj: மேடையில் வைத்து அசிங்கப்படுத்திய விவேக்.. சிவந்து போன பாக்யராஜ் முகம்.. அனலான மேடை!

Kalyani Pandiyan S HT Tamil
Jan 16, 2024 07:51 AM IST

பாக்யராஜ் வேட்டியை தான் ஒழுங்காக மடித்து கட்டாமல் விட்டு விட்டார் என்று சொல்லி, அந்த படத்தின் தோல்வியை குறிப்பிட்டார்

கே.பாக்யராஜ்!
கே.பாக்யராஜ்!

ட்ரெண்டிங் செய்திகள்

அவர் பேசும் போது, “விவேக் ஒரு நடிகராக மட்டுமில்லாமல் தொகுப்பாளராகவும் மக்கள் மனங்களை கொள்ளை கொண்டவர். அவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியானது, அவ்வளவு கலகலப்பாகச் செல்லும். இதனால் சிறப்பு விருந்தினர்களை விட, விருது வாங்கும் கலைஞர்களை விட, அவர் எப்போது பேசுவார் என்ற எதிர்பார்ப்பு இயல்பாகவே அங்கு இருப்பவர்களுக்கு எழும்.

அப்படி அவர் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அப்போது பாக்யராஜின் சரிவு காலம் ஆரம்பமாகி கொண்டிருந்தது. தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து வந்த பாக்யராஜ் வேட்டியை மடித்து கட்டு படத்தில் கடுமையான தோல்வியை சந்தித்து இருந்தார். 

இந்த நிலையில் அந்த நிகழ்ச்சியில், பாக்யராஜை பற்றி மேடையில் தொடர்ந்து புகழ் பாடி வந்த விவேக், திடீரென்று என்ன… பாக்யராஜ் வேட்டியை தான் ஒழுங்காக மடித்து கட்டாமல் விட்டு விட்டார் என்று சொல்லி, அந்த படத்தின் தோல்வியை குறிப்பிட்டார். 

இதைக்கேட்ட பாக்யராஜ் முகமெல்லாம் சிவந்து விட்டது. காரணம் என்னவென்றால், அதுவரை அவர் இவ்வளவு பெரிய ஒரு அவமானத்தை சந்தித்தது இல்லை. அவ்வளவு பெரிய நிகழ்ச்சியில் பல நட்சத்திரங்கள் முன்னிலையில் பாக்யராஜை விவேக் அப்படி சொன்னதை, அவரால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. நிகழ்ச்சி முடிந்த சில நிமிடங்களில் விவேக்கிற்கு தொடர்ந்து போன் கால்கள் வந்து கொண்டே இருந்தார். அதில் விருது நிகழ்ச்சியில் பங்கேற்ற பல பேர் எப்படி நீங்கள் பாக்யராஜ் குறித்து அப்படி ஒரு வார்த்தையை வெளியிடலாம் என்று கேட்டனர். 

இதில் நொந்து போன விவேக் அடுத்த நாளே பாக்யராஜிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார். மேலும் அவர் நான் பேசும்போது ஒரு சுவாரசியத்திற்காகதான், அந்த வார்த்தையை நான் பயன்படுத்தினேன்;அது இவ்ளோ பெரிய பிரளயத்தை ஏற்படுத்தும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை என்று வருந்தினார்” என்று பேசினார் 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.