தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ajithkumar: சாவு வீட்டுக்கு கூட முழுக்கு ஏன்?; அப்பா மகனாக பழகிய அஜித் - ராஜ்கிரண்.. உறவை துண்டித்தது எது தெரியுமா?

Ajithkumar: சாவு வீட்டுக்கு கூட முழுக்கு ஏன்?; அப்பா மகனாக பழகிய அஜித் - ராஜ்கிரண்.. உறவை துண்டித்தது எது தெரியுமா?

Kalyani Pandiyan S HT Tamil
Feb 16, 2024 06:00 AM IST

அவரைப் பார்த்த ரசிகர்கள், ஆர்வக்கோளாறில் அவரை அங்கிருந்து செல்ல முடியாத அளவிற்கு இம்சை கொடுத்தார்கள். அதிலிருந்து அவர் வெளியே பிரபலங்களின் இறப்பிற்கு செல்வது கிடையாது.

ராஜ்கிரண்!
ராஜ்கிரண்!

ட்ரெண்டிங் செய்திகள்

இது குறித்து அவர் பேசும் போது, “மனோரமா இறப்புக்குப் பிறகுதான் அஜித் இனி துக்க நிகழ்வுகளுக்கு செல்ல வேண்டாம் என்ற முடிவை எடுத்ததாக தெரிகிறது. காரணம் என்னவென்றால், மனோரமா இறப்பிற்கு மூட்டில் கெட்டுப் போட்டுக் கொண்டு அஜித் வந்தார்.

அவரைப் பார்த்த ரசிகர்கள், ஆர்வக்கோளாறில் அவரை அங்கிருந்து செல்ல முடியாத அளவிற்கு இம்சை கொடுத்தார்கள். அதிலிருந்து அவர் வெளியே பிரபலங்களின் இறப்பிற்கு செல்வது கிடையாது. 

அஜித் கேரக்டரை பற்றி இன்னொரு உண்மையை உங்களுக்குச் சொல்கிறேன். அஜித்தும் ராஜ்கிரணும் மிகவும் நெருங்கி பழகிக் கொண்டிருந்த காலம் அது. ராஜ்கிரண் குணத்தை பார்த்த அஜித் அவரோடு பழகி, ஒரு கட்டத்தில் அவரை அப்பாவாகவே பார்த்துக்கொண்டார். 

பொதுவாக அஜித்திற்கு எல்லோருடைய வீடுகளுக்கும் சென்று அவர்களுடன் பழகுவது பிடிக்காது. ஆனால் அவருக்கு மிகவும் நெருங்கிய நண்பர்கள் வீட்டிற்கு உரிமையோடு சென்று அரட்டை அடித்து விட்டு வருவார். 

அந்த பட்டியலில்தான் ராஜ்கிரணையும் வைத்திருந்தார் அஜித். திடீரென்று ராஜ்கிரணை பார்க்க வேண்டும் என்று தோன்றினால், அஜித் நேராக ராஜ்கிரண் இருக்கும் படப்பிடிப்பிற்கே சென்று விடுவார். அப்படித்தான் அவர்களது உறவு சென்று கொண்டிருந்தது. 

அப்படியான ஒரு சந்திப்பில் ராஜ்கிரண் அஜித்திடம் கோரிக்கை ஒன்றை வைத்தார். ராஜ்கிரண் அப்போது தனது முந்தைய படங்களுக்கு வாங்கி கடன்களுக்கு வட்டிக் கட்டிக்கொண்டிருந்தார். இதனையடுத்து அஜித் போன்ற ஒரு ஹீரோ தனக்கு படம் செய்து கொடுத்தால் அந்த கடன்களில் இருந்து தான் தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைத்த அவர் தனக்கு ஒரு படம் செய்து கொடுக்கும்படி அஜித்திடம் கேட்டார். அவ்வளவுதான்  

ராஜ் கிரணின் தொடர்பை அப்படியே துண்டித்து விட்டார் அஜித்.  அஜித்தை பொருத்தவரை தன்னிடம் நெருக்கமானவர்கள் தனியிடமிருந்து எதையும் எதிர்பார்க்கக் கூடாது என்று நினைப்பார். ஆனால் இந்த காலத்தில் அது சாத்தியம் இல்லை” என்று பேசினார். 

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்