தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Valaipechu Anthanan Latest Interview About Why Is Dhanush Supporting Vetrimaaran, Mariselvaraj Dalit Cinema Tamil News

Dhanush: வெற்றி, மாரி கொடுத்த வெட்கை.. தலித் சினிமாவை தாங்கிப்பிடிக்கும் தனுஷ்? - மாற்றத்திற்கான பின்னணி என்ன?

Kalyani Pandiyan S HT Tamil
Jan 26, 2024 04:30 AM IST

ஒரு முறை தனுஷிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது அந்த கேள்வி என்னவென்றால், செல்போனை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பது! அதற்கு பதில் அளித்த தனுஷ் செல்போன் ஒரு காலத் திருடன் என்று சொன்னார்.

தனுஷின் மாற்றம்!
தனுஷின் மாற்றம்!

ட்ரெண்டிங் செய்திகள்

அந்த பேட்டியில், “நடிகர் தனுஷ் ஆரம்பத்தில் இருந்ததற்கு தற்போது அதிகமாக மாறி இருக்கிறார். வாழ்க்கையில் வளர்ச்சியானது அடுத்தடுத்த கட்டத்திற்கு செல்லும் பொழுது. இது நடப்பது என்பது மிகவும் இயல்பானது தான். தனுஷ் தற்போது நிறைய புத்தகங்களை படிக்கிறார். தொடர்ந்து புத்தகங்களை படிப்பதற்காக அதனை  குவித்துக் கொண்டிருக்கிறார். 

முன்பெல்லாம் ஓய்வு கிடைத்தால் ஊர் சுற்றும் தனுஷ், தற்போது சிறிது நேரம் கிடைத்தால் கூட புத்தகத்தில் நேரத்தை செலவிடுகிறார். ஒரு முறை தனுஷிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது அந்த கேள்வி என்னவென்றால், செல்போனை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பது! அதற்கு பதில் அளித்த தனுஷ் செல்போன் ஒரு காலத் திருடன் என்று சொன்னார்.

தனுஷின் இந்த மாறுதலுக்கு காரணம் அவருடைய சேர்க்கை தான். வெற்றிமாறன் மாரி செல்வராஜ் உள்ளிட்ட அறிவாளிகளோடு தனுஷ் பழகும் பொழுது, அவருக்கு இந்த மாதிரியான எண்ணங்கள் தானாகவே உள்ளுற வந்து ஒட்டிக் கொள்கின்றன. அதுவே இந்த மாற்றத்திற்கு காரணம் ஆகும்” என்று பேசினார். 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.