பாலா போட்ட பாலம்;ஒரு பக்கம் வைத்து தைக்கப்பட்ட கண்; சரத்குமார் வன்மம்; ஒட்டிக்கொண்ட அந்த பழக்கம்! - விஷால் என்ன ஆனார்?
ஒரு கட்டத்தில் அது மிகவும் கொடூரமான ஒற்றைத் தலைவலியாக மாறியது; இதை மறப்பதற்காக அவர் சில பழக்கங்களுக்கு அடிமையானார்; அதுதான் அவரை இன்று இந்தக்கட்டத்தில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது.
மதகதராஜா பட விழாவில் விஷால் கை நடுக்கத்துடன், உடல் நலக்குறைவுடன் பேசினார். இது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், அது குறித்து வலைப்பேச்சு அந்தணன் தன்னுடைய யூடியூப்பில் பேசி இருக்கிறார்.
காரணம் பாலா
இது குறித்து அவர் பேசும் போது, ‘ விஷாலின் இந்த நிலைமைக்கு மிக முக்கிய காரணம் இயக்குநர் பாலா. பாலா என்ன சொன்னாலும் செய்வோம் என்று ஹீரோக்கள் சொன்ன காலம் உண்டு. காரணம், அவர் படத்தில் நடித்தால், திரைத்துறையில் மிகப்பெரிய திருப்பு முனை கிடைக்கும் என்று பலரின் நினைப்பாக இருந்தது.
அந்த சமயத்தில்தான் அவன் இவன் படத்தில் பாலாவுடன் இணைந்தார் நடிகர் விஷால்; அந்த படத்தில் அவர் மாற்றுத்திறனாளியாக மாறுகண் வைத்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
ஆனால், உண்மையில் அவர் அப்படி வைத்து நடிக்கவில்லை. அவரது கண் ஒரு பக்கமாக வைத்து தைக்கப்பட்டது; அதற்கு மருத்துவப் பெயர்களெல்லாம் சொல்கிறார்கள்; அது குறித்து நமக்கு எதுவும் தெரியவில்லை.
பாலா சொன்ன தகவல்
அண்மையில் பாலா கொடுத்த பேட்டியில், டப்பிங்கின் போது விஷால் பேப்பரை கையில் எடுத்தாலே அவரது கண் மாறு கண்ணாக மாறிவிடும் என்றார். அந்த அளவிற்கு விஷால் அந்த கேரக்டரிலேயே பல ஆண்டுக்கணக்கில் ஊறிக்கிடந்தார்.
இது அவருக்கு பின்னாளில் ஒற்றைத் தலைவலியைக் கொடுத்து விட்டது. ஒரு கட்டத்தில் அது மிகவும் கொடூரமான ஒற்றைத் தலைவலியாக மாறியது; இதை மறப்பதற்காக அவர் சில பழக்கங்களுக்கு அடிமையானார்; அதுதான் அவரை இன்று இந்தக்கட்டத்தில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது. இரண்டாவது காரணம், நந்தா மற்றும் ரமணா என இரு நண்பர்கள். இந்த இருவர் விஷால் வாழ்க்கையில் நுழைந்த பின்னர், வேறு யாரும் விஷாலை நெருங்காமல் பார்த்துக்கொண்டார்கள். இது விஷாலை தவறான முடிவுகளை எடுக்க வைத்தது.
அப்பா - சரத்குமார் மோதல்
நடிகர் சங்கத்தில் விஷால் வந்ததிற்கு பின்னாலும் ஒரு காரணம் இருக்கிறது. ஆம், சரத்குமாரை வைத்து விஷாலின் அப்பா பல படங்களை தயாரித்திருந்தார். அப்போது சரத்குமாருக்கும், அவருக்கும் இடையே பல பிரச்சினைகள் வந்தன.அந்த பிரச்சினைகளை விஷால் சிறு வயது முதலே பார்த்துக் கொண்டே இருந்திருக்கிறார். அதற்கு பழி வாங்கும் பொருட்டே நடிகர் சங்கத் தேர்தலில் களமிறங்கி, சரத்குமாரையும் ராதா ரவியையும் அங்கிருந்து அவர் விரட்டி அடித்தார். நடிகர் சங்கத்தில் அவர் அந்த பொறுப்பை அடைவதற்கு மிக முக்கியமான காரணம் ரித்திஷ்.
ஆனால் அவரை மறந்து நம்பிக்கைத் துரோகியாக விஷால் மாறினார். இதற்கிடையே லைகா நிறுவனத்தோடு அவருக்கும் மோதல் நடந்தது. அவ்வளவு பெரிய நிறுவனம் அவரிடம் வந்த போது கூட அவர் அதனை சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. அவர்களுக்கு எதிராக இவர் நீதிமன்றம் வரைக்கும் சென்றார். இந்த விவகாரம் கோலிவுட்டில் விஷாலுக்கு யாரும் பணம் கொடுக்காத நிலைக்கு அவரை கொண்டு வந்து விட்டு விட்டது.
நடிகர் சங்க பொறுப்புகளும் அவ்வளவு லேசானது கிடையாது. தினமும் அங்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் வரும்; அதை இவர் தீர்த்து வைக்க வேண்டும். இந்த நெருக்கடிகள் அனைத்தும் அவரை காலி செய்து விட்டது’ என்று பேசினார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்