Rajinikanth TRajendar: பொய் சொன்ன ரஜினி தரப்பு; டென்ஷனான ராஜேந்தர்! - 4 முறை அடித்த போன்கால்! - அசால்ட் சம்பவம்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Rajinikanth Trajendar: பொய் சொன்ன ரஜினி தரப்பு; டென்ஷனான ராஜேந்தர்! - 4 முறை அடித்த போன்கால்! - அசால்ட் சம்பவம்!

Rajinikanth TRajendar: பொய் சொன்ன ரஜினி தரப்பு; டென்ஷனான ராஜேந்தர்! - 4 முறை அடித்த போன்கால்! - அசால்ட் சம்பவம்!

Kalyani Pandiyan S HT Tamil
Apr 15, 2024 05:20 AM IST

கொஞ்ச நேரத்தில் ஒரு போன் கால் வந்தது. அந்த போன் காலில் பேசியவர், நாங்கள் ஏவிஎம் நிறுவனத்தில் இருந்து பேசுகிறோம் சரவணன் சார் உங்களிடம் பேச வேண்டுமாம் என்று சொன்னார்.

வலைப்பேச்சு அந்தணன்!
வலைப்பேச்சு அந்தணன்!

இது குறித்து தன்னுடைய யூடியூப் சேனலில் பேசி இருக்கும் அவர், “ நான் அப்போது டி ஆர் ராஜேந்திரிடம் வேலை செய்து கொண்டிருந்தேன். அப்போது அவர் டெரர் பீஸாக இருந்தார். இப்போது காமெடி பீஸாக மாறிவிட்டார். அன்று டிஆர் என்று சொன்னாலே, அனைவருக்கும் தெறி பேச்சு தான் நினைவுக்கு வரும். குறிப்பாக அரசியல் வட்டாரங்களில் அவருக்கு முக்கியத்துவமும், மரியாதையும் அதிகம் இருந்தது.

அந்த சமயத்தில் ரஜினிகாந்துக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதாகவும், அவர் படப்பிடிப்பில் இருந்து அப்படியே வீட்டிற்கு வந்து விட்டதாகவும் செய்திகள் வந்து கொண்டிருந்தன. 

இதையடுத்து அவரது உடல் நலம் குறித்து விசாரிப்பதற்காக, டி ஆர் ராஜேந்தர் அப்போது எங்களுடன் இருந்த வி கே சுந்தரை அழைத்து, ரஜினிக்கு போன் போடு என்று சொன்னார். 

இதனையடுத்து போன் டைரக்ட்ரியைப் பார்த்து ரஜினிக்கு போன் செய்தார் சுந்தர். கால் சென்றது; எதிர் முனையில் ஒருவர் போனை எடுத்தார். 

ராஜேந்தர் ரஜினியுடன் பேச விருப்பப்படுகிறார் என்று சொன்னார்

அப்போது அவரிடம் வி கே சுந்தர், நாங்கள் டி ராஜேந்தர் வீட்டிலிருந்து பேசுகிறோம். ராஜேந்தர் ரஜினியுடன் பேச விருப்பப்படுகிறார் என்று சொன்னார். இதனைக் கேட்ட அவர், நீங்கள் போனை வையுங்கள். உங்களை திருப்பி அழைக்கிறோம் என்று சொன்னார். அவர் அப்படி சொன்னதற்கு ஒரு காரணம் இருக்கிறது.

அதாவது, போன் டைரக்டரியிலிருந்து ரஜினி வீட்டின் நம்பரை எடுக்கும் ரசிகர்கள் பலர், இன்னார் வீட்டில் இருந்து பேசுகிறோம் என்று பொய் கூறி, ரஜினியிடம் போன் சென்ற உடன், நான் உங்கள் ரசிகன் பேசுகிறேன் என்று சொல்லி, நலம் விசாரிப்பர். இதனை தவிர்ப்பதற்காகவே அந்த ஏற்பாடு. 

டென்ஷன் ஆன ராஜேந்தர்

கொஞ்ச நேரத்தில் ஒரு போன் கால் வந்தது. அந்த போன் காலில் பேசியவர், நாங்கள் ஏவிஎம் நிறுவனத்தில் இருந்து பேசுகிறோம் சரவணன் சார் உங்களிடம் பேச வேண்டுமாம் என்று சொன்னார். இதனையடுத்து பதறிப்போன ராஜேந்தர் போனை வாங்க, மறுமுனையில் போன் ரஜினியின் கைக்கு சென்றது. ஆம், அந்த போன் கால் ரஜினி வீட்டில் இருந்து வந்ததுதான். 

ராஜேந்தர் சார் சொல்லுங்கள் என்று கேட்டவுடன்,  எதிர்முனையில் இருந்த ரஜினி சொல்லுங்கள் ராஜேந்தர் என்று கேட்டார். இதைக் கேட்ட டி ராஜேந்திருக்கு டென்ஷன் ஆகிவிட்டது. இப்படியெல்லாம் செய்யக்கூடாது ரஜினி என்று சொல்லி, பயங்கரமாக கத்தி, போனை வைத்து விட்டார். 

அதன் பின்னர் கிட்டத்தட்ட நான்கு முறை ரஜினி தரப்பில் இருந்து அழைப்பு வந்தது. பின்னர் மனம் இறங்கி எடுத்த ராஜேந்தர், நலம் விசாரிக்க, இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள்.” என்று பேசினார். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.