Rajinikanth: ‘மன்சூர் தப்புனா ரஜினி பேசியதும் தவறு - ’ பிஸ்மி காட்டம்
மன்சூர் அலிகானை கேள்வி கேட்கும் நபர்கள் தமன்னாவை பற்றி ரஜினி பேசியதை ஏன் யாரும் கேள்வி கேட்கவில்லை என பிஸ்மி கேள்வி எழுப்பி உள்ளார்.
நடிகை த்ரிஷாவை பற்றி ஆபாசமாக பேசிய நடிகர் மன்சூர் அலிகானுக்கு எதிராக திரையுலகை சேர்ந்த பலரும் குரல்கள் எழுப்பி வருகிறார்கள்.
ட்ரெண்டிங் செய்திகள்
இது தொடர்பாக சினிமா விமர்சகர் பிஸ்மி சினி உலகம் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்து உள்ளார்.
அதில், “ ஜெயிலர், பட விழாவில் கிட்டத்தட்ட மன்சூர் அலிகான் பேசிய சாயலில் ரஜினிகாந்த்தும் பேசி இருந்தார். தமன்னாவை பற்றி அவர் பேசியதை ஏன் யாரும் கேள்வி கேட்கவில்லை.
தமன்னா ஜெய்லர் படத்தில் நடிக்கிறாங்க அதனால நான் ஆர்வமா வந்தேன். ஆனா கடைசியில என்ன அவங்க கூட ஆடவே விடல என்ன ரஜினிகாந்த் பேசியது இசை செயலின் வெளிப்பாடு.
அது ரஜினிகாந்த் ஆக இருந்தால் என்ன மன்சூர் அலிகான் ஆக இருந்தால் என்ன உங்க மனசுக்குள்ள இந்த மாதிரி பெண்கள் குறித்து கேவலமான எண்ணம் இருக்கிறது என வெளிப்படுத்தும் குணம் தான் அது. அதனால் இது போன்ற பேச்சுகளை யாரும் எந்த காலத்திலும் பேசக்கூடாது " என்றார்.
இந்த விவகாரம் தொடர்பாக த்ரிஷா தனது சமூக வலைதளத்தில், ”சமீபத்தில் மன்சூர் அலிகான் என்னைப் பற்றி கேவலமாகவும், பாலியல் ரீதியாகவும் பேசிய ஒரு வீடியோவை பார்த்தேன். இதை நான் கடுமையாக கண்டிக்கிறேன்.
மேலும் இது பாலியல் அவமரியாதை, மோசமான ரசனையானாக பார்க்கிறேன். அவர் ஆசைப்படலாம் ஆனால் நான் அவரைப் போன்ற ஒருவருடன் என் நடிப்பை பகிர்ந்து கொள்ளாதது நினைத்து நிம்மதியடைகிறேன்.
மேலும் எனது திரையுலக வாழ்க்கை முழுவதும் அவருடன் சேர்ந்து நடிக்கமாட்டேன். ஒரு படம் தான் நடித்தோம், இனியும் சேர்ந்து நடிக்க போவது கிடையாது. பார்த்துக் கொள்கிறேன். இவரைப் போன்றவர்கள் மனித குலத்திற்கு கெட்ட பெயரை ஏற்படுத்துகிறார்கள் “ என தனது ட்விட்டர் தளத்தில் குறிப்பிட்டு உள்ளார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்