Dhanush Vs Simbu: ஐஸ்வர்யா - தனுஷ் விவாகரத்து.. ஸ்கெட்ச் போட்டாரா சிம்பு? - பிரபலம் சொன்ன பகீர் தகவல்!
எல்லாருக்கும் கடந்த காலம் என்ற ஒன்று நிச்சயமாக உண்டு. அந்த கடந்த காலத்தை நாம் தற்போது வெறிகொண்டு கிளறுவது அசிங்கம்.
ஐஸ்வர்யா, தனுஷ் விவாகரத்து குறித்து பத்திரிகையாளர் அந்தணன் பேசி இருக்கிறார்.
ஐஸ்வர்யா, தனுஷ் ஆகியோர் விவாகரத்திற்கு மனுதாக்கல் செய்திருக்கும் நிலையில், இந்த விவாகாரத்திற்கு பலவிதமான காரணங்கள் சொல்லப்படுகின்றன.
இந்த நிலையில் இந்த விவகாரத்திற்கு சிம்புவும் ஒரு காரணம் என்று சோசியல் மீடியாவில் பலரும் தான்தோன்றித்தனமாக பேசி வருகிறார்கள்.
இந்த நிலையில், இது குறித்தான விளக்கத்தை நியூஸ் கிளிட்ஸ் தமிழ் சேனலுக்கு பிரபல பத்திரிக்கையாளரான வலைப்பேச்சு அந்தணன் கொடுத்து இருக்கிறார்.
இது குறித்து அவர் பேசும் பொழுது, “ஐஸ்வர்யா தற்போது தாயாக மாறிவிட்டார். இரண்டு குழந்தைகளுக்கு அம்மா என்ற நிலையை அடைந்து விட்டார்.
எல்லாருக்கும் கடந்த காலம் என்ற ஒன்று நிச்சயமாக உண்டு. அந்த கடந்த காலத்தை நாம் தற்போது வெறிகொண்டு கிளறுவது அசிங்கம்.
ஐஸ்வர்யாவிற்கும், சிலம்பரசனுக்கும் இடையேயான காதல், டீன் ஏஜில் வந்தது. ஆனால், வயது முதிர்ச்சி அடையும் பொழுது, அவர்களுக்கு எது சரி, எது தவறு என்பது தெரியவரும்.
சினிமா துறையில், எத்தனையோ பேருக்கு காதல் திருமணம் நடந்திருக்கிறது. ஆனால் பின்னாளில், அவர்கள் அதை விடுத்து, வேறொரு வாழ்க்கையை வாழ்ந்து இருக்கிறார்கள். சிலர் மீண்டும் இணைந்து இருக்கிறார்கள்.
ஒரு விஷயத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். சினிமாவை பொருத்தவரை, நீங்கள் காதலை அவ்வளவு பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ள முடியாது.
ஆகையால், அவரது முன்னாள் காதலை பிடித்துக் கொண்டு, நீங்கள் ஏன் அவரை விட்டு வந்தீர்கள் என்றெல்லாம் கேள்வி கேட்டுக் கொண்டிருக்க முடியாது. உண்மையைச் சொல்லவேண்டும் என்றால், வெளியே இருப்பவர்களின் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்கள், சினிமாவில் இருப்பவர்கள் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை விட அதிகம்.
சிம்பு முன்பு போல் கிடையாது. இன்று இருக்கக்கூடிய அறிவும், பக்குவமும் அன்று அவருக்கு கிடையாது. இப்போது நீங்கள் சிம்புவுடன் பேசினீர்கள் என்றால், மிகவும் தத்துவார்த்தமாக பேசுவார். எனக்குத் தெரிந்து, பழி வாங்குகிற எண்ணமெல்லாம், சிம்புவுக்கு கிடையவே கிடையாது.
அப்படி அவர் நினைத்திருந்தால் ஹன்சிகாவை எப்போதோ பழிவாங்கியிருக்கலாம். அவருக்கு கிட்டத்தட்ட அப்போதே ஆறு முதல் ஏழு கோடி வரை செலவு செய்தார்.
வாங்கிய சம்பள பணத்தையெல்லாம், ஹன்சிகாவிற்கே செலவு செய்தார். அந்த காதல் முறிந்த பிறகு, எங்கேயாவது ஒரு இடத்தில் அவர் ஹன்சிகாவை பற்றி தவறாக பேசியிருக்கிறாரா? சொல்லுங்கள். பேசியதே கிடையாது.
நயன்தாராவை அவர் எங்கேயாவது தவறாக பேசியிருக்கிறாரா ? பேசியது கிடையாது. அன்று அவர் எதையும் ஒரு புரிந்து கொள்ளாத வயதில் இருந்தார். அதனால்தான் அவர் அப்படி நடந்து கொண்டார்” என்று பேசினார்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பேட்டியில் பேசிய நபரின் தனிப்பட்ட கருத்துக்கள் ஆகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இந்த தகவல்களுக்கும் ஹிந்துஸ்தான் தமிழ் இணையதளத்திற்கும் சம்பந்தம் கிடையாது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன: