தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Dhanush Aishwarya: ‘சிச்சுவேஷன்ஷிப்’ பெயரில் விவாகரத்து ஏற்பாடு; சொத்தை பிரிக்க வேண்டாம் என்ற தனுஷ்! - பகீர் தகவல்கள்!

Dhanush Aishwarya: ‘சிச்சுவேஷன்ஷிப்’ பெயரில் விவாகரத்து ஏற்பாடு; சொத்தை பிரிக்க வேண்டாம் என்ற தனுஷ்! - பகீர் தகவல்கள்!

Kalyani Pandiyan S HT Tamil
Apr 14, 2024 08:41 AM IST

அது நடந்த பொழுது, கோலிவுட்டின் பெரும்பான்மையான பிரபலங்கள், தனுஷை மிகவும் பொறாமையுடனும், எரிச்சலுடனுமே பார்த்தார்கள். ஆனால் தனுஷின் சில நலம் விரும்பிகள், பையன் சரியான இடத்திற்கு தான் சென்றிருக்கிறார் என்று நினைத்தார்கள்.

தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து!
தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து!

ட்ரெண்டிங் செய்திகள்

அவர் பேசும் போது, “தனுஷின் அப்பா கஸ்தூரிராஜா ஒரு இயக்குனநராக இருந்த போதும், அந்த காலகட்டத்தில் அவரால் வீட்டு வாடகை கூட கட்ட முடியாத நிலையே இருந்தது. தனுஷின் சிறு வயது காலங்கள் அனைத்துமே வறுமையாலும், கஷ்டத்தாலும் நகர்ந்தவையே. 

அப்படி ஒரு சூழ்நிலையில் இருந்து நடிகர் தனுஷ் படிப்படியாக வளர்ந்து, ஒரு நடிகராக மாறி, ரஜினிகாந்தின் வீட்டிற்கு மருமகனாக மாறுவது என்பது கதைகளில்தான்  நடக்கும். ஆனால் அது நிஜத்தில் நடந்தது. 

அது நடந்த பொழுது, கோலிவுட்டின் பெரும்பான்மையான பிரபலங்கள், தனுஷை மிகவும் பொறாமையுடனும், எரிச்சலுடனுமே பார்த்தார்கள். ஆனால் தனுஷின் சில நலம் விரும்பிகள், பையன் சரியான இடத்திற்கு தான் சென்றிருக்கிறார் என்று நினைத்தார்கள்.

இப்படி இருந்த தனுஷ், இன்று இப்படி ஒரு விவாகரத்து முடிவை எடுத்து இருக்கிறார் என்றால், அதன் பின்னால் இருப்பது என்ன என்பதை நான் சில பேரிடம் விசாரித்தேன். அப்படி விசாரிக்கும் பொழுது நான் கேட்ட தகவல்கள் அனைத்தும் எனக்கு பேரதிர்ச்சியை தந்தன. ஆம், இந்த விவாகரத்தே ஒரு ஏற்பாடு என்று சொல்கிறார்கள். நேற்று வரை கூட, ஐஸ்வர்யாவும் தனுஷும் போனிலும், வாட்ஸ் அப்பிலும் நன்றாக தான் பேசிக் கொண்டிருக்கிறார்களாம்.

தனுஷ் தான் வாங்கி இருக்கும் பல கோடி சொத்துக்களை மனைவி ஐஸ்வர்யாவின் பெயரில் இணைத்து தான் வாங்கி இருக்கிறாராம். ஆனாலும், அது அப்படியே இருக்கட்டும் என்று கூறிவிட்டாராம். இப்போது 2கே கிட்ஸ் மத்தியில், சிச்சுவேஷன் சிப் என்ற ஒரு ரிலேஷன்ஷிப் பரவலாக பேசப்பட்டு வருகிறது; அதாவது தன்னுடன் பயணிக்கு நபர், தன்னுடன் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் பயணிக்கலாம். 

தன்னிடம் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் சுதந்திரம் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் ஒரு முறை பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டால், உடனே விலகி விட வேண்டும். தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்தும் இந்த சிச்சுவேஷன்ஷிப் என்ற பெயரிலேயே நடந்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதை தனுஷின் நெருக்கமான வட்டாரங்கள் என்னிடம் தெரிவித்தனர். அவர்களுடைய குழந்தைகளும் இருதரப்பு வீட்டாருக்கும் சகஜம் போல சென்று வருகிறார்களாம். அந்த மகன்களுக்கு அம்மாவும் அப்பாவும் பிரிந்து விட்டார்கள் என்ற ஒரு நினைப்பே வரவில்லையாம். அந்த அளவுக்கு அவர்கள் இயல்பாக நடந்து கொள்கிறார்களாம்” என்று பேசினார். 

தனுஷ் காதல் கதை

அறிமுகமான புதிதில் அடுத்தடுத்து இரு படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட். ஹீரோவுக்கான எந்த தோற்றமும் இல்லாத தனுஷ் மீது எல்லாருடைய பார்வையும் கொஞ்சம் வித்தியாசமாக தான் விழுந்தது. அப்படி தான், ரஜினி மகள் ஐஸ்வர்யா பார்வையும் விழுந்தது.

தனுஷின் சகோதரியும், ஐஸ்வர்யாவும் தோழிகள். அவரை சந்திக்க அடிக்கடி வரும் போது தனுஷ் மீது ஐஸ்வர்யாவின் விழுந்தது. எடுத்த எடுப்பிலேயே டாப் கியர் போட்டுக் கொண்டிருந்த தனுஷின் திறமை மீது ஐஸ்வர்யாவுக்கு அபிப்ராயம்.

தன்னை விட மூத்த பெண், அதிலும் தன்னுடைய சகோதரியின் தோழி, அவரை எப்படி காதலிப்பது என்கிற தயக்கம் தனுஷிற்கு. எதற்குள் இருவரைப் பற்றியும் கிசுகிசுக்கள். ஆனால் ஆரம்பத்தில் அனைத்தையும் மறுத்தார் தனுஷ்.

ரஜினி அப்போது, உச்சத்தில் இருந்த காலகட்டம். தன்னுடைய மகளுக்கு கஸ்தூரி ராஜா மகன் கணவரா? என்கிற தயக்கம் அவருக்கும் இல்லாமல் இல்லை. முடிந்தவரை எதிர்ப்பு தெரிவித்தும், ஐஸ்வர்யா உறுதியாக இருந்தார். வேறு வழியின்றி இருவீட்டாரும் அவர்களின் திருமணத்திற்கு முன்வந்தனர்.

2004 நவம்பர் 18 ம் தேதி, தன்னுடைய 23வது வயதில் தன்னை விட மூத்த வயதுடைய ஐஸ்வர்யாவை மனைவியாக்கினார் தனுஷ். அதன் பின் 18 ஆண்டுகள் எந்த பிரச்சினையும் இல்லாமல் மகிழ்வோடு வாழ்ந்த அவர்கள், அதன் பின் பிரிந்த கதை அனைவரும் அறிந்ததே!

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்