Vadivukarasi: ‘ஒரே இரவில் மொத்தமாக விழுந்த குடும்பம்.. பாத்ரூம் கிளீன் பண்ணுவீங்களான்னு கேட்டாங்க’ -வடிவுக்கரசி பேட்டி
Vadivukarasi: என்னுடைய பெரியப்பா ஒரு வயதிற்கு மேல் பெண் பிள்ளைகள் தியேட்டருக்கு சென்று படம் பார்க்க கூடாது என்பதற்காக, வீட்டிலேயே ஒரு மினி தியேட்டரை கொண்டு வர திட்டமிட்டார். அதற்காக 16 எம் எம் ப்ரொஜெக்டரை வைத்து, திரையில் படம் போடுவார். - வடிவுக்கரசி பேட்டி

Vadivukarasi: வடிவுக்கரசி தான் தன்னுடைய வாழ்க்கையில் பட்ட கஷ்டங்களை, அண்மையில் இந்தியா கிளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.
பாலமாக இருந்த பெரியப்பா
அந்த பேட்டியில் அவர் பேசும் போது, ‘பெரியப்பாவிற்கு கூட்டுக்குடும்பமாக வாழ்வது என்றால் அவ்வளவு இஷ்டம். எங்களுக்கு பள்ளி விடுமுறை வரும் போதெல்லாம், எங்களை வீட்டிற்கு கூட்டி செல்ல காரில் வந்து விடுவார். கிட்டத்தட்ட ஒரு மாதம் பெரியப்பா வீட்டில்தான் இருப்போம். எங்களது குடும்பம் ராணிப்பேட்டையில் இருந்தது. அங்கு என்னுடைய அப்பா, ஒரு தோட்டத்தை வைத்து, வருமானம் ஈட்டிக்கொண்டிருந்தார்.
இதைப்பார்த்த பெரியப்பா தன்னிடம் தோட்டம் இருக்கிறது. அதைப்பார்த்துக்கொள் என்று கூறி,குடும்பமாக நீங்கள் இங்கே வந்து விடுங்கள். உங்களை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறிவிட்டார். இதையடுத்து நாங்கள் எங்களிடம் இருந்த சொத்துக்களை விற்றுவிட்டு பெரியப்பா வீட்டிற்கு சென்றோம்.
ஒழுக்கமாக இருக்க வேண்டும்
பெரியப்பா, வீட்டுப்பெண்கள் மிகவும் கட்டுக்கோப்பாக, ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர். நாங்கள் பள்ளிக்குச் செல்லும் பொழுது கூட, நெற்றியில் பட்டை அணிந்து தான் செல்ல வேண்டும் என்று கூறுவார். ஆனால், பள்ளியின் வாசல் வரை செல்லும் அப்படி செல்லும் நாங்கள், அங்கு நின்று அதை அழித்து விட்டு உள்ளே செல்வோம்.
என்னுடைய பெரியப்பா ஒரு வயதிற்கு மேல் பெண் பிள்ளைகள் தியேட்டருக்கு சென்று படம் பார்க்க கூடாது என்பதற்காக, வீட்டிலேயே ஒரு மினி தியேட்டரை கொண்டு வர திட்டமிட்டார். அதற்காக 16 எம் எம் ப்ரொஜெக்டரை வைத்து, திரையில் படம் போடுவார். அதன் பின்னர் நல்ல சௌகரியமாக படங்களை பார்த்து ரசிக்க வேண்டும் என்பதற்காக ஏபிஎன் தியேட்டரைக் கட்டினார்.
ஒரே இரவில் எல்லாம் முடிந்து விட்டது.
தீபாவளி பொங்கலுக்கு பெரியப்பா வீட்டில் துணிகள் எடுக்கப்பட்டிருக்கும். எங்களுக்கு எடுப்பது போல அவரிடம் வேலை பார்க்கும் கடைநிலை ஊழியரின் குடும்பம் உட்பட அனைவருக்கும் துணிகள் எடுக்கப்படும்.
அங்கே மாணிக்கம் என்ற ஒரு டெய்லர் இருப்பார். அவர்தான் ஒவ்வொரு குடும்பத்திற்காக துணிகள் தைத்துக்கொடுப்பார். இந்த நிலையில்தான் திடீரென்று, என்னுடைய பெரியப்பாவிற்கு படத்தயாரிப்பில் நஷ்டம் ஏற்பட்டு விட்டது. ஒரே இரவில் ஒன்றுமில்லாத குடும்பமாக மாறிவிட்டோம்.
இதனால் கூட்டுக் குடும்பமாக இருந்த எங்களுக்குள், அந்தந்த குடும்பங்கள் அவரவர்களது தேவைகளை பூர்த்தி செய்ய வேலைகளை செய்து கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டு விட்டது.
‘கண்மணி பூங்கா’ கொடுத்த வாய்ப்பு
இந்த நிலையில் நான் தஞ்சை வாணன் சாரிடம் சென்று வேலைக்கேட்டேன். அவர் பாடல் கோரஸில் சேர்த்து விட்டார். அதன் பின்னர் அந்த சம்பளம் பத்தாமல், தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ‘கண்மணி பூங்கா’வில் கதை சொல்லியாக வேலை பார்த்தேன். இதற்கிடையில் கன்னிமாரா ஹோட்டலில் ஆள் எடுப்பதாக தகவல் கிடைத்தது. அங்கும் சென்றேன்.
ஆனால், இம்முறை என்னுடைய அக்காவையும் அழைத்துச் சென்றேன்; காரணம் இரண்டு பேரும் வேலை செய்தால், குடும்பத்திற்கு இன்னும் உதவியாக இருக்கும் என்று நினைத்தேன். அங்கு சென்ற போது, அவர்கள் என்னிடம் திடீரென்று பாத்ரூம் க்ளீன் செய்ய ஆட்கள் வரவில்லை என்றால், நீங்கள் என்ன செய்வீர்கள் என்று கேட்ட பொழுது, நானே அதை செய்து விடுவேன் அதில் எனக்கு ஒன்னும் தரக்குறைவு கிடையாது என்று கூறினேன்.
இந்த நிலையில் எனக்கு வேலை கொடுக்க அவர்கள் சம்மதித்தார்கள். ஆனால் இதே கேள்வியை அக்காவிடம் கேட்ட போது, அவளுக்கு பதில் கூறத்தெரியவில்லை. இதனால் அவளுக்கு வேலை கிடைக்கவில்லை. இதற்கிடையே கண்மணி பூங்காவில் என்னைப்பார்த்த பாரதிராஜா சார், என்னை அவரது படத்தில் நடிக்க வைத்தார். அப்படியே என்னுடைய சினிமா பயணம் அடுத்தக்கட்டத்திற்கு சென்றது’ என்று அதில் (இந்தியா கிளிட்ஸ்) யூடியூப் சேனலுக்கு பேசினார்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்