"கமல் சாரால வாயில துண்ட கவ்வ கொடுத்து அழுதேன்.. என் வாழ்க்கையில விளையாடிட்டாரு" வடிவேலு ஷேரிங்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  "கமல் சாரால வாயில துண்ட கவ்வ கொடுத்து அழுதேன்.. என் வாழ்க்கையில விளையாடிட்டாரு" வடிவேலு ஷேரிங்

"கமல் சாரால வாயில துண்ட கவ்வ கொடுத்து அழுதேன்.. என் வாழ்க்கையில விளையாடிட்டாரு" வடிவேலு ஷேரிங்

Malavica Natarajan HT Tamil
Dec 10, 2024 11:00 AM IST

நடிகர் கமல் ஹாசனுடனான தனது சினிமா அனுபவங்களையும், அவர் இந்த அளவு முன்னேற கொடுத்த உழைப்பு பற்றியும் நடிகர் வடிவேலு பேசி உள்ளார்.

"கமல் சாரால வாயில துண்ட கவ்வ கொடுத்து அழுதேன்.. என் வாழ்க்கையில விளையாடிட்டாரு" வடிவேலு ஷேரிங்
"கமல் சாரால வாயில துண்ட கவ்வ கொடுத்து அழுதேன்.. என் வாழ்க்கையில விளையாடிட்டாரு" வடிவேலு ஷேரிங்

கமல் அட்வைஸ்

தேவர் மகன் படத்துல சிவாஜி ஐயா இறக்கப் போறாரு. அப்போ என்ன கமல் சார் கூப்டாரு. வடிவேல் இது அப்பா டெத் ஆகுற சீன். நீங்களும் சங்கிலி முருகன் சாரும் தான் கணக்கு பிள்ளைங்க. உங்களுக்கு ஏற்கனவே கை வேற இல்ல. அதுனால என்ன பண்றிங்க நல்லா அழுதுடுங்கன்னு சொல்றாரு. இதக் கேட்ட நான் இப்ப பாருங்க சார் எல்லாரையும் ஓவர் டேக் பண்றேன். இல்லன்னா என் பேர மாத்திக்குறேன்னு சொல்றேன்.

ஒரே அழுகை

சிவாஜி சார் இறந்து போய் படுத்து கிடக்குறாரு. அவரு கால் மாட்டுல இருக்க நானும் சங்கிலி முருகனும் ஐயா, ஐயா, ஐயா.. இனிமே உங்கள எங்க பாப்போம்... உங்களுக்கு காலைல காப்பி எல்லாம் குடுப்பனே ஐயா.. ஐயாான்னு அழுறோம்.

இப்போ எனக்கும் சங்கிலி முருகனுக்கும் போட்டி. யாரு அதிகமா அழுறாருன்னு. அவரு கத்த நான் கத்த.. நான் கத்த அவரு கத்தன்னு போயிட்டு இருக்கு. அந்த சமயத்துல கமல் சார் அப்படியே அங்க இருந்து வர்றாரு. அப்பான்னு அப்படியே கதறுறாரு. அவருக்கு சமமா நாங்களும் கத்தி கதறி அழுகுறோம்.

நீங்க என்ன ரெட்ட புள்ளையா?

இந்த சீன் இப்படியே போயிட்டு இருக்கும் போது, திடீர்ன்னு படுத்துட்டு இருந்த சிவாஜி ஐயா அப்படியே எழுந்து உக்காந்துட்டாரு. ச்சீ முதல்ல எந்திரிங்கடா.. என்னடா பண்ணிட்டு இருக்கீங்க.. அவன்தான்டா எனக்கு மகன்.. நீங்க என்னடான்னா எனக்கு ரெட்டப் புள்ள மாதிரி அழுதுட்டு இருக்கீங்கன்னு திட்டுறாரு.

நான் அப்படியே கமல் சார பாக்குறேன். அவரு எதுவும் பேசாதன்னு தலைய ஆட்டுறாரு. அப்புறம் கமல் சாரே எங்ககிட்ட வந்து லைட்டா அழனும் சரியா அப்டின்னு சொல்லிட்டு கமல் சார் மண்டைய சொறியுறாரு.

வாயில துண்ட கவ்வ கொடுத்துட்டாரு

ஆனா சிவாஜி சார் எங்கள விடல. என்கிட்ட சிவாஜி சார் அந்த துண்ட எடுத்து வாயில வையுடான்னு சொன்னாரு. அப்புறம் ஒரு கையு வேற இல்ல இதுல கதறிக் கதறி அழுக வேறன்னு திட்டிட்டு துண்ட உள்ள ஃபுல்லா திணிடான்னு கத்துறாரு.

எனக்காவது பரவாயில்ல துண்டு. சங்கிலி முருகனுக்கு வேட்டி. சங்கிலி முருகன் என்கிட்ட துண்டு இல்லன்னு சொன்னதும் வேட்டி அவுத்து வாயில வையிடான்னு சொல்றாரு. சத்தம் வந்ததுன்னா ரெண்டு பேரையும் கொன்னு புடுவேன்னு சொல்லிட்டாரு.

ஒரு புள்ள தான்டா எனக்கு படத்துல. 3 புள்ளையவா பெத்து வச்சிருக்கேன்னு கேக்குறாரு. நாங்க ரெண்டு பேரும் கெடச்ச ஒரு வாய்ப்பும் போச்சேன்னு யோசிச்சிட்டு இருக்கும் போது, ரெண்டு பேரையும் பின்னாடி போகச் சொன்னாரு. அவரு கட்டில தாண்டி உக்கார வச்சுட்டாரு.

எங்கள அப்படியே தூக்கிட்டாரு

அப்புறம் டேக் போகலாம்ன்னு சொன்ன சிவாஜி சார், கேமரா மேன் ஸ்ரீதர் சார்கிட்ட எங்க ரெண்டு பேரையும் பாத்துட்டு ஒரு ரியாக்ஷன் கொடுத்தாரு. அதுக்கு அர்த்தம் அப்போ எங்களுக்கு புரியல, படம் ரிலீஸ் ஆனதுக்கு அப்புறம் பாத்தா தான் தெரியுது அந்த சீன்ல நாங்க ரெண்டு பேருமே இல்ல, அந்த சீன்ல கமல் சார் நடிப்புல பிச்சி உதறிட்டாரு. கலைத் தாய்க்கு சிவாஜி சார் முதல் பிள்ளைன்னா, கமல் சார் இளைய பிள்ளை. நடிப்புல ரெண்டு பேரும் பிச்சு உதருறாங்க.

முத்தம் கொடுத்தாரு

நாங்க ரெண்டு பேரும் இருந்தா சீனையே கெடுத்துருவாங்கன்னு எங்கள தூக்க சொல்லிட்டாரு. நாங்க ரெண்டு பேரும் நடிக்கத் தெரியாம போயி, சம்பந்தமே இல்லாம நடிச்சு சீன கெடுக்கப் பாத்தோம். ஆனா, பின்னாடி சிவாஜி சார் என்னோட மதுர தமிழுக்கு பாராட்டினாரு. அப்புறம் கமல் சார் என்ன அறிமுகம் பண்ணி வச்ச உடனே, கன்னத்துல முத்தம் எல்லாம் குடுத்தாரு.

நீ வெறும் காமெடியன் மட்டுமில்ல நிறைய கேரக்டரும் பண்ணுவன்னு வாழ்த்துனாரு என தன் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.