தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Vadivelu: 'He Is Not A Human Being..' Benjamin Grilled Vadivelu

Vadivelu: 'ஹி இஸ் நாட் எ ஹியூமன் பீயிங்..' வடிவேலுவை வறுத்து எடுத்த பெஞ்சமின்

Pandeeswari Gurusamy HT Tamil
Jan 10, 2024 11:02 AM IST

போண்டாமணி அண்ணன் ஆகட்டும் , நான் ஆகட்டும் சரி நாங்கள் வெளியே வந்ததற்கு காரணமே வைகைப்புயல் வடிவேலுசார் தான். அப்போர்பட்ட நல்ல நடிகன். பிறவிக்கலைஞன் என்றால் அது வைகைபுயல் வடிவேல்தான். ஆனால் ஹி இஸ் நாட் எ ஹியூமன் பீயிங்..என நகைச்சுவை நடிகர் பெஞ்சமின் வறுத்தெடுத்துள்ளார்.

'ஹி இஸ் நாட் எ ஹியூமன் பீயிங்..' வடிவேலுவை வறுத்து எடுத்த பெஞ்சமின்
'ஹி இஸ் நாட் எ ஹியூமன் பீயிங்..' வடிவேலுவை வறுத்து எடுத்த பெஞ்சமின்

ட்ரெண்டிங் செய்திகள்

போண்டா மணி யார் கிட்டயுமே எங்களுக்கு உதவி பண்ணுங்க அப்படின்னு நிக்கமாட்டாரு. யார்கிட்டயும் போய் காசு கேட்கமாட்டான் மனுஷன்.

அவன் தா குடுத்துட்டு போவான். போண்டாமணிதான் எல்லாருக்கும் குடுத்துட்டு போவார். அப்படி குடுத்து குடுத்து பழகுன மனுஷன். ஏன்னா சிவகங்கையில் கோடீஸ்வரனா வாழ்ந்தவன்.

இங்க வந்து சினிமா ஆசைல வந்து சாப்பாட்டுக்கு காசு இல்லாம போண்டா வாங்கி சாப்பிட்டுக்கிட்டு இருப்பார்.

சாப்புட்டுக்கிட்டு இருப்போம். சாப்புட்டுகிட்டு இருக்க தட்ட புடுங்கி அடிப்பாங்க. யார்றா நீங்கல்லாம். அப்படின்னுவாங்க இந்த மாதிரி வடிவேலு சார் கூட நடிக்க வந்திருக்கோம் என்றால் ஒரு ஆள்தான் நடிக்க போறீங்க 6 பேர் வந்திருக்கீங்கன்னு கேட்பாங்கன்னுங்க. அதுக்கு இல்ல அவர் ஸ்பாட்டுக்கு வந்துதான யார் கூட நடிக்குறேன்னு சொல்லுவார்னு சொன்னா.. அப்ப ஒரு ஆளுக்கு தான் சோறு குடுக்க முடியும் இத்தன பேருக்கும் சோறு குடுக்க முடிமான்னு தட்ட புடுங்கிட்டு போயிடுவாங்க பாதி சாப்பிட்டுகிட்டு இருக்கப்பட்ட தட்ட புடுங்கிட்டு போயிருவாங்க என்று தன் வேதனையை பகிர்ந்து கொண்டார்.

இதுக்கு வடிவேலு சார் குரல் கொடுத்ததில்லையா என்ற கேள்விக்கு, இல்ல அவர் தனியா கேரவன்ல உட்காந்து சாப்பிடுவார். எங்கள எங்கயாவது மரத்தடியிலேயோ, ரோட்டுலயோ , தனியா உட்கார வச்சு போடுவாங்க சோறு நாங்க ஒன்றும் விஐபி இல்லயே என்றார்.

வடிவேலுக்கு லட்சக்கணக்கில் சம்பளம் கிடைத்தும் ஏன் உங்களுக்கு கம்மியாக கிடைக்கும் போதும்ன்னு ஏன் எல்லாரும் ஒத்துக்கிட்டு நடிச்சாங்க என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு நாங்கள் ஒன்றும் ரஜினியோ, விஜய்யோ அஜித்தோ கிடையாது. நாங்க யார்னே வெளி உலகத்துக்கு தெரியாது. சரி நாங்க எங்கள அடையாளப்படுத்தி கொள்வதற்காக இப்படி ஒரு வாய்ப்பை பயன்படுத்தி கொண்டோம். சம்பளம் வருதோ இல்லையோ.. நம்ம 4 பேருக்கு வெளிய தெரியணு.. நம்ம காமெடி 4 பேர் மத்தில பேசப்படணும்.. அப்படின்றதுக்காக போய் நடிச்சோமே யொழிய யாரும் காசு பணத்த வச்சுகிட்டு நடிக்க சான்ஸ் கேட்டு வரல.. 4 நாள் தொடர்ந்து சூட்டிங் போனா எங்க வீட்டில கறிக்குழம்பு சாப்பாடு சார். 4 நாள் தொடர்ந்து சூட்டிங் இல்லனா நாங்க பசி பட்டினி தான் சார். இதுதான் சார் எங்க கலைஞர்களோடா வாழ்கை.. என்றார்.

ஒரு வருடத்திற்கு நாங்க 50 படம் நடிக்குறோ.. ஒரு வருசத்திற்கு இரண்டு படம், 3 படம், மிஞ்சி போனா 4 படம் அதுல ஒரு சீன் நடிக்குறோம். ஒரு சீன்கு 500 ரூபா கொடுப்பாங்க அப்ப இரண்டாயிரம் கிடைக்கும். இந்த இரண்டாயிரத்துலா ஒரு வருசத்திற்கு சாப்பிட முடியுமா என்று வருத்தத்துடன் தெரிவித்தார். சில இடங்களில் ஒரு சீன் 500 ரூபாய்க்கு நடிச்சுட்டு அந்த காச வாங்க ஒரு மாசம் அலையுவோம் சார். ஒரு புரெடியூசர்ட நடிச்சுட்டு சம்பளம் கேட்டுகுறேன். ஏய்யா உன்ன வந்து 15 ஆயிரம் ரூபா பிலிம்போட்டு, இத்தன பேர் லைட் பிடிச்சு, 10 லட்சம் கேமரா கொண்டு வந்து வச்சு உன்ன படம் எடுக்குறோம். நீ வந்து என்ன சம்பளம் கேட்குற.. நீதான்யா குடுத்துட்டு போகணுன்னு லா சொன்னாங்க..

விஜயகாந்த் பற்றிய கேள்விக்கு பதில் அளிக்கையில், விஜயகாந்த் அரசியலில் இருந்த போது அவர் யாரையும் அரசியலில் பிரச்சாரத்திற்கு கூப்பிட மாட்டார். அவர்ட இருக்கும் நடிகர்கள் அது தானா சேர்ந்த கூட்டம் அது. யாரையும் வஞ்சு பேச மாட்டார். யாரையும் திட்டி கேவலபடுத்தமாட்டார். நடிகர் சங்கம் மூலமா செஞ்சது கம்மிதான். அவர் சொந்த பணத்த அப்படி அள்ளி அள்ளி கொடுப்பார். அவர தேடி போறவங்கள வாப்பா போய் சாப்பிடு.. சாப்பிட்ட வச்சுட்டு வாப்பா உனக்கு என்ன குறை, என்ன வேணு, பொண்ணுக்கு கல்யாணமா இந்தான்னு ஒரு லட்ச ரூபாய் எடுத்து கொடுப்பார். அதுக்கப்பறம் தென்னிந்திய நடிகர் சங்கம் மூலமா 20 இல்ல 30 ஆயிரம் வரை கமிட்டில பேசி வாங்கி கொடுப்பார்.

போண்டாமணி அதிமுகல நட்சத்திர பேச்சாளர்ல. அவரோட கடைசி பிறந்தநாள் அப்ப வீட்டுக்கு கூட்டிட்டு போயி 50 ஆயிரம் கொடுத்து போண்டா கவலப்படாத கிட்னி கிடைச்சுரும்னு சைகைலயே சொன்னாராம்.

அப்படி நல்ல மனிதர்கள் எல்லாம் இருந்தாங்க..

ஏழைகளுக்கு செய்யுற உதவி இறைவன்கு செய்றமாதின்னு பெரியவங்க சொல்வாங்க.. அதனால் விஜய்யின் மனிதாபிமானத்தை மதிக்குறேன். இன்னைக்கு இத்தனை பேருக்கு உதவி பண்றார்னா.. அவரை கடவுளாக நான் பார்க்கிறேன் என்று பெஞ்சமின் தெரிவித்தார்.

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.