Top Cinema News: விஜய், அஜித் குறித்து வடிவேலு நச் பதில்.. ஜிம்மில் நடிகைக்கு காயம் - இன்றைய டாப் சினிமா செய்திகள்
Top Cinema News Today: விஜய், அஜித் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு வடிவேலு தனது ஸ்டைலில் நச் பதில் அளித்துள்ளார். ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொண்ட நடிகை ராஷ்மிகாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது உள்பட இன்றைய டாப் சினிமா செய்திகளை பார்க்கலாம்.
இந்த ஆண்டுக்கான பொங்கல் ரிலீஸ் படங்களில் முதல் கட்டமாக கேம் சேஞ்சர், வணங்கான், மெட்ராஸ்காரன் ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன. இதில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கேம் சேஞ்சர், வணங்கான் படங்களுக்கு நேர்மறையான விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன.
அடுத்தடுத்த நாள்கள் பொங்கல் ரிலீஸ் படங்கள் வெளியாக இருக்கும் நிலையில், இன்றைய டாப் சினிமா செய்திகளை பார்க்கலாம்.
அதர்வா பட டீஸரை வெளியிட்ட தனுஷ்
அதர்வா, நிமிஷா சஜயன் உள்பட பலர் நடித்து க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் படம் டிஎன்ஏ. மான்ஸ்டர், ஃபர்ஹானா படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கியிருக்கும் இந்த படத்தின் டீஸரை தனுஷ் வெளியிட்டுள்ளார். டிஎன்ஏ படத்தின் படத்தின் டீஸர் ரசிகர்களை கவர்ந்து வரவேற்பை பெற்று வருகிறது.
அஜித், விஜய் குறித்த கேள்விக்கு நச் பதிலளித்த வடிவேலு
மதுரை பீபீ குளம் பகுதியிலுள்ள வருமான வரித்துறை ரெக்ரேஷன் கிளப் சார்பில், வருமானவரித் துறை அலுவலகத்தில் பொங்கல் விழா நடந்தது. இதில் சிறப்பு விருந்தனராக பங்கேற்ற நடிகர் வடிவேலுவிடம் விஜய் அரசியல் பயணம், அஜித் ரேஸ் பயணம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு தனது ஸ்டைலில் வேறு எதாவது பேசலாமா என ஒற்றை வரியில் பதில் சொல்லி கடந்து சென்றார்.
பாக்ஸ் ஆபிஸில் சொதப்பிய த்ரிஷா படம்
த்ரிஷா முதல் முறையாக மலையாளத்தில் நடித்து வெளியாகியிருக்கும் படம் ஐடெண்டிட்டி. கடந்த வாரம் வெளியான இந்த படம் விமர்சக ரீதியாக பாராட்டை பெற்றாலும் பாக்ஸ ஆபிஸில் வசூலை குவிக்காமல் போயுள்ளது. இதுவரை படம் மொத்தமாக ரூ. 4 கோடி வரை இந்தியாவில் வசூலித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
தொழில்நுட்ப் பிரச்னைகள் நீக்கப்பட்ட பாடல்
கேம் சேஞ்சர் படத்தில் இன்ஃப்ராரெட் கேமரா தொழில்நுட்பத்தில் படமாக்கப்பட்ட Lyraanaa என்ற பாடல் நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. "இந்த பாடலை தொழில்நுட்ப காரணத்தினால் நீக்கிவிட்டோம். இன்ஃப்ரா ரெட் காட்சிகளை சேர்க்கும் போது தொழில்நுட்ப சிக்கல் ஏற்பட்டது. மீண்டும் அப்பாடலைச் சேர்க்க பணிபுரிந்து வருகிறோம். ஜனவரி 14-ம் தேதி முதல் அப்பாடல் படத்தில் இணைக்கப்படும்" என படக்குழுவினர்கள் தெரிவித்துள்ளனர்.
காதல் சுகுமார் மீது மோசடி புகார்
திருமணம் செய்து கொள்கிறேன் என கூற தனியாக குடித்தனம் நடத்திவிட்டு, நகை மற்றும் பணத்தை வாங்கி ஏமாற்றியதாக நடிகர் காதல் சுகுமார் மீது துணை நடிகை ஒருவர் மோசடி புகார் அளித்துள்ளார்
ஜிம் பயிற்சியின் போது காயமடைந்த ராஷ்மிகா
ஜிம்மில் பயிற்சி மேற்கொண்டபோது காயமடைந்துள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனா. இதன் காரணமாக அவர் நடித்து வந்த சிக்கந்தர் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ராஷ்மிகா விரைவில் குணமடையை வேண்டும் என அவரது ரசிகர்கள் பிராத்திப்பதாக தெரிவித்து வருகின்றனர்.
விஜய் இல்லாமல் நடைபெற்ற தவெக மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்
தளபதி 69 பட ஷூட்டிங்கில் தளபதி விஜய் பிஸியாக இருந்து வரும் நிலையில், தவெக மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தற்காலிக பொறுப்பாளர்கள் கூட்டம் பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. புஸ்ஸி ஆனந்துடன் இணைக்கமாக இல்லாத மூன்று மாவட்ட நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை
அக்டோபர் வரை படம் நடிக்கப்போவதில்லை - அஜித்
துபாயில் சர்வதேச ரேஸில் பங்கேற்று வரும் நடிகர் அஜித்குமார், ரேஸ் சீசன் முடியும் வரை அதில் மட்டும் கவனம் செலுத்தபோவதாகவும், அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை திரைப்படங்களில் நடிக்க முடிவு செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கிடையே அவர் நடித்து முடித்திருக்கும் விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக உள்ளன
ஆபாச விடியோ பரப்புவதாக மலையாள நடிகை மாலா புகார்
தனது விடியோவை மார்பிங் செய்து ஆபாச விடியோ வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலையாள நடிகை மாலா பார்வதி புகார் தெரிவித்துள்ளார். "என்னப்பற்றஇ சமூக வலைத்தளத்தில் அவதூறு கருத்துகள் பதிவிடுகின்றனர். யூடியூப்பிலும் நான் நடிதத் படங்களில் இருந்து புகைப்பட எடிட் செய்து மோசமாக பயன்படுத்தி விடியோக்கள் வெளியிடுகிறார்கள், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
பத்திரிகையாளரை தாக்கிய விவகாரம் - இழப்பீடு தர தயார் என மோகன் பாபு வாதம்
தனியார் தொலைக்காட்சி நிருபரை தாக்கிய விவகாரத்தில் ஏற்கனவே வருத்தம் தெரிவித்த தெலுங்கு நடிகர் மோகன் பாபு மீது பாதிக்கப்பட்ட நிருபர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக அவர் கைது செய்யப்படலாம் என கருதி தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் மோகன் பாபு தரப்பில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மோகன் பாபு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.