Vadivelu: "அவ்வளவு தான்!" விஜய்யின் அரசியல் கட்சி குறித்து வடிவேலு தந்த வித்தியாச பதில்
தளபதி விஜய்யின் கட்சி குறித்த கேள்விக்கு வடிவேலு ஷாக் தரும் விதமான பதிலை தந்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் பிரபல காமெடி நடிகர் வடிவேலு இன்று மாலை சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து அங்கு வந்திருந்த நிருபர்களிடம் வடிவேலு கூறியதாவது:
"அம்மா தவறி ஒரு வருஷம் ஆகுது. இப்போது அவரது திதி சம்பிரதாயத்தை செய்யவும், மோட்ச் விளக்கு போடவும் கோயிலுக்கு வந்துள்ளேன். உலகப் புகழ் பெற்ற ராமேஸ்வரத்தில் மோட்ச தீபத்தை சாத்துகிறேன்" என்று கூறினார்.
தொடர்ந்து அவரிடம், விஜய் புதிய அரசியல் கட்சி தொடங்கியிருப்பது குறித்து கேட்டபோது, "அவ்வளவு தான். வாங்க. இங்கிட்டுன்னு" தனது ஸ்டைலில் பதிலை சொல்லிவிட்டு கிளம்பினார்.
இந்த கேள்வியை தவிர்க்கும் விதமாக வடிவேலுவின் பதில் அமைந்திருந்தப்பதாக கருத்துகள் பகிரப்பட்டு வருகிறது.
முன்னதாக, ராமநாத சுவாமி மற்றும் பர்வத வர்த்தினி அம்பாளை தரிசனம் மேற்கொண்டார் வடிவேலு. அவர் அங்கு வந்திருப்பதை அறிந்த பக்தர்கள், சுற்றுலா பயணிகள் பலரும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்