Vadakkan: மலையாள படத்திற்கு மேலும் ஒரு அங்கீகாரம்.. பிரஸ்ஸல்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் இடம் பெற்ற வடக்கன்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vadakkan: மலையாள படத்திற்கு மேலும் ஒரு அங்கீகாரம்.. பிரஸ்ஸல்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் இடம் பெற்ற வடக்கன்

Vadakkan: மலையாள படத்திற்கு மேலும் ஒரு அங்கீகாரம்.. பிரஸ்ஸல்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் இடம் பெற்ற வடக்கன்

Aarthi Balaji HT Tamil
Apr 18, 2024 11:12 AM IST

வடக்கன் படம் சர்வதேசப் பிராஜெக்ட்ஸ் ஷோகேஸ் ஆப்ஸில் இடம் பெற்ற முதல் மலையாளத் திரைப்படம் என்ற பெருமை பெற்று உள்ளது.

வடக்கன்
வடக்கன்

பிரஸ்ஸல்ஸ் சர்வதேச திரைப்பட விழா

இந்நிலையில் வடக்கன் படம் சர்வதேசப் பிராஜெக்ட்ஸ்  ஷோகேஸ் ஆப்ஸில் இடம் பெற்ற முதல் மலையாளத் திரைப்படம் என்ற பெருமை பெற்று உள்ளது. பிரஸ்ஸல்ஸ் சர்வதேச திரைப்பட விழா ( BIFFF ) என்பது FIAPF இன்டர்நேஷனல் ஃபெடரேஷன் ஆஃப் ஃபிலிம் தயாரிப்பாளர்கள் சங்கத்தால் மிகவும் மதிக்கப்படும் மற்றும் அங்கீகாரம் பெற்ற திரைப்பட விழா ஆகும்.

கேன்ஸ் திரைப்பட விழா மற்றும் லோகார்னோ சர்வதேச திரைப்பட விழா ஆகியவற்றிற்கு அடுத்தபடியாக கூடுதல் அங்கீகாரம் பெற்ற திரைப்பட விழா இது ஆகும். 

பல ஆண்டுகளாக பீட்டர் ஜாக்சன், டெர்ரி கில்லியம், வில்லியம் ஃப்ரீட்கின், பார்க் சான்-வூக், கில்லர்மோ டெல் டோரோ போன்ற புகழ்பெற்ற பிரபலங்களை பிரஸ்ஸல்ஸ் சர்வதேச திரைப்பட விழா கவுரவித்து உள்ளது. இதுபோன்ற உலகப்புகழ் பெற்ற ஒரு அரங்கில் வடக்கன் படம் இடம் பெற்று இருப்பது இந்த படத்தில் பணியாற்றி உள்ள படைப்பாளர்களுக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை அளித்துள்ளது.

ஆஃப்பீட் மீடியா குழுமத்தின் துணை நிறுவனமான ஆஃப்பீட் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் கீழ் வடக்கன் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. பண்டைய வட மலபார் நாட்டுப்புறக் கதைகளின் புதிரான கதைகளை ஒன்றாக இணைத்து, இயற்கைக்கு அப்பாற்பட்ட த்ரில்லராக படம் உருவாகி உள்ளது. 

இயக்குநர் ராகுல் சதாசிவன்

இந்த படம் குறித்து பேசிய பிரம்மயுகம் மற்றும் பூதகாலம் போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் ராகுல் சதாசிவன், “ வடக்கன் படம் பெற்றுள்ள சர்வதேச அங்கீகாரம் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அமானுஷ்ய மற்றும் திரில்லர் படங்களுக்காக கிடைத்துள்ள இந்த அங்கீகாரம் மலையாள சினிமாவில் இருப்பதற்கு பெருமை சேர்த்து உள்ளது. இது மலையாள சினிமாவின் பன்முகத்தன்மை மற்றும் படைப்பாற்றலை மீண்டும் உறுதிப்படுத்துகிறது" என்று கூறினார்.

ஆஃப்பீட் மீடியா குழுமத்தின் நிறுவனர் & தயாரிப்பாளர், ஜெய்தீப் சிங் பேசும் போது, "வடக்கன் படம் உலகத் தரம் வாய்ந்த நடிகர்கள் & பட குழுவினரால் எடுக்கப்பட்டுள்ளது. ஹைப்பர்லோகல் கதைகளை உலகளவில் எடுத்து சென்று இந்திய சினிமாவை மறுவரையறை செய்வதே எங்கள் நோக்கம் ஆகும். இது வெறும் அமானுஷ்ய த்ரில்லர் படம் மட்டுமில்லை. உலகம் முழுவதும் உள்ள நமது கலாச்சாரத் தை எடுத்து கூறும் ஒரு படமாக இருக்கும்" என்று கூறினார். 

கேன்ஸ் திரைப்பட விழா

பலதரப்பட்ட ரசிகர்களை சென்றடைவதற்கான ஒருங்கிணைந்த முயற்சியாக, வடக்கன் படம் இந்த ஆண்டுக்கான கேன்ஸ் திரைப்பட விழாவில் இடம் பெறவுள்ளது. மேலும் வடக்கன் படம் கன்னடம், தமிழ் மற்றும் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது, மேலும் மற்ற பிராந்திய மொழிகளிலும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.