Vadakkan Movie Postponed: சென்சாரை கடுப்பேற்றிய வடக்கன் என்ற தலைப்பு! படக்குழு முக்கிய அறிவிப்பு
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vadakkan Movie Postponed: சென்சாரை கடுப்பேற்றிய வடக்கன் என்ற தலைப்பு! படக்குழு முக்கிய அறிவிப்பு

Vadakkan Movie Postponed: சென்சாரை கடுப்பேற்றிய வடக்கன் என்ற தலைப்பு! படக்குழு முக்கிய அறிவிப்பு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published May 22, 2024 08:50 AM IST

Vadakkan Movie Postponed: வடக்கன் தலைப்புக்கு சென்சார் போர்டு அனுமதி அளிக்காத காரணத்தால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது. இதுதொடர்பாக வடக்கன் படக்குழு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்சாரை கடுப்பேற்றிய வடக்கன் என்ற தலைப்பு, தள்ளிப்போகு பட ரிலீஸ்
சென்சாரை கடுப்பேற்றிய வடக்கன் என்ற தலைப்பு, தள்ளிப்போகு பட ரிலீஸ்

இதையடுத்து சென்சார் போர்டு எதிர்ப்பு காரணமாக சொன்ன தேதிக்கு திரையிட முடியாது என படக்குழு அறிவித்துள்ளது.

வடக்கன் தலைப்புக்கு எதிர்ப்பு

இந்த படம் சென்சார் பெறுவதற்காக தணிக்கை அதிகாரிகளிடம் திரையிட்டு காண்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் என சென்சார் அதிகாரிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இதைதத்தொடர்ந்து படக்குழுவினர் வடக்கு என தலைப்பை மாற்றி அனுமதி கோரியுள்ளதாக தெரிகிறது. ஆனால் அதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதனால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போவதுடன், புதிய தலைப்பு மாற்றப்பட்டு வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வடக்கன் பட தயாரிப்பாளர் வெடியப்பன் முனிசாமி தனது சமூக வலைத்தள பக்கத்தில், " வரும் வெள்ளிக்கிழமை (24/05/24) அன்று திரைக்கு வர இருந்த `வடக்கன்’ திரைப்பட ரிலீஸ் தள்ளிப் போகிறது. வடக்கன் என்கிற தலைப்பை சென்சார் போர்ட் அனுமதிக்க மறுத்ததின் காரணமாக திரைப்படத்தை திட்டமிட்ட தேதியில் வெளியிட இயலவில்லை. படத்தின் தலைப்பு மாற்றப்பட்டு. வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

வரவேற்பை பெற்ற டீசர்

திரையுலகினர் மத்தியில் எதிர்பார்க்கப்பட்ட படமாக இருந்து வந்த வடக்கன் படத்தின் டீசர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது. படத்தின் டீசர் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

இத்தனைக்கும் படத்தில் அறியும் முகங்கள் யாரும் நடித்திருக்கவில்லை. குங்குமராஜ், வைரமாலா, ரமேஷ் வைத்யா, பர்வேஸ் மெஹ்ரூ, சமிரா பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். படத்துக்கு இசை - எஸ்.ஜே.ஜனனி. ஒளிப்பதிவு - தேனி ஈஸ்வர். டிஸ்கவரி சினிமாஸ் படத்தை தயாரித்துள்ளது.

வட மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தலைதூக்கி வருவதால் பாதிக்கப்படும் உள்ளூர்வாசிகள் இருவர் அவர்களை மீது தங்களது வஞ்சத்தை தீர்த்து கொள்ளும் விதமாக வடக்கன் படத்தின் கதை இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு தேனி மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் படமாக்கப்பட்டுள்ளது. வட புதுபட்டி, அல்லிநகரம், ஊஞ்சாம் பட்டி, அன்னன்ஜி போன்ற பகுதிகளில் படம் படமாக்கப்பட்டுள்ளது.

வெறுப்பு வசனங்கள்

படத்தின் டீசர் காட்சியில் எங்க பார்த்தாலும் வடக்கனுங்க வேலைக்கு வந்து நிக்குறாங்க, வடக்கனுங்கள எல்லாரையும் அடிச்சு பத்துவோம், வடக்கன் நாயே, உன்ன கொல்லாம விட மாட்டேன், பிழைக்க வரவன் இந்த ஊரு வடையை திங்க மாட்டானா போன்ற வட மாநிலத்தவரையும், வட மாநில தொழிலர்கள் மீது வெறுப்பை உமிழ்கும் விதமாக வசனங்களுடன் படத்தின் டீசர் காட்சிகள் இடம்பிடித்துள்ளன.

இருப்பினும் இந்த படத்தின் திரைக்கதை வடக்கில் இருந்து பிழைப்புக்காக இங்கு வரும் தொழிலாளர்களிடம் மனிதநேயத்தை வெளிக்காட்டுவதை போதிக்கும் விதமாக அமைந்திருக்கும் என கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் வசிக்கும் வட இந்தியர்கள் பற்றிய படம்

இடம் பெயர்வு என்பது மனித வரலாற்றில் முக்கியமான விஷயமாக உள்ளது. வாழ்க்கை தேவைகள் இருக்கும் வரை இதை தவிர்க்க முடியாது. ஆதிகாலத்தில் இருந்து இது தொடர்கிறது.

வேலை கொடுப்பவர்கள் இருக்கும் வரை இந்த இடபெயர்வு இருந்து கொண்டேதான் இருக்கும். உலகின் பல்வேறு நாடுகளில் தமிழர்கள் நல்ல பணிகளில் உயர்ந்த வாழ்க்கை தரத்துடன் வாழ்ந்து வருவதற்கு இடபெயர்வு தான் காரணமாக உள்ளது.

தற்போது வட இந்தியர்கள் தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் குடியேறி விட்டார்கள் என்று விவதிக்கப்படும் நிலையில், அதை பற்றிய படமாக வடக்கன் இருக்கும்" என்று வடக்கன் படம் குறித்து அதன் இயக்குநர் பாஸ்கர் சக்தி கூறியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள். 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.