சிம்பு படத்தால் எனக்கும் தனுஷூக்கும் விரிசலா? - வீடியோ விட்டு விளக்கம் கொடுத்த வெற்றிமாறன்!
வாடிவாசல் திடைப்படத்தை பொறுத்த வரை நடிகர்கள் மற்றும் விலங்குகளின் பாதுகாப்பிற்காக சில வேலைகள் செய்ய வேண்டி இருக்கிறது. அதே போல எழுத்து பணிக்கும் நேரம் தேவைப்படுகிறது.

சிம்பு படத்தால் எனக்கும் தனுஷூக்கும் விரிசலா? - வீடியோ விட்டு விளக்கம் கொடுத்த வெற்றிமாறன்!
வெற்றிமாறன் சிலம்பரசனுடன் இணையும் படம் குறித்தும், தனுஷ் வெற்றிமாறன் உறவு குறித்தும் நிறைய வதந்திகள் சமூகவலைதளங்களில் உலா வந்து கொண்டிருக்கின்றன. இது குறித்து விளக்கம் அளிக்கும் வகையில் இயக்குநர் வெற்றிமாறன் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
இது குறித்து அவர் பேசும் போது, ‘சிலம்பரசனும் நானும் இணையும் திரைப்படம் வடசென்னை 2 வா என்ற பேச்சு அடிபட்டுக் கொண்டிருக்கிறது. அது வடசென்னை 2 திரைப்படம் கிடையாது. தனுஷ் நடிக்கும் ‘அன்புவின் எழுச்சி’ தான் வடசென்னை 2 திரைப்படம்.
சிம்புடன் இணையும் திரைப்படம்?
ஆனால், இந்தப்படம் வடசென்னையை சுற்றி நடக்கும் திரைப்படம். வட சென்னையில் இடம்பெற்ற கதாபாத்திரங்கள் மற்றும் சின்ன சின்ன விஷயங்கள் இந்தப்படத்திலும் இடம் பெறும். இந்தத்திரைப்படம் அதே காலகட்டத்தில் நடக்கக்கூடிய திரைப்படம் தான்.