V Sekar on Vadivelu: ‘கவுண்டமணி காரை வேணும்னே இடிக்க போனான்.. செந்தில் பதறி போய் சொன்ன விஷயம்’ - வி சேகர் பேட்டி
V Sekar on Vadivelu: புதிதாக கார் வாங்கிய வடிவேலு, அந்த கார்களை இடிப்பது போல வந்து, அதனருகில் அவரது புதிய காரை நிப்பாட்டினான். - வி சேகர் பேட்டி!

V Sekar on Vadivelu: ‘நான் பெத்த மகனே’ திரைப்படத்திலும், ‘காலம் மாறி போச்சு’ திரைப்படத்திலும் வடிவேலு -கவுண்டமணி - செந்தில் ஆகியோரிடையே ஏற்பட்ட மோதல் குறித்து இயக்குநர் வி சேகர் ரெட்நூல் யூடியூப் சேனலுக்கு அண்மையில் கொடுத்த பேட்டியில் பேசி இருக்கிறார்.
கார்தான் பிரச்சினை
இது குறித்து அவர் அதில் பேசும் போது, ‘வடிவேலு இரண்டாவது படத்திலேயே கார் வாங்கி விட்டான். அவன் கார் வாங்கியதுதான் சிக்கலுக்கு ஆரம்பபுள்ளி. ‘நான் பெத்த மகனே’படப்பிடிப்பில் கவுண்டமணி செந்தில் அவரவர் கார்களை ஒரு இடத்தில் நிறுத்தி இருந்தார்கள்.
இந்த நிலையில் புதிதாக கார் வாங்கிய வடிவேலு, அந்த கார்களை இடிப்பது போல வந்து, அதனருகில் அவரது புதிய காரை நிப்பாட்டினான். இந்த நிலையில் செந்தில் கவுண்டமணியிடம் சென்று, சார்... வடிவேலு நம் காரை இடிப்பது போல காரை கொண்டு வந்து நிப்பாட்டி இருக்கிறான். கொஞ்சம் விட்டால் இடித்து விடுவான் போலிருக்கிறது என்றான்.
வடிவேலு கொடுத்த பதிலடி
இந்த நிலையில் கவுண்டமணி, அவன் சரியான விவகாரமான ஆளாக இருக்கிறான். விட்டால் அவன் நம் மீதே காரை ஏற்றி விடுவான். அதனால், நாம் இதனைச் டைரக்டரிடம் கொண்டு போவோம் என்று என்னிடம் வந்து சொன்னார்கள். இந்த நிலையில் வடிவேலுவை கூப்பிட்டு விஷயத்தை சொன்னேன். அதற்கு அவன் வேறு எங்கு காரை நிப்பாட்ட முடியும். இடிப்பது போல வந்தேன்.. ஆனால், இடித்தேனா என்று வாதம் செய்தான்.
செந்தில், கவுண்டமணி எதிராகவே புதிய காரில் என்னை ஏற்றி, ஒரு ரவுண்டு வந்து ஸ்டைலாக இறங்குவான். அதன் மூலமாக அவர்களை கடுப்பேற்ற வேண்டும் என்பது வடிவேலுவின் எண்ணம். அவன் நினைத்தது போலவே இருவரும் கடுப்பாவார்கள்.
விவேக் ஜோடியான கதை
‘காலம் மாறிப்போச்சு’ படத்தில் வடிவேலுவின் இம்சை தாங்காமல் கவுண்டமணி அவனை படத்திலிருந்து தூக்குங்கள் என்றார். அப்பொது செந்திலும், கோவை சரளாவும் படத்தில் மட்டுமில்லாமல் நிஜ வாழ்க்கையிலும் நெருக்கமாக இருந்தார்கள். இந்த நிலையில்தான் வடிவேலுக்கு கோவை சரளா ஜோடியானதை செந்திலால் தாங்க முடியவில்லை.
இதையடுத்து அவரும் என்னிடம் வந்து, வடிவேலுவை தூக்கி விடுங்கள் என்றார். அதற்கு நான் அவனுக்கு அட்வான்ஸ் தொகையை கொடுத்து விட்டேன். அதனால் அவனைத் தூக்க முடியாது. அடுத்த படத்தில் தூக்கி விடலாம் என்றேன். ஆனால் கவுண்டமணி அதற்கு ஒத்துக்கொள்ளாமல் படத்தில் இருந்து விலகிவிட்டார்.
காலப்போக்கில் வடிவேலுடன் நடிக்க ஆள் இல்லாமல் ஆகி விட்டது. இந்த நிலையில்தான் வடிவேலுக்கு ஒரு ஜோடி வேண்டும் என்பதற்காக, ஒரு ஆளைத் தேடிக் கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் தான் விவேக் என்னிடம் வந்து, உங்களது படத்தில் நடிக்க வாய்ப்பு வேண்டும் என்றார். அதற்கு நான், நீ பாலச்சந்தர் சாருவுடன் இருக்கிறாய், அப்படி இருக்கும்பொழுது எப்படி என்னிடம்.. என்று கேட்டேன்.
அதற்கு அவன், சார் அது ஏ கிளாஸ் ரசிகர்களுக்கு பொருந்தும். ஆனால், உங்கள் படத்தில்தான் ஏ பி சி கிளாஸ் ரசிகர்களை ஈர்க்கும் விதமான காமெடிகள் இடம்பெறுகின்றன. வடிவேலு உங்கள் படத்தில் நடித்ததற்கு பிறகு 5 லட்சம் முதல் லட்சம் 30 லட்சம் வரை சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறான். ஆகையால், உங்களது படத்தில் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றான்.
அதன் பின்னர்தான் வடிவேலுவையும் விவேக்கையும் இணைத்து பல படங்கள் எடுக்க ஆரம்பித்தேன். அப்படி எடுத்த படங்கள் மிகப்பெரிய ஹிட்டும் ஆகின. கோவை சரளா வடிவேலு காம்போ மிகவும் பிரபலமாக பேசப்பட்டு வந்த நிலையில், திடீரென்று என்னிடம் வந்த விவேக், கோவை சரளாவை என் உடனும் ஜோடி சேருங்கள் என்றான். அதையும் செய்தேன். அதன் பின்னர் வடிவேலுவும், விவேக்கும் கோவை சரளாவுடன் பல படங்களில் நடித்தார்கள்’ என்று அதில் அவர் (ரெட் நூல்) பேசினார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்