Vijay Sethupathi: கண்களில் சோகம்.. கன்னத்தில் காயம்.. நரைமுடி: வெளியானது விஜய்சேதுபதியின் 50ஆவது படம் குறித்த அப்டேட்
விஜய் சேதுபதி நடிக்கும் 50ஆவது படம் குறித்த முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் சேதுபதியின் 50ஆவது படம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
விஜய் சேதுபதி குறுகிய காலத்திற்குள்ளேயே முன்னணி நடிகரானவர். அவர் தேர்வு செய்து நடிக்கும் கதையும், கதாபாத்திரமும் தனித்துவமாக இருக்கும். ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்றில்லாமல், அனைத்துவித கதாபாத்திரங்களையும் ஏற்று நடிப்பவர். அதில் முத்திரையும் பதிப்பவர். அவர் நடிக்கும் எந்தப் படமும் பெரும்பாலும் முதலீட்டுக்கு மோசம் வைக்காது.
எனவே, இவரது கால்ஷீட்டுக்காக கோலிவுட்டே தவம் இருக்கிறது. தென்மேற்கு பருவக்காற்று படத்தில் அறிமுகமான விஜய் சேதுபதி பொங்கலை ஒட்டி தமிழ் மற்றும் இந்தியில் வெளியான மெர்ரி கிறிஸ்துமஸ் படம் வரை, தனது தனித்துவமான நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளார்.
உச்ச நடிகர்களான விஜய், கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஷாருக்கான் என முன்னணி நட்சத்திரங்களுக்கு வில்லனாகவும் நடித்து, தனக்குள் நடிகனை வெளிப்படுத்தியவர்.
இந்நிலையில், இவரது 50ஆவது படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. படத்தின் பெயர் மகாராஜா என அறிவிக்கப்பட்டிருந்தது. குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் சாமிநாதன் இந்தப் படத்தை இயக்குகிறார். இந்நிலையில் விஜய்சேதுபதியின் 46ஆவது பிறந்தநாளை ஒட்டி, இன்று மகாராஜா படக்குழு, இப்படத்தின் செகண்ட் லுக்கினை வெளியிட்டுள்ளது. அந்த செகண்ட் லுக்கில் கண்களில் சோகம், கன்னத்தில் காயம், நரைமுடி என நடுத்தர இளைஞராக விஜய்சேதுபதி கையில் கத்தியை வைத்தபடி நிற்கிறார். இது பார்ப்பதற்கு மிகவும் மிரட்டலாக இருக்கிறது.
இப்படத்தில் பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப், மம்தா மோகன் தாஸ்,நட்டி நடராஜன், அபிராமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்