New OTT Releases: அடுத்தடுத்து OTT-யில் வெளியாகும் 5 முக்கியத் திரைப்படங்கள்.. இந்த வாரத்தை சிறப்பாக்கும் படங்கள்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  New Ott Releases: அடுத்தடுத்து Ott-யில் வெளியாகும் 5 முக்கியத் திரைப்படங்கள்.. இந்த வாரத்தை சிறப்பாக்கும் படங்கள்!

New OTT Releases: அடுத்தடுத்து OTT-யில் வெளியாகும் 5 முக்கியத் திரைப்படங்கள்.. இந்த வாரத்தை சிறப்பாக்கும் படங்கள்!

Marimuthu M HT Tamil
Jul 30, 2024 01:42 PM IST

New OTT Releases: அடுத்தடுத்து OTT-யில் வெளியாகும் 5 மலையாளத் திரைப்படங்கள் பற்றி காண்போம்.

New OTT Releases: அடுத்தடுத்து OTT-யில் வெளியாகும் 5 மலையாளத் திரைப்படங்கள்.. சினிமா ஆர்வலர்கள் கவனத்திற்கு!
New OTT Releases: அடுத்தடுத்து OTT-யில் வெளியாகும் 5 மலையாளத் திரைப்படங்கள்.. சினிமா ஆர்வலர்கள் கவனத்திற்கு!

மலையாள சினிமா இந்திய சினிமாவில் சிறந்த கதைகளைக் கொண்டிருக்கும் சினிமாவாகப் பார்க்கப்படுகிறது. இந்த வாரம் ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 4 வரை, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐந்து படங்கள் ஓடிடியில் வெளியாவதால், திரைப்பட ஆர்வலர்களுக்கு மிகுந்த பிடித்தமான வாரமாக இது அமையலாம். உள்ளொழுக்கு, மாரிவில்லின் கோபுரங்கள், தலவன், டர்போ, நடன்னா சம்பவம் ஆகிய இந்த ஐந்து படங்களும் மலையாள ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. 

‘உள்ளொழுக்கு’:

நடிகை ஊர்வசி மற்றும் பார்வதி திருவோத்து ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் மலையாளம் படம் ‘உள்ளொழுக்கு’. இப்படம் கிறிஸ்டோ டாமி இயக்கி, கடந்த மாதம் 21ஆம் தேதி ரிலீஸாகி நல்லவரவேற்பினைப் பெற்றது. இப்படம் சமீபத்தில் சிம்பிளி சவுத் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி அமேஸான் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தில் பிடிக்காத திருமணம் செய்த இளம்பெண்ணின் கதையையும், அங்கு மாமியார் தரும் நம்பிக்கையும் பற்றி பேசுகிறது படம். 'உள்ளொழுக்கு' ஒவ்வொரு குடும்பத்திலும் இருக்கும் சிக்கல்களை நினைவுபடுத்துகிறது. 

'மாரிவில்லின் கோபுரங்கள்' :

அருண்போஸ் பிரமோத் மோகன் இயக்கத்தில் இந்திரஜித் சுகுமாரன், ஸ்ருதி ராமச்சந்திரன் ஆகியோர் நடித்து வெளியான திரைப்படம், மாரிவில்லின் கோபுரங்கள். இப்படத்தில் குழந்தையில்லாத தம்பதியினராக ஷிண்டோவும் ஷெரினும் வாழ்ந்து வரும்போது, ஷிண்டோவின் சகோதரர் ரோனி, தனது கர்ப்பிணி காதலியை வீட்டிற்கு அழைத்து வருகிறார். அப்போது நடக்கும் குழப்பங்கள், மனமாற்றங்கள் குறித்து பேசுகிறது, ‘மாரிவில்லின் கோபுரங்கள்’. இப்படமும் ஜூலை 31ஆம் தேதி SonyLIV-ல் வெளியாகும் எனக்கூறப்படுகிறது. 

‘தலவன்’:

பிஜூ மேன மற்றும் ஆசிப் அலி ஆகியோர் இணைந்து நடித்த கிரைம் திரைப்படம், ‘தலவன்’. இது கடந்த மே24ஆம் தேதி ரிலீஸானாலும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் இப்படம் வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது. இப்படம் ஒரு உள்ளூர் காவல் நிலையத்தின் செயல்பாடுகளை, சிக்கல்களை, விசாரணை முறையை வெளிப்படுத்துகிறது. இப்படத்தினை SonyLIV- ஓடிடி தளத்தில் எதிர்பார்க்கலாம்.

'டர்போ’:

மலையாள மெகா ஸ்டார் மம்மூட்டி நடிப்பில் உருவான'டர்போ' திரைப்படம் ஒரு ஆக்‌ஷன் திரில்லராக ஜொலித்தது. இது ஆகஸ்ட் 9 ஆம் தேதி SonyLIV-ல் திரையிடப்படயிருக்கிறது.  இப்படத்தில் ஜோஸ் என்னும் ஜீப் ஓட்டுநர் சென்னைக்கு இடம்பெயர வேண்டிய சந்தர்ப்பத்தில் நடக்கும் எதிர்பாராத திருப்பங்களே ‘டர்போ’ திரைப்படம் ஆகும்.

‘நடன்னா சம்பவம்’:

பிஜு மேனன், சுராஜ் வெஞ்சாரமூடு, ஸ்ருதி ராமச்சந்திரன் மற்றும் லிஜோமோல் ஜோஸ் உள்ளிட்ட பலர் நடித்து வெளியான திரைப்படம், நடன்னா சம்பவம்.  

ஒரு கேட்டட் கம்யூனிட்டியில் வசிக்கும் பிஜூ மேனனுக்கும் சுராஜ் வெஞ்சரமூடுக்கும் இடையிலான மோதல், மனித உணர்வுகள் ஆகியவற்றை வைத்து கதைக்களம் பின்னப்பட்டுள்ளது. இப்படம், மனோரமா மேக்ஸில் கிடைக்கிறது. இப்படத்தை அல்தாஃப் ரஹ்மான் இயக்கியுள்ளார்.

மேற்சொன்ன இந்த ஐந்து மலையாள படங்களும் ஓடிடியில் ஜூலை 29 தொடங்கி ஆகஸ்ட் 4க்குள் அமேஸான் பிரைம், சோனி லிவ், மனோரமா மேக்ஸ் போன்ற ஓடிடி தளங்களில் ரிலீஸாகின்றன.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.