தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Untouchable To The Girl Who Came To Watch The Movie Patu Thala?

PathuThalaFDFS: பத்து தல படம் பார்க்க வந்த பெண்ணிடம் தீண்டாமையா!

Pandeeswari Gurusamy HT Tamil
Mar 30, 2023 11:02 AM IST

பத்து தல படம் பார்க்க வந்த பெண்ணிடம் தீண்டாமை கடை பிடிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தியேட்டர் ஊழியருடன் பாதிக்கப்பட்ட பெண்
தியேட்டர் ஊழியருடன் பாதிக்கப்பட்ட பெண்

ட்ரெண்டிங் செய்திகள்

சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் பத்து தல படத்தின் முதல் காட்சிக்கு டிக்கெட் இருந்தும் நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த பெண் உள்ளிட்ட இருவரை உள்ளே விட மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் சிறிய சலசலப்பு ஏற்பட்டது. ரோகிணி திரையரங்க ஊழியர்கள் நரிக்குறவர் சமூகப் பெண்ணை உள்ளே விட மறுக்கும் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு சமூக வலை தளங்களில் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

சிம்பு நடிப்பில் உருவாகிருக்கும் பத்து தல திரைப்படம் உலகம் முழுவதும் இன்று பிரமாண்டமாக வெளியானது. கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான மஃப்டி படத்தின் ரீமேக்காக இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. கெளதம் கார்த்திக், கெளதம் கார்த்திக் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதையின் நாயகியாக பிரியா பவானி ஷங்கர் தோன்றுகிறார். அனுசித்தாரா, கலையரசன், ரெடிங் கிங்ஸ்லீ, நமோ நாரயணா உள்பட பலரும் நடித்துள்ளார்.

நடிகர் ஆர்யாவின் மனைவியும், நடிகையுமான சாயிஷா சைகல் ராவடி என்ற பாடலுக்கு ஐடம் டான்ஸ் ஆடியுள்ளார். இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டான நிலையில், படம் மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை படங்களை இயக்கி ஓபில் என் கிருஷ்ணா படத்தை இயக்கியுள்ளார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகும் நிலையில் படத்தின் ரிலீஸை சிம்புவின் ரசிகர்களை கோலாகலமாக கொண்டாடி வருகிறார்.

முன்னணி ஹீரோக்களின் படங்கள் காலை 5 மணிக்கே முதல் காட்சி திரையிடப்படும் ட்ரெண்ட் கோலிவுட்டில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், வழக்கம் போல் 8 மணிக்கு முதல் காட்சி திரையிடப்படப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.