Meera Jasmine: கைவிட்ட காதலன்.. தவிக்கவிட்ட கணவன்.. விவாகரத்து பத்திரம் வாங்கிய மீரா! - மீராவின் மீளா துயர்!
மீரா ஜாஸ்மின் பர்சனல் தொடர்பான விஷயங்கள் குறித்து பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு பகிர்ந்த தகவல்கள் இவை!

மீரா ஜாஸ்மினுக்கு கேரளாதான் பூர்வீகம். சினிமா குடும்பம் தான். ஒரு படத்தின் படப்பிடிப்பின் போது ஜாஸ்மினை சந்தித்த இயக்குநர் ஒருவர் மிகவும் க்யூட்டாக இருக்கிறாரே என்று சொல்லி அவரை ஒரு சின்ன காட்சியில் நடிக்க வைத்தார். அப்படித்தான் மீரா ஜாஸ்மின் திரைத்துறைக்குள் நுழைந்தார்.
ரன் கொடுத்த பிரேக்!
அதன் பின்னர் அவர் மலையாளத்தில் ஒரு சில படங்கள் நடித்தார். ஆனால் அந்த படங்கள் எதுவும் பெரிய வரவேற்பை பெறவில்லை. அதன் பின்னர் தான் மீரா ஜாஸ்மினுக்கு தமிழில் ரன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
முதலில் அவர் நடித்த கதாபாத்திரத்தில் இந்தி நடிகை வித்யா பாலன் தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர் பிஸியாக இருந்ததால் அவரால் நடிக்க முடியவில்லை; அதனைத் தொடர்ந்து அந்த கதாபாத்திரத்தில் நடிகை ரீமாசென் கமிட் ஆனார். ஆனால் அவருக்கு அந்தத்திரைப்படத்தில் பெரிதாக ஈடுபாடு இல்லை. ஒரு கட்டத்தில் அந்தப்படத்தில் இருந்து ரீமா விலகி விட்டார்.