Jayakanthan: இதற்கு பெயர்தான் சுதந்திரம்.. பிரதி பாராத அன்பு .. ஜெயகாந்தன் நினைவுதினம்
பிரதி பாராமல் தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து மறைந்த ஜெயகாந்தனின் 9ஆம் ஆண்டு நினைவுதினம் அனுசரிக்கப்படுகிறது. எழுத்துகளால் நிறைத்தவரை இந்த எழுத்துகளால் நிறைவு செய்ய முடியாது.
இன்பம் என்றால் என்ன வென்றே பலருக்கும் தெரியாது அது பொன்னால் கிடைப்பதல்ல புகழால் கிடைப்பதல்ல. தன்னை அரிதலில் ஒரு இன்பம் இருக்கிறது பாருங்கள் அந்த இன்பமே உயர்வானது. இப்படி வாழ்க்கையையும் அதன் சூழலையும் கைவரப்பெற்றவர் ஜெயகாந்தன் அவரது பிறந்த நாளான இன்று அவர் குறித்த மிக சில சுவாரஸ்ய தகவல்களை இங்கு பகிர்ந்து கொள்வோம்.
ஜெயகாந்தன் கலைஞர் கருணாநிதி அமர்ந்திருந்த மேடையில் அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது மேடையில் பேசிய தொடங்கிய ஜெயகாந்தன் யாரை வணங்குவது என்று தெரியவில்லை. இந்த மேடையில் நான் வணங்கத்தக்க மனிதர்கள் யாரும் இல்லை என்றார். ஆனால் ஒரு பொதுமேடையில் ஒரு தமிழன் இன்னொரு தமிழனை பார்த்து மரியாதை செய்ய தவறி விட்டான் என்ற செய்தி வரலாற்றின் காதுகளுக்கு போய் விட கூடாது என்பதற்காக இந்த மேடையை வணங்குகிறேன் என்றார். இதைக்கேட்ட மேடையில் இருந்த திமுக பிரமுகர்கள் அதிர்ந்தனர்.
இதையடுத்து விழாவின் நிறைவுரை ஆற்ற வந்த கலைஞர் நாங்கள் யாரும் வணங்க தக்கவர்கள் இல்லை என்று சொன்னார். ஆனால் நான் ஜெயகாந்தனை வணங்குகிறேன். காரணம் அவர் ஒரு எழுத்தாளர் என்பதற்காக அல்ல, சாகித்யஅகாடமி விருது பெற்றவர் என்பதற்காக அல்ல.
எனக்கு வாக்களிக்கப்போகும் கோடான கோடி மக்களில் அவரும் ஒருவர் என்பதற்காக வணங்குகிறேன் என்றார். இப்படித்தான் இந்த மாநிலத்தில் அரசியல், விமர்சனங்களும் ஒரு வகையில் வார்த்தெடுக்கப்பட்டுள்ளது என்பது இன்றைய இளம் தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று
இப்படி ஜெயகாந்தன் அரசு அதிகார மையம் என எல்லாவற்றையும் எதிர்த்து தன் வாழ்நாள் முழுவதும் தான் சரி என்று நினைத்ததை எல்லா இடங்களிலும் தைரியமாக எடுத்து வைத்தார்.
ஜெயகாந்தன் எப்போதும் மனிதர்கள் சூழ வாழ்ந்தார். எந்த நேரத்திலும் அவருடன் 20 முதல் 30 நண்பர்கள் இருப்பர். இப்படி ஜெயகாந்தன் எப்போது தன் வாழ்க்கையை கொண்டாடிய படியே வாழ்ந்துள்ளார். அன்றைய நாட்களில் ஜெயகாந்தனின் சபை மிகவும் பிரசித்தி பெற்றது-
மூர்த்தி ராஜகோபால் என்ற வைர வியாபாரி ஜெயகாந்தன் ஒரு ஒண்டு குடித்தனத்தில் வாழ்ந்த போது அவரை சந்தித்தார். அப்போது ஜெயகாந்தன் அவருடன் பேசிக்கொண்டிருந்த போது மூர்த்தி ராஜகோபாலும் அவரது மனைவியும் ஒரு தட்டில் சுமார் 100 பவுண் நகை மட்டும் கரெண்சி நோட்டுகளை நீட்டினர். ஆனால் அதை ஜெயகாந்தன் வாங்க மறுத்தார்.
ஒரு கட்டத்தில் என்றைக்காவது ஒருநாள் இப்போது நான் தருவதை திரும்பி தர வேண்டும் என்று நினைத்தால் நான் அதை வாங்கி கொள்கிறோன் என்றார்.இதை பின்னாளில் தனது எழுத்தில் பதிவு செய்த ஜெயகாந்தன் என் வாழ்நாளில் அப்படி ஒரு துரதிஷ்டமான நாள் வரவே இல்லை என்று எழுதி உள்ளார். அதுதான் ஜெயகாந்தன்.
இதையே ஜெயகாந்தன் ஒரு நேர்காணலில் நீங்கள் ரசிப்பதற்காக நான் எதையும் செய்ய வில்லை. நான் சந்தோசமாக இருக்கிறேன் அது ஒரு தப்பா? என்றார் நீங்கள் எதார்த்தத்திற்கு அப்பாற் பட்டவரா என்ற கேள்விக்கு நானே ஒரு எதார்த்தம் ஆச்சே. இன்னும் சொல்லப்போனால் நான்தான் எதார்த்தம் நீங்கள் எல்லாம் பொய்யோ என்று கூட தோன்றுகிறது நீங்கள் உங்களையே ஏமாற்றி கொள்கிறீர்கள் நான் அதை செய்வதில்லை.
இதற்கு பெயர்தான் சுதந்திரம். யாரிடமும் எதையும் எதிர்பார்க்காமல் என்னை நீங்க அங்கீரிப்பதே எனக்கு போதும் என்றார். அப்படி பிரதி பாராமல் தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து மறைந்த ஜெயகாந்தனின் 9ஆம் ஆண்டு நினைவுதினம் அனுசரிக்கப்படுகிறது. எழுத்துகளால் நிறைத்தவரை இந்த எழுத்துகளால் நிறைவு செய்ய முடியாது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்