CL Anandan: வாள் வீச்சு நாயகன்.. அறிமுகமான திரைப்படமே அடையாளம்.. நடிகர் ஆனந்தன் நினைவுநாள்

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 25, 2024 05:30 AM IST

நடிகர் சி.எல்.ஆனந்தன், சி.எல்.ஆனந்தன் நினைவுநாள், தமிழ் சினிமா, சினிமா செய்திகள்

நடிகர் சி.எல்.ஆனந்தன்
நடிகர் சி.எல்.ஆனந்தன்

ட்ரெண்டிங் செய்திகள்

அதனைத்தொடர்ந்து ஆனந்தன் பல படங்களில் நடித்த போதும் அறிமுகமான திரைப்படமே அவருக்கு அடையாளமாக மாறி விஜயபுரி வீரன் ஆனந்தன் என்றே அடையாளம் காணப்பட்டார்.

வாகை சூடிய வீரத்திருமகன்

 

எம்ஜிஆர், சிவாஜி கணேசன் ஆகியோருக்கு ஏராளமான சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த ஏ.சி. திருலோகசந்தர் இயக்கிய முதல் படம் வீரத்திருமகன். சி.எல். ஆனந்தன் ஹீரோவாக நடிக்க, ஈ.வி. சரோஜா, சச்சு, எஸ்.ஏ. அசோகன் ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்து இந்தப் படம் வெளியானது.

இது ஏவிஎம் நிறுவனத்தின் முதல் ஆக்‌ஷன் படமாக அமைந்தது, ரசிகர்களுக்கு புதுவித அனுபவத்தை கொடுத்தது. அத்துடன் படம் வெளியீட்டுக்கு முன்னர் நியான் பிளெக்ஸ் போர்டில் படம் விளம்பரம் செய்யப்பட்டது. அந்த வகையில் இந்த பெருமையும் பெற்ற முதல் படமாக வீரத்திருமகன் உள்ளது.

இந்தப் படத்தின் டைட்டிலுக்கு ஏற்ப ஹீரோ சி.எஸ். ஆனந்தன், சண்டை காட்சிகளிலும் சரி, மிருகங்களுடனான மோதல் காட்சிகளிலும் சரி எவ்வித் டூப்பும் போடாமல் தானே நடித்து அனைவரையும் மலைக்க வைத்தார்.

இந்த படத்தில் இடம்பெற்ற பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள் பாடல் இன்றளவும் எம்எஃப்களில், யூடியூப்பில் கேட்கப்படும் பாடலாக இருந்த இதை, சமீபத்தில் ராகவ லாரன்ஸ் நடிப்பில் வெளியான ருத்ரன் படத்தில் ரீமிக்ஸ் செய்தார்கள். இந்த ரீமிக்ஸ் பாடலும் ஹிட்டடித்துள்ளது.

சினிமா மற்றும் பொது வாழ்க்கை

 

கொங்கு நாட்டு தங்கம், யானை வளர்த்த வானம்பாடி மகன், நீயா நானா, நானும் மனிதன் தான், காட்டு மல்லிகை, அடுத்த வாரிசு, அந்த ஒரு நிமிடம், செந்தூரப் பூவே ஆகியவை ஆனந்தனின் குறிப்பிடத்தக்க படங்கள் ஆகும். இதில் நானும் மனிதன் தான் திரைப்படத்தில் நடித்ததோடு மட்டுமல்லாமல் அந்த படத்தை தயாரிக்கவும் செய்திருந்தார் ஆனந்தன்.

காட்டு மல்லிகை என்ற படத்தில் புலியுடன் சண்டை போடும் காட்சியில் டூப் இல்லாமல் அவரே நடித்தார். வீரத்திருமகன் இவர் பெண் வேடமிட்டு நடித்த வெத்தல போட்ட பத்தினி பொண்ணு என்ற பாடல் மிகவும் பிரபலம்.

எம்.ஜி.ஆர் மீது ஆனந்தனுக்கு அதிகபற்று இருந்தது. எம். ஜி. ஆருடன் இணைந்து தனிப்பிறவி, நீரும் நெருப்பும் ஆகிய படங்களில் நடித்தார்.

தி.மு.க. விலிருந்து விலகி எம்.ஜி.ஆர் அ.தி.மு.கவை தொடங்கிய போது முதலாவதாக இணைந்த நடிகர் ஆனந்தன். அதிகமுகவிற்கான கட்சி பிரசாரங்களிலும் ஆனந்தின் பங்கு இருந்தது.

சி.எல்.ஆனந்தன் மனைவியின் பெயர் லட்சுமியம்மாள். சி.எல்.ஆனந்தன் லட்சுமியம்மாள் தம்பதியருக்கு 3 மகன்களும் 4 மகள்களும் பிறந்தனர்.

இவரின் மகள்கள் டிஸ்கோ சாந்தி, லலிதகுமாரி, மகன் ஜெயராமன் ஆகியவர்களும் படங்களில் நடித்துள்ளார்கள். நடிகர் பிரகாஷ்ராஜ் முதலில் மணந்தது லலிதகுமாரியைத்தான். பின்னர் இருவரும் விவாகரத்து பெற்றுக்கொண்டனர்.

ஆந்திர படவுலக நாயக நடிகர் ஸ்ரீஹரி, டிஸ்கோ சாந்தியின் கணவர் ஆவார். மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டு, அப்பலோ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற ஆனந்தன் 25.03.1989 அன்று அதிகாலையில் தமது 56 ஆம் வயதில் காலமானார். அவரின் நினைவுதினமான இன்று அவரை போற்றுவதில் பெருமை கொள்கிறது தி ஹிந்துஸ்தான் தமிழ்!

 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்