விவாகரத்து ஆனா என்ன?.. அப்பாட்ட போ.. அனுப்பி வைத்த சைந்தவி.. மகளை அணைத்துகொண்ட ஜீவி பிரகாஷ்
சைந்தவி பத்திரமாக ஜிவி பிரகாஷிடம் குழந்தையை அனுப்பி வைத்தார். மேலே வந்த குழந்தையை ஜிவி பிரகாஷ் பாதுகாப்பாக கட்டி அணைத்துக்கொண்டார்.

விவாகரத்து ஆன என்ன?.. அப்பாட்ட போ.. அனுப்பி வைத்த சைந்தவி.. மகளை அணைத்துகொண்ட ஜீவி பிரகாஷ்
ஜிவி பிரகாஷூம், சைந்தவியும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதாக கூறி அறிக்கை வெளியிட்டனர். இது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் குமார் அண்மையில் நடத்திய இசைக்கச்சேரியில் சைந்தவி பாட இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
பர்சனல் வாழ்க்கையில் வித்தியாசம்
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் ஜிவி பிரகாஷ் நடத்திய இசைக்கச்சேரியில் சைந்தவி இணைந்து பாடுவதாக அறிவிக்கப்பட்டது. இது குறித்து மகிழ்ச்சியை சைந்தவி வெளிப்படுத்தியும் இருந்தார்.
இதன் மூலம், பர்சனல் வாழ்க்கையில் வித்தியாசம் இருந்தாலும், தொழில் ரீதியாக இருவரும் ஒருவர் கூறுவர் மரியாதையோடு நடந்து கொள்கிறார்கள் என்று கமெண்ட்கள் வந்தன.