Unni mukundan: மார்கோவின் எகிடுதகிடு வெற்றி.. புரோமோஷனுக்கு கூட பட்ஜெட் இல்லாம.. 30 ஷோ 3500 ஷோ… உன்னி முகுந்தன் பேட்டி!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Unni Mukundan: மார்கோவின் எகிடுதகிடு வெற்றி.. புரோமோஷனுக்கு கூட பட்ஜெட் இல்லாம.. 30 ஷோ 3500 ஷோ… உன்னி முகுந்தன் பேட்டி!

Unni mukundan: மார்கோவின் எகிடுதகிடு வெற்றி.. புரோமோஷனுக்கு கூட பட்ஜெட் இல்லாம.. 30 ஷோ 3500 ஷோ… உன்னி முகுந்தன் பேட்டி!

Kalyani Pandiyan S HT Tamil
Jan 25, 2025 04:26 PM IST

Unni mukundan: 30 காட்சிகளில் தொடங்கி அது 3500 காட்சிகளாக விரிவானது. அது மிகப்பெரியது. இது என்னுடைய முகத்தினால் அல்ல படத்தின் கரு நன்றாக இருந்த காரணத்தினால்தான் நடந்தது. - உன்னி முகுந்தன் பேட்டி!

Unni mukundan: மார்கோவின் எகிடுதகிடு வெற்றி.. புரோமோஷனுக்கு கூட பட்ஜெட் இல்லாம.. 30 ஷோ 3500 ஷோ… உன்னி முகுந்தன் பேட்டி!
Unni mukundan: மார்கோவின் எகிடுதகிடு வெற்றி.. புரோமோஷனுக்கு கூட பட்ஜெட் இல்லாம.. 30 ஷோ 3500 ஷோ… உன்னி முகுந்தன் பேட்டி!

மலையாள சினிமாவில் எடுக்கப்பட்ட மிகவும் வன்முறையான படமாக பார்க்கப்படும் இந்தப்படம் ஏப்ரல் மாதம் தென் கொரியாவிலும் வெளியிடப்படவுள்ளது. இந்த நிலையில் மார்கோ படத்தின் கதாநாயகன் உன்னி முகுந்தன் இந்துஸ்தான் டைம்ஸ் ஆங்கில இணையதளத்திற்கு பிரத்யேக பேட்டி கொடுத்தார். அந்த பேட்டியை இங்கே பார்க்கலாம்

மார்கோவின் பான் இந்தியா வெற்றி குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

அந்தப்பேட்டியில், ‘ இது புதிய முயற்சி என்று எனக்குத் தெரியும். ஆனால், நீங்கள் பரிசோதனை முயற்சியை மேற்கொள்ளும் போது, அது எந்த வழியில் செல்லும் என்று உங்களுக்குத் தெரியாது.

கேரளாவில் மார்கோ பட வெற்றியைப் பற்றி நான் உறுதியாக இருந்தேன்; ஏனென்றால் நான் ஒரு தனி ஹீரோவாக ஏழு ஆண்டுகளாக ஆக்‌ஷன் படங்களில் நடிக்கவில்லை. அதனால் மார்கோ படத்தை சந்தைப்படுத்துவது எளிதாக இருந்தது. தெலுங்கு ஆக்‌ஷன் திரைப்படங்கள் பிற மொழிகளில் நன்றாக ஜொலித்திருக்கின்றன.

இந்தியில் வொர்க் அவுட்டானது ஆச்சரியம்

ஆனால், மார்கோ இந்தியில் நன்றாக வொர்க் அவுட் ஆனது ஆச்சரியமாக இருந்தது. காரணம், இந்தியில் விளம்பரம் செய்ய எங்களிடம் பட்ஜெட் இல்லை. அதை நாங்கள் ஆன்லைன் மூலமாகத்தான் விளம்பரப்படுத்தினோம். இருப்பினும் ரசிகர்களுக்கு படம் பிடித்திருந்ததை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன்' என்று பேசினார்.

30 காட்சிகளில் தொடங்கி அது 3500 காட்சிகளாக..

மேலும் பேசிய அவர், ‘ எனக்காக அல்லாமல், படத்தின் கருவை பார்த்து ஹிந்தி பார்வையாளர்கள் திரையரங்கிற்கு வந்திருந்ததை என்னால் நன்றாக உணர முடிந்தது. நான் ஒரு புதுமுகத்தைப் போல உணர்ந்தேன். 13 வருடங்கள் சினிமாவில் இருக்கிறேன். ஹிந்தி மார்க்கெட்டை உன்னிப்பாக கவனித்து வருகிறேன். 30 காட்சிகளில் தொடங்கி அது 3500 காட்சிகளாக விரிவானது. அது மிகப்பெரியது. இது என்னுடைய முகத்தினால் அல்ல படத்தின் கரு நன்றாக இருந்த காரணத்தினால்தான் நடந்தது.

தரப்பு தரப்பிடம் பணம் இல்லை

நான் நடித்த சிறந்த படங்களில் ஒன்றாக மார்கோவை நான் நினைக்கிறேன். படம் அதன் ஒட்டுமொத்த தரத்தின் காரணமாக முற்றிலும் தப்பிப்பிழைத்தது பான்-இந்தியா அளவில் படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்பு தரப்பிடம் பட்ஜெட் இல்லை. எனவே சில மொழிகள் பின்னர் வெளியிடப்பட்டன’ என்று கூறினார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.