Umapathy Ramaiah: ஜூன் 14 - களத்துல சந்திப்போம்.. விஜய் சேதுபதி உடன் மோதும் உமாபதி - வெற்றி யாருக்கு?
Umapathy Ramaiah: 'பித்தல மாத்தி’ திரைப்படம், ஜூன் 14ம் தேதி வெளியாக இருக்கிறது. அன்றைய தினம் விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படமும் வெளியாக இருக்கும் நிலையில், வெற்றி யாருக்கு கிடைக்கும் என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.

பிரபல நடிகர் ராமையாவின் மகனும், நடிகருமான உமாபதி ராமையா கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் புதிய படத்திற்கு ‘பித்தல மாத்தி’. இயக்குநர் மாணிக்க வித்யா இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்தப்படத்தில் உமாபதி ராமையா உடன், சம்ஸ்கிருதி, பால சரவணன், வினுதா லால், தம்பி ராமையா, தேவதர்ஷினி, வித்யூலேகா ராமன், 'ஆடுகளம்' நரேன், 'காதல்' சுகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
எஸ். என். வெங்கட் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மோசஸ் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஏ. எல். ரமேஷ் மேற்கொண்டிருக்கிறார். விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்ரீ சரவணா ஃபிலிம் ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. சரவணன் தயாரித்திருக்கிறார். இந்தப்படம் ஜூன் 14ம் தேதி வெளியாக இருக்கிறது. அன்றைய தினம் விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படமும் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
தயாரிப்பாளர் பேட்டி
படத்தைப் பற்றி தயாரிப்பாளர் சரவணா பேசுகையில், '' பித்தல மாத்தி என்றால் கேடித்தனம்.. தகிடு தத்தம்.. செய்பவர்களை குறிக்கும். ஒருவர் வாழ்க்கையில் நல்லது கெட்டதற்காக என்னென்ன செய்ய வேண்டி இருக்கிறது என்பதனை விவரிப்பது தான் இதன் திரைக்கதை.
கதையின் நாயகன் அவருடைய வாழ்க்கையில் நல்லது எது? கெட்டது எது? என்பதனை தெரிந்து கொண்டு, எம்மாதிரியான பித்தல மாத்தி வேலைகள் செய்து வாழ்க்கையில் முன்னேறுகிறார்? என்பதுதான் இப்படத்தின் கதை. இந்தத் திரைப்படம் ஜூன் மாதம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது'' என்றார்.
ஸ்ரீ சரவணா ஃபிலிம் ஆர்ட்ஸ் நிறுவனம் இதற்கு முன் நான்கு படங்களை தயாரித்து இருக்கிறது. இவர்களின் இணை தயாரிப்பில் ‘ஜோரா கைய தட்டுங்க’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. பித்தல மாத்தி திரைப்படம் வெளியான பிறகு ஜோரா கைய தட்டுங்க திரைப்படம் வெளியாக இருப்பதாக தயாரிப்பாளர் ஜி. சரவணன் தெரிவித்து இருக்கிறார்.
அர்ஜூன் மகளுடன் காதல்
முன்னதாக, நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவும், நகைச்சுவை நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதியும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இவர்களின் திருமணத்திற்கு இரண்டு வீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில், கடந்த வருடம் அக்டோபர் 28ம் தேதி நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.
இந்த நிகழ்வு நடிகர் அர்ஜூன் கட்டிய ஆஞ்சநேயர் கோயிலில் எளிமையான முறையில் நடந்தது. இவர்களது திருமணம் கெருகம்பாக்கத்தில் நடிகர் அர்ஜூன் கட்டியுள்ள அர்ஜூன் கார்டன்ஸில் ஜூன் 10ம் தேதி நடைபெறும் என சொல்லப்படுகிறது. அண்மையில் இரு தரப்பு குடும்பத்தினரும் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திருமண அழைப்பிதழ் கொடுத்து திருமணத்திற்கு அழைத்தனர்.
உமாபதி, அதாகப்பட்டது மஹா ஜனங்களே, தண்ணி வண்டி, மணியார் குடும்பம், திருமணம் ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார். ராஜாக்கிளி என்கிற படத்தின் மூலம் இயக்குநராகவும் அவதாரம் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டாபிக்ஸ்