Shariq Hassan: அழகான தேவதை கிடைச்சுட்டா.. மகனுக்கு திருமண வேலையில் இறங்கிய உமா ரியாஸ்
Shariq Hassan: ஷாரிக் தனது காதலியான மரியா ஜெனிஃபரை ஆகஸ்ட் 8, 2024 அன்று திருமணம் செய்து கொள்ள உள்ளார்.

அழகான தேவதை கிடைச்சுட்டா.. மகனுக்கு திருமண வேலையில் இறங்கிய உமா ரியாஸ்
'பிக் பாஸ் தமிழ்' மூலம் பிரபலமானவர், நடிகர் ஷாரிக் ஹாசன். இவர் நடிகர்கள் ரியாஸ் கான் மற்றும் உமா ரியாஸ் கான் ஆகியோரின் மகன் ஆவார்.
ஷாரிக் ஹாசனுக்கு அவர்களின் பெற்றோர் திருமணம் செய்து வைக்க தயாராகி உள்ளனர். ஷாரிக் தனது காதலியான மரியா ஜெனிஃபரை ஆகஸ்ட் 8, 2024 அன்று திருமணம் செய்து கொள்ள உள்ளார்.
ஷாரிக் ஹாசனுக்கு திருமணம்
அந்த இளம் ஜோடியின் படத்தைப் பகிர்ந்து கொண்டு திருமண தேதியை அறிவித்து இருக்கிறார், உமா ரியாஸ் கான். அவர் வெளியீட்டு இருக்கும் பதிவில், " இறுதியாக என் குழந்தை ஒரு அற்புதமான தேவதையை திருமணம் செய்து கொள்ள போகிறார் “ என குறிப்பிட்டு உள்ளார்.