பதேர் பாஞ்சாலி நடிகை மரணம் முதல் குட் பேட் அக்லி ரிலீஸ் வரை! - இன்றைய டாப் 10 சினிமா செய்திகள் இங்கே!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  பதேர் பாஞ்சாலி நடிகை மரணம் முதல் குட் பேட் அக்லி ரிலீஸ் வரை! - இன்றைய டாப் 10 சினிமா செய்திகள் இங்கே!

பதேர் பாஞ்சாலி நடிகை மரணம் முதல் குட் பேட் அக்லி ரிலீஸ் வரை! - இன்றைய டாப் 10 சினிமா செய்திகள் இங்கே!

Kalyani Pandiyan S HT Tamil
Nov 19, 2024 09:14 PM IST

பதேர் பாஞ்சாலி நடிகை மரணம் முதல் குட் பேட் அக்லி ரிலீஸ் வரை! - இன்றைய டாப் 10 சினிமா செய்திகளை இங்கே பார்க்கலாம்

பதேர் பாஞ்சாலி நடிகை மரணம் முதல் குட் பேட் அக்லி ரிலீஸ் வரை! - இன்றைய டாப் 10 சினிமா செய்திகள் இங்கே!
பதேர் பாஞ்சாலி நடிகை மரணம் முதல் குட் பேட் அக்லி ரிலீஸ் வரை! - இன்றைய டாப் 10 சினிமா செய்திகள் இங்கே!

1. தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருக்கும் அஜித்குமாரை வைத்து, மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் திரைப்படம் ‘குட் பேட் அக்லி. இப்படம் வரக்கூடிய, 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கலுக்கு வெளியாகும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையே, நீண்ட நாட்களாக தயாரிப்பு பணியில் இருந்த அஜித்தின் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்து டப்பிங் தொடங்கப்பட்டது. இந்த நிலையில், முதலில் தொடங்கப்பட்ட அஜித்தின் விடாமுயற்சி திரைப்படமே பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது பொங்கல் பண்டிகைக்கு அஜித்தின் குட் பேட் அக்லி வருவது உறுதியாகி இருக்கிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப்படத்திற்கு தேவி ஸ்ரீ இசையமைத்து இருக்கிறார்.

குட் பேட் அக்லி- யில் அஜித்
குட் பேட் அக்லி- யில் அஜித்

2. தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர்அல்லு அர்ஜுன். இவரது நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்த படம் 'புஷ்பா தி ரைஸ்'. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இந்தப்படத்தின் இரண்டாம் பாகமான 'புஷ்பா 2 தி ரூல்' படம் உருவாகியுள்ளது. இந்தப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 'புஷ்பா' 2 படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியானது. இந்த ட்ரெய்லர் 12 கோடி பார்வையாளர்களை கடந்திருக்கிறது.

சுசீந்திரன் அறிக்கை 

3. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குநர் சிவா இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'கங்குவா'. இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நவம்பர் 14ம் தேதி வெளியான இந்தப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்தப்படத்தை பார்த்த இயக்குநர் சுசீந்திரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அந்த அறிக்கையில், “ நேற்று மாலை என் குழந்தைகளுடன் "கங்குவா" திரைப்படத்தைப் பார்த்தேன். தமிழ் சினிமாவின் மிகவும் நேர்த்தியான பிரமாண்டமான திரைப்படம் இது, ரசிக்கும்படியான திரைக்கதை அமைத்துள்ளார் சிவா இயக்குனர் அவர்கள், அவருக்கு என்னுடைய வாழ்த்துகள், சூர்யா சாரின் நடிப்பு, உழைப்பு பிரமிக்க வைக்கிறது. தமிழக மக்களுக்கு ஒரு வேண்டுகோள், காலம் தாழ்த்தி கொண்டாடி விடாதீர்கள், அனைவரும் குடும்பத்துடன் சென்று இந்த திரைப்படத்தைப் பாருங்கள் " கங்குவா" உங்களை மகிழ்விப்பான்"” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

4. சத்யஜித் ரேயின் இயக்கிய 'பதேர் பாஞ்சாலி' படத்தில் துர்கா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை உமா தாஸ்குப்தா. அவர் பள்ளியில் நடித்த நாடகத்தைக்கண்டு தன்னுடைய படத்தில் அவரை நடிக்க வைத்தார் இயக்குநர் சத்யஜித் ரே; பிபூதிபூஷன் பந்தோபாத்யாயின் நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவான 'பதேர் பாஞ்சாலி' திரைப்படம் இன்றும் ஒரு கிளாசிக் திரைப்படமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

5. வசூலில் கெத்து காட்டும் அமரன்

அமரன் திரைப்படம் தீபாவளி பண்டிகை பண்டிகையன்று அக்டோபர் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் தமிழ்நாட்டில் மட்டும் நேற்று ரூ.1.4 கோடி ரூபாய் வசூலைப் பெற்று, இதுவரை மொத்தமாக ரூ. 149.8 கோடி வசூலைப் பெற்றுள்ளது. இந்திய அளவில் பார்க்கும் போது படம் 19 நாட்களில் 218.25 கோடி ரூபாய் வசூலை பெற்றுள்ளது. மேலும், உலகளவில் 295 கோடி ரூபாய் வசூலை பெற்றுள்ளதாக sacnilk.com இணையதளம் கூறியுள்ளது.

6. தன்னுடைய தோல்வி காலங்களை பற்றி பேசிய ஷாருக்கான், “ அது தொடர்பான நினைகளை நினைக்கவே வெறுப்பாக இருக்கிறது. அதன் சோகம் தாழாமல் அதற்காக பாத்ரூமில் சென்று அழுதிருக்கிறேன். நான் அதை யாரிடமும் காட்டுவதில்லை.” என்று பேசினார்.

7. நயன்தாரா ஆவணப்படத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அட்லீ, “ லேடி சூப்பர்ஸ்டார் என்று நயன்தாராவை கூப்பிட்டாலே அப்படி கூப்பிடாதே என்பார். ராஜா ராணி படத்தின் கதையை அவரிடம் சொன்ன போது, முதல் பாதியை கேட்ட அவர் ஹீரோ எனக்கு தெரியவே இல்லை. ஹீரோயினுக்குத்தான் அதிக வேலைகள் இருக்கிறது' என்றார். இரண்டாம் பாதி கேட்டு முடித்ததும், இந்த கதை ஃப்ரஸாக இருப்பதாக கூறி, கதையை முடிவு செய்வதற்கு 2 நாட்கள் அவகாசம் கேட்டார்.

நயன்தாரா
நயன்தாரா

பிறகு இரண்டு நாள்களில் கதைக்கு ஓகே சொன்னார். அப்படிதான் `ராஜா ராணி' தொடங்கியது. அவர் படத்திற்குள் வந்ததும் படத்தின் ஸ்கேலும் பெரிதாகியது. அவர் படத்திற்குள் வந்தது ஒரு ஆசீர்வாதமாக உணர்கிறேன்” என்று பேசினார்.

8. நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் பகுதியில் தனியார் திரையரங்கு ஒன்று அமைந்துள்ளது. இந்தப்பகுதியானது இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும். இந்த திரையரங்கில் தீபாவளிக்கு வெளியான அமரன் திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னதாக அடையாளம் தெரியாத சில நபர்கள், திரையரங்கின் முன்பகுதியில் பெட்ரோல் குண்டை வீசி சென்றனர். அதனைத்தொடர்ந்து வந்த போலீசார் திரையரங்கின் சிசிடிவி காட்சி பதிவுகளை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் பெட்ரோல் குண்டு வீசியவர் ரஹீம் என்றும், அவர் மேலப்பாளையத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்திருக்கிறது.

9. நயன்தாரா பிறந்தநாளை முன்னிட்டு, அவரது ஆவணப்படம் நயன்தாரா 'Beyond the Fairytale’ என்ற பெயரில் கடந்த நவம்பர் 18 நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த ஆவணப்படத்தில் நயன் நடித்து, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான நானும் ரெளடிதான் திரைப்படத்தில் 3 செகண்ட் நேர அளவிலான காட்சிகளை பயன்படுத்தியதற்கே தனுஷ் வழக்கு தொடர்ந்த நிலையில், தற்போது அவரின் எதிர்ப்பை மீறி, கிட்டத்தட்ட 37 செகண்ட் அளவிலான, நானும் ரெளடிதான் படம் தொடர்பான காட்சிகள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இந்த நிலையில் இது குறித்து நெட்டிசன்கள் பலர் தங்களது கருத்துக்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

தனுஷ்
தனுஷ்

10. பொங்கலுக்கு வணங்கான் திரைப்படம் வெளியாக இருக்கிறது. அன்றைய தினம் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படமும் வெளியாக இருக்கிறது. இது தொடர்பாக அருண் விஜயிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்

“அஜித் சார் உச்சம் அவருக்கு யாரும் போட்டி கிடையாது அவருடைய ரசிகர்கள் என்னை அவ்வளவு நேசித்து இருக்கிறார்கள். நிச்சயமாக இது போட்டி எல்லாம் கிடையாது. அவர்கள் அறிவிப்பு வெளியிட்ட இருக்கிறார்கள் நாளடைவில் அது என்னவென்று தெரியும் எங்களுக்கு சின்ன ஒரு வழி கிடைக்கும் என நம்புகிறேன்” என கூறினார்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.