Lokesh kanagaraj: ‘மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே..’ மாப்பிள்ளையான லோகேஷ்கனகராஜ்! - என்ன சங்கதி தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Lokesh Kanagaraj: ‘மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே..’ மாப்பிள்ளையான லோகேஷ்கனகராஜ்! - என்ன சங்கதி தெரியுமா?

Lokesh kanagaraj: ‘மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே..’ மாப்பிள்ளையான லோகேஷ்கனகராஜ்! - என்ன சங்கதி தெரியுமா?

Kalyani Pandiyan S HT Tamil
Mar 20, 2024 07:53 PM IST

போஸ்டரில் கணவன் மனைவி கோலத்தில் இருக்கும் லோகேஷ் கனகராஜ் மற்றும் சுருதிஹாசன் வீடியோ கேம் விளையாடிக்கொண்டிருக்கின்றனர்.

லோகேஷ் கனகராஜ்!
லோகேஷ் கனகராஜ்!

 

நடிகர் கமல்ஹாசன் வரிகளில், நடிகை ஸ்ருதிஹாசன் இசையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் பாடல் ‘இனிமேல்’. இந்தப்பாடலின் அறிவிப்பு தொடர்பான போஸ்டர் கடந்த மாதம் வெளியான நிலையில், நேற்றைய தினம் இந்தப்பாடல் தொடர்பான புரமோ வெளியாகி இருந்தது. 

அதில் கமல்ஹாசன், ஸ்ருதிஹாசன், லோகேஷ் கனகராஜ் ஆகிய மூன்று பேரும் தோன்றி இருந்தனர். இந்த நிலையில் இன்றைய தினம் இந்தப்பாடல் தொடர்பான போஸ்டர் வெளியாகி இருக்கிறது. 

அந்த போஸ்டரில் கணவன் மனைவி கோலத்தில் இருக்கும் லோகேஷ் கனகராஜ் மற்றும் சுருதிஹாசன் வீடியோ கேம் விளையாடிக்கொண்டிருக்கின்றனர். இந்தப்பாடல் தொடர்பான அறிவிப்பில்,  ‘வெற்றியாளர்களும் இல்லை, தோல்வியாளர்களும் இல்லை.. இனிமேல் ஆட்டக்காரர்கள் மட்டுமே’ என்று பதிவிடப்பட்டு இருக்கிறது. மேலும் இந்தப்பாடலின் டீசர் நாளை மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இன்று தமிழ் சினிமாவின் ஆகப்பெரும் நம்பிக்கையாக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் படத்தில் இயக்குநராக அறிமுகமான அவர் ‘கைதி’ ‘மாஸ்டர்’ ஆகிய படங்களில் உச்சம் தொட்டு விக்ரம் என்ற ப்ளாக் பஸ்டர் வெற்றிப்படத்தை கொடுத்தார்.

கடந்த ஆண்டு இவரது இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்தப்படத்தை தொடர்ந்து லோகேஷ் தற்போது ரஜினிகாந்தின் 171 படத்தில் இயக்குநராக கமிட் ஆகி இருக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் இந்தப்படம் குறித்து பேசிய லோகேஷ் கனகராஜ், " Thalaivar 171 படத்துக்கான திரைக்கதை எழுதும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது, இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் முன் தயாரிப்பு பணிகள் தொடங்கிவிடும்.

ரஜினிகாந்திடம் எப்போதும் போன் மூலம் தொடர்பில் இருந்து வருகிறேன். இந்த படத்தின் மீது மிகுந்த ஆர்வத்துடன் உள்ளேன். அடுத்த திட்டங்கள், பணிகளில் பிஸியாக இருப்பதால் சமீபத்தில் என்னை தொடர்பு கொண்டவர்களிடம் தொடர்பில் இருக்க முடியவில்லை." என்று பேசினார்.

இதற்கிடையே  G squad என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் லோகேஷ் கனகராஜ் தொடங்கினார். தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய போது அவர் வெளியிட்ட பதிவில், “ 5 படங்களை டைரக்ட் செய்திருக்கும் நான், அடுத்ததாக ‘G squad’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறேன். முதற்கட்டமாக என்னுடைய நண்பர்கள், உதவி இயக்குநர்கள் ஆகியோரின் ஐடியாக்களை படமாக எடுக்க இருக்கிறேன். உங்களுடைய ஆதரவை வழக்கம் போல தர வேண்டும்” என்று குறிப்பிட்டு இருந்தார்.

அந்த பேனரின் கீழ் விஜய்குமார் நடித்த ஃபைட் கிளப் படத்தை வாங்கி வெளியிட்டார். ஆனால் அந்தப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

 

 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.