Caption Miller: 'அருமையான படைப்பு’ கேப்டன் மில்லரை பாராட்டிய உதயநிதி ஸ்டாலின்
கேப்டன் மில்லர் படத்தை பாராட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
நடிகர் தனுஷ் நடிப்பில் பீரியட் ஆக்ஷன் டிராமா பாணியில் உருவாகியிருக்கும் படம் கேப்டன் மில்லர். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்தப் படம் பொங்கல் வெளியீடாக ஜனவரி 12 ஆம் தேதி வெளியானது. உலகளவில் 900+ திரைகளுடன் தனுஷின் மிகப்பெரிய வெளியீடாக படம் ரிலீஸாகி உள்ளது.
படத்தின் நீளம் மற்றும் சென்சார் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. கேப்டன் மில்லர் படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் யு/ஏ சான்றிதழ் அளித்து உள்ளனர்.
படத்தில் இடம்பிடித்திருக்கும் சில வன்முறை காட்சிகளுக்கு கத்திர போட்டுள்ளனர். இந்த படம் சென்சார் செய்யப்பட்டு யு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தில் வெள்ளையர்களுக்கு எதிராக கிராம மக்கள் காக்கும் ஹீரோவாக படத்தில் தனுஷ் தோன்றினார்.
படத்தில் கன்னட நடிகர் ஷிவ்ராஜ்குமார், சந்தீப் கிஷான், ஜான் கொக்கேன், நிவேதிதா சதீஷ், நாசர் உள்பட பலரும் நடித்துள்ளார்கள். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்தார்.
கேப்டன் மில்லர் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை மட்டும் படக்குழு 32 நாட்கள் படமாக்கி உள்ளார்கள். படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் கலவையான விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்தை பாராட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
அதில், “ கேப்டன் மில்லர் என்கிற அருமையானதொரு படைப்பை சரியான நேரத்தில் கொண்டு வந்திருக்கும் நடிப்பு அசுரன் தனுஷ் உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டுக்கள்.
மனித உரிமைப் போராட்டத்தின் மகத்துவத்தைச் விடுதலைப் போராட்டக் கதைக்களத்தின் ஊடாக அழுத்தமாக பேசியிருக்கிறார் கேப்டன் மில்லர்.
ஒடுக்கப்பட்ட மக்களின் கோயில் நுழைவு உரிமையை அடிப்படையாக வைத்து கேப்டன் மில்லர் என்கிற அருமையானதொரு படைப்பை சரியான நேரத்தில் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. மனித உரிமைப் போராட்டத்தின் மகத்துவத்தைச் விடுதலைப் போராட்டக் கதைக்களத்தின் ஊடாக அழுத்தமாக பேசியிருக்கிறார் கேப்டன் மில்லர்” எனக் குறிப்பிட்டு உள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்