தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Udaya Nithi Fans Helped The Blind At The Launch Of Kannai Nambathey

கண்ணை நம்பாதே வெளியீட்டு விழாவில் பார்வையற்றோருக்கு உதவிய உதய நிதி ரசிகர்கள்!

Pandeeswari Gurusamy HT Tamil
Mar 17, 2023 12:09 PM IST

kannai nambathey: இயக்குனர் மு.மாறன் இந்த 'கண்ணை நம்பாதே' திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

கண்ணை நம்பாதே திரைபட வெளியீட்டு விழா
கண்ணை நம்பாதே திரைபட வெளியீட்டு விழா

ட்ரெண்டிங் செய்திகள்

திமுக இளைஞரணி செயலாளரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நடிப்பில் "கண்ணை நம்பாதே" திரைப்படம் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் இன்று வெளியானது.

இயக்குநர் மு.மாறன் இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகி உள்ள இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் கோவை சாந்தி திரையரங்கில் இப்படம் வெளியீட்டு விழாவை கொண்டாட்டங்கள் நடந்தது. இதில் , கோவை மாவட்ட உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றம் சார்பில் 100 க்கும் மேற்பட்ட பார்வையற்றோர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டது. அங்கு திரண்ட பார்வையற்றோருக்கு அரிசி, கைக்குடை உள்ளிட்ட பல்வேறு நிவாரண பொருட்களை இளைஞரணி துணை அமைப்பாளர் கிஸ்கால் ராஜா, வழக்கறிஞர் சரவணன் ஆகியோர் மாவட்ட தலைவர் உதய பூபதி தலைமையில் வழங்கினர். மேல தாளங்களுடன் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சியில், மாநகர தலைவர் டேவிட் ராஜா, மாவட்ட செயலாளர் உதயநிதி பாபு, மாநகர செயலாளர் முனிப்பாண்டி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

உதவிகளை பெற்ற பார்வையற்றோர் மகிழ்ச்சியுடன் திரும்பினர்.

அருள்நிதி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற இரவுக்கு ஆயிரம் கண்கள் திரைப்படத்தின் இயக்குனர் மு.மாறன் இந்த 'கண்ணை நம்பாதே' திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் உடன் பிரசன்னா, ஸ்ரீகாந்த், சதீஷ், மாரிமுத்து, பூமிகா, ஆத்மிகா, சுபிக்ஷா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். சித்துகுமார் பின்னணி இசை பெரிய அளவில் ரசிக்க வைத்துள்ளது என செய்திகள் வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்