Top 10 Cinema Reports: நாக சைதன்யா திருமணம் முதல் வேட்டையன் கதை வரை! -டாப் 10 கோலிவுட் கிசுகிசுக்கள்!-tvk vijay statement to vettaiyan story top 10 kollywood cinema reports on august 21 2024 - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Top 10 Cinema Reports: நாக சைதன்யா திருமணம் முதல் வேட்டையன் கதை வரை! -டாப் 10 கோலிவுட் கிசுகிசுக்கள்!

Top 10 Cinema Reports: நாக சைதன்யா திருமணம் முதல் வேட்டையன் கதை வரை! -டாப் 10 கோலிவுட் கிசுகிசுக்கள்!

Kalyani Pandiyan S HT Tamil
Aug 21, 2024 08:47 PM IST

Top 10 Cinema Reports: நாக சைதன்யா கல்யாணம் முதல் வேட்டையன் கதை வரை என இன்றைய கோலிவுட் கிசுகிசுக்கள் சார்ந்த செய்திகளை பார்க்கலாம்.

Top 10 Cinema Reports: நாக சைதன்யா திருமணம் முதல் வேட்டையன் கதை வரை! -டாப் 10 கோலிவுட் கிசுகிசுக்கள்!
Top 10 Cinema Reports: நாக சைதன்யா திருமணம் முதல் வேட்டையன் கதை வரை! -டாப் 10 கோலிவுட் கிசுகிசுக்கள்!

2. விஜயகாந்த்தின் மகன்களில் ஒருவரான விஜய பிரபாகரனுக்கு சில வருடங்களுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் திருமணம் நடக்கவில்லை. விஜயகாந்தின் உடல்நிலை மோசமானதின் காரணமாகவே அவரது கல்யாணம் தடைபட்டதாக சொல்லப்பட்டது. இந்தச் சூழலில் பிரபாகரன் திருமணம் எப்போது நடக்கும் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி, விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் முடிந்த பிறகு பிரபாகரனின் திருமணம் நடக்கும் என்று சொல்லப்படுகிறது.

3. விஜய் அரசியல் வேலைகளில் மும்மரமாக செயல்பட்டு வருகிறார். கொடி அறிமுக நிகழ்வுக்கு தமிழகம் முழுவதும் இருந்து மாவட்ட நிர்வாகிகள் மட்டும் அழைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், நிர்வாகிகள் அனைவரும் காலை 7 மணிக்குள் கட்சி அலுவலகத்திற்கு வர வேண்டும். காலை 11 மணிக்கு கொடி அறிமுகப்படுத்தப்படும். கொடியேற்றும் நிகழ்ச்சியில் நிர்வாகிகளுக்கு செல்போன் அனுமதி இல்லை என்று கூறியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

4. ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடித்துவரும் படம் வேட்டையன். டிஜே. ஞானவேல் இயக்கிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் மும்மரமாக நடந்து வருகின்றன. இந்த நிலையில், படத்தின் கதை குறித்தான தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக இருக்கும் ரஜினி பலரை பெருமைக்காக சுட்டுத்தள்ளுகிறார். அதன் பின்னர் அதனை தவறு என உணரும் ரஜினி என்ன செய்கிறார் என்பதுதான் படத்தின் கதை என சொல்லப்படுகிறது.

5. நடிகர் விஜய்சேதுபதிக்கு அறிமுகமே தேவையில்லை. அவரது நடிப்பில், அண்மையில் வெளியான திரைப்படம் ‘மகாராஜா’. ‘குரங்கு பொம்மை’ இயக்குநர் நித்திலன் இயக்கத்தில் வெளியான இந்தப்படம், விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று 100 கோடியை தாண்டி வசூல் செய்தது. இந்தப்படத்தில் முதலில் சாந்தனு நடிக்க இருந்தார் என்று நித்திலன் கூறினார்.

6. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் வாடிவாசல் படம் குறித்த அறிவிப்பு வெளியானது. இந்த படத்தின் மூலம் சூர்யா - வெற்றிமாறன் முதல் முறையாக இணைந்தனர். இதையடுத்து படத்துக்கான டெஸ்ட் ஷுட்டிங்கில் சென்னை ஈசிஆர் பகுதியில் படமாக்கப்பட்டது. நீண்ட காலமாக இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகத நிலையில். இந்த கூட்டணி உடைபடுவதாக பேச்சு வெளியானது. இந்த நிலையில் இந்தப்படத்தின் தயாரிப்பார் தாணு மதுரையில் வாடிவாசல் படப்பிடிப்பிற்கான வேலைகளை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

7.தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கக்கூடிய நடிகர் விஜய்யின் 68 ஆவது படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்'. இதனை சுருக்கமாக 'தி கோட்' என்று அழைக்கிறார்கள். இந்த படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா, மோகன், ஜெயராம், வைபவ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

யு/ஏ சான்றிதழ்

இந்நிலையில் இப்படத்தின் தணிக்கை சான்றிதழ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. இந்த நிலையில் படக்குழு ஆடியோ வெளியீட்டு விழா நடத்த திட்டமிடுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

8. நடிகை தமன்னா ஜெயிலர் படத்தில் ஆடிய காவாலா பாடல் சூப்பர் ஹிட் ஆனது. அதனை தொடர்ந்து அவர் கவர்ச்சி பாடல்களில் நடனம் ஆடி வருகிறார். இந்த நிலையில் அவர் ஒரு பாடலுக்கு ஒரு கோடி கேட்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

9. வெங்கட் இயக்கும் அடுத்த பேன் இந்தியா படமான லக்கி பாஸ்கர் படத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ளார். இந்த படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமா ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இந்தப்படம் செப்டம்பர் 7 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளிப் பண்டிகைக்கு ரிலீஸாகும் என படக்குழுவினரால் அறிவுக்கப்பட்டுள்ளது.

10. பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்க இருப்பதாகவும், அந்தப்படத்திற்கு ஜெர்மன் என்று பெயர் வைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.