தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tvk Vijay: சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுக.. ஆம்ஸ்ட்ராங் படுகொலை விஷயத்தில் கொந்தளித்த விஜய்

TVK Vijay: சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுக.. ஆம்ஸ்ட்ராங் படுகொலை விஷயத்தில் கொந்தளித்த விஜய்

Aarthi Balaji HT Tamil
Jul 06, 2024 08:40 AM IST

TVK Vijay: தமிழ்நாடு அரசு சட்ட ஒழுங்கை காத்திட வேண்டும் என, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுக.. ஆம்ஸ்ட்ராங் படுகொலை விஷயத்தில் கொந்தளித்த விஜய்
சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுக.. ஆம்ஸ்ட்ராங் படுகொலை விஷயத்தில் கொந்தளித்த விஜய்

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று ( ஜூலை 5 ) சென்னையில் வெட்டிக் கொல்லப்பட்டார்.

இந்நிலையில் இந்த கொலை சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பான ட்விட்டர் பதிவில், “ பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்கள் படு கொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.

ஆழ்ந்த அனுதாபங்கள்

திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்களைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவரது கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து கொள்கிறேன்.

ட்ரெண்டிங் செய்திகள்

விரமாக முன்னெடுக்க வேண்டும்

இது போன்ற கொடும் குற்றச் சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழக அரசு தீவிரமாக முன்னெடுக்க வேண்டும். சமரசம் இல்லாமல் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி அனைவரது பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் “ எனக் குறிப்பிட்டு உள்ளார்.

6 பேர் கொண்ட கும்பல்

இரண்டு இரு சக்கரங்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல், ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்விட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக காவல் துறையினர் 6 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இதனிடையே ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக, கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் சகோதரர் ஆற்காடு பாலு என்பவர் உட்பட 8 பேர் அண்ணாநகர் துணை ஆணையர் முன்பு சரணடைந்தனர். முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக, ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

யார் இந்த ஆம்ஸ்ட்ராங்க்

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு பிரிவு மாநிலத் தலைவராக ஆம்ஸ்ட்ராங் உள்ளார். இவர் மீது ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. சில ரவுடி கும்பல் உடன் ஏற்கெனவே முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகின்றது.

சென்னை பெரம்பூரை சேர்ந்த ஆம்ஸ்ட்ராங் சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர் ஆவார். கடந்த 2008ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டக் கல்லூரி மோதலில், ஆம்ஸ்ட்ராங் இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருந்தார். பின்னர் இந்த வழக்கில் இருந்து ஆம்ஸ்ட்ராங் விடுதலை செய்யப்பட்டார்.

கடந்த 2006ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் சென்னையில் சுயேச்சை கவுன்சிலராக ஆம்ஸ்ட்ராங் வெற்றி பெற்று இருந்தார். மேலும் தொடர்ந்து பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராகவும் பணியாற்றி வந்தார்.

சென்னையில அரசியல் கட்சியின் மாநிலத் தலைவர் ஒருவர் மர்ம கும்பலால் வெட்டி படு கொலை செய்யப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.