TV Actor Son Attacked: பார்க்கிங்கால் வந்த பிரச்னை! மகன் மீது தாக்குதல் - போலீசில் புகாரளித்த நடிகர் பிர்லா போஸ்
பார்க்கிங்கில் நின்ற தனது காரை சேதப்படுத்திய விவகாரத்தில் மரியாதை குறைவாக நடந்துகொண்டதோடு, தனது மகன் மீது தாக்குதல் நடத்திய கல்லூரி மாணவன் மீது பிரபல சின்னத்திரை நடிகர் பிர்லா போஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மதுரவாயல் பகுதியில் இருக்கும் அப்பார்ட்மெண்ட் ஒன்றில் வசித்து வருகிறார் சின்னத்திரை நடிகர் பிர்லா போஸ். இதையடுத்து அவரது பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றை அந்த பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில், நடிகர் பிர்லா போஸ் மகனை கல்லூரி மாணவர்கள் தாக்கியுள்ளனராம். இதுதொடர்பாக நடிகர் போஸ் மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக, பிர்லா போஸ் வீட்டின் கீழ்தளத்தில் வசித்தும் வரும் குடும்பத்தை சேர்ந்த கல்லூரி மாணவனை பார்க்க நண்பர்கள் வந்துள்ளனர். அப்போது அங்கு பார்க்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிர்லா போஸ் காரை கல்லூரி மாணவர்கள் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதில் கல்லூரி மாணவர்கள், நடிகர் பிர்லா போஸ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது மாணவர்கள், நடிகர் மரியாதை குறைவாக பேசியதாக தெரிகிறது. இந்த விவகாரம் தொடர்பாக கல்லூரி மாணவனின் குடும்பத்தாரிடம் பேசியபோது இருத்தரப்பினரிடையே பிரச்னை மேலும் தீவிரமாகியுள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் பிர்லா போஸ் மூத்த மகன டியூசன் முடித்து விட்டு வீட்டுக்கும் வரும்போது கல்லூரி மாணவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். பிர்லா போஸை பழிவாங்கும் நோக்கியில் அவர்கள் மகன் மீது தாக்குதலில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து நடந்ததை தந்தையிடம் பிர்லா போஸ் மகன் தெரிவித்த நிலையில், அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை மேற்கொண்டு தாக்குதல் நடத்தியவர்கள் மீது காவல்துறையில் புகாரும் அளித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் தாக்குதலில் ஈடுபட்டதாக புகார் அளிக்கப்பட்டிருக்கும் கல்லூரி மாணவன் பெற்றோர்கள் தங்களது மகன் செய்தது தவறு, இதுதொடர்பாக அவரை கண்டித்ததாக தெரிவித்தனர். அத்துடன் இந்த சம்பவம் தொடர்பாக பிர்லா போஸ் காலில் விழுந்தும் மன்னிப்பு கோரியதாக தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் பிர்லா போஸ் தனது மகன் தாக்கிய கல்லூரி மாணவன் மீது நடவடிக்கை எடுப்பதில் உறுதியாக இருந்து வருகிறாராம். கார் பார்க்கிங் விவகாரத்தில் நடிகரின் மகன் தாக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலீஸ் வேடங்களில் நடிக்கும் பிர்லா போஸ்
சின்னத்திரை நடிகரான பிர்லா போஸ் திருமதி செல்வம், கோலங்கள் உள்பட பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார்.
பல்வேறு தமிழ் சினிமாக்களிலும் இவர் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். அஜித்தின் துணிவு படத்தில் போலீசாக வரும் பிர்லா போஸ், ரஜினி நடிப்பில் உருவாகி வரும் வேட்டையன் படத்திலும் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9