'நானே முதல்ல அஜித் ஃபேன் தான்.. விஜய்ய பத்தி பேசுறது நாகரீகமா இருக்காது'- டிடிவி தினகரன்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  'நானே முதல்ல அஜித் ஃபேன் தான்.. விஜய்ய பத்தி பேசுறது நாகரீகமா இருக்காது'- டிடிவி தினகரன்

'நானே முதல்ல அஜித் ஃபேன் தான்.. விஜய்ய பத்தி பேசுறது நாகரீகமா இருக்காது'- டிடிவி தினகரன்

Malavica Natarajan HT Tamil
Dec 17, 2024 04:48 PM IST

டிடிவி தினகரன் பங்கேற்ற நிகழ்ச்சியில் கடவுளே அஜித்தே கோஷம் எழுந்தது பூதாகரமான நிலையில், தான் ஒரு அஜித் ரசிகன் என கூறியுள்ளார்.

'நானே முதல்ல அஜித் ஃபேன் தான்.. விஜய்ய பத்தி பேசுறது நாகரீகமா இருக்காது'- டிடிவி தினகரன்
'நானே முதல்ல அஜித் ஃபேன் தான்.. விஜய்ய பத்தி பேசுறது நாகரீகமா இருக்காது'- டிடிவி தினகரன்

நடிகர் விஜய்யின் முதல் அரசியல் மாநாடு, முதல்வர் ஸ்டாலினின் நிகழ்ச்சி, டிடிவி தினகரன் பங்கேற்ற நிகழ்ச்சி என ரசிகர்களின் உணர்ச்சி வெளிப்பாடு அதிகரிக்கத் தொடங்கியதால், நடிகர் அஜித் குமார் தன்னை அப்படி அழைக்க வேண்டாம். தன் பெயரை சொல்லியே அழைக்குமாறு கூறினார். அந்த வார்த்தை தனக்கு அசௌகரியம் ஏற்படுத்துவதாகவும், தன் உணர்ச்சிகளுக்கு மதிப்பளிக்குமாறும் கூறி இருந்தார்.

எனக்கு புரியவில்லை

இந்நிலையில், அமமுக பொதுச் செயலாளர், டிடிவி தினகரன் மதுரையில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, திருப்பூரில் மாரத்தான் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு பரிசளிக்கும் முன் என்னை அவர்களிடம் பேசச் சொன்னார்கள். அப்படி நான் பேசிய சமயத்தில் தான் கடவுளே அஜித்தே கோஷம் எழுப்பப்பட்டது.

அது என்ன என முதலில் எனக்கு புரியாததால், பின்னர் உதவியாளரிடம் கேட்டு தெரிந்துகொண்டேன். அதற்குள் பத்திரிகையாளர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி செய்தி வெளியிட்டு விட்டனர்.

நானே அஜித் ஃபேன் தான்

நான் அதிர்ச்சி அடைந்துவிட்டேன் என எல்லாம் செய்தி வெளியிட்டனர். நான் அதிர்ச்சி அடையவில்லை. நானும் அஜித்துடைய ஃபேன் தான். அஜித்தை எனக்கும் பிடிக்கும். அத பல பேட்டிகளிலும் நான் சொல்லி இருக்கேன். பல குழந்தைகளக்கு கூட நான் அஜித் பெயரை வைத்துள்ளேன்.

அதுக்காக எனக்கு விஜய்ய பிடிக்காதுன்னு இல்ல. அவரையும் பிடி்ககும். அவர் படத்தையும் பார்ப்பேன். எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல், மாதிரி, அஜித், விஜய், விக்ரம், சூர்யான்னு எல்லோரட படங்களையும் நல்லா இருந்தா பாப்பேன்.

விஜய் பத்தி பேசுறது நாகரீகம் இல்லை

இப்போ கூட விக்ரமோட தங்கலான் படத்த ஓடிடில பாத்தேன் ரொம்ப அருமையா இருந்தது என்றார். அதற்கு பத்திரிகையாளர் ஒருவர் கங்குவா படமா எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு கங்குவா படத்தை இன்னும் பார்க்கவில்லை எனக் கூறினார். மேலும், என்னுடைய பதிலை நான் கூறிவிட்டேன். உங்களுக்கு சொல்ல வேண்டியதை நீங்கள் கூறுங்கள் என்றார்.

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியது ஒன்றும் படம் கிடையாது. அவர் ஒரு கட்சி தொடங்கி, கொள்கை, கோட்பாட்டை எல்லாம் கூறியுள்ளார். இதில் நாம் கருத்து தெரிவிக்க எதுவும் இல்லை. அப்படி கருத்து தெரிவிப்பது கூட நாகரீகமாக இருக்காது என செய்தியாளர்களிடம் தனது கருத்தை வெளிப்படையாக பேசி இருந்தார்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர் சந்திப்பு - வீடியோ

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.