டிடிஎஃப் வாசனுக்கும் மீண்டும் நாமம்.. கொள்ளையர்களுக்கு பஞ்ச் டயலாக் போட்ட வாசன்.. அடப்பாவமே!
சென்னையில் உள்ள டிடிஎஃப் வாசன் கடையில் திருட்டு சம்பவம் நடந்துள்ளது. இதன் சிசிடிவி காட்சிகளை வடிவேலு டயலாக்குடன் வெளியிட்டுள்ளார்.
அதிவேகமாக பைக் ஓட்டி சாகசம் செய்த வீடியோக்களின் மூலம் இளைஞர்களிடம் பரிட்சையமானவர் டிடிஎஃப் வாசன். 2கே கிட்ஸின் நாயகனாக இவர், மஞ்சள் வீரன் என்ற படத்திலும் கதாநாயகனாக ஒப்பந்தம் ஆகி இந்தப் படத்தின் படப்பிடிப்பு வேலைகளையும் தொடங்கியிருந்தார்.
மஞ்சள் வீரன்
இந்த நிலையில், டிடிஎஃப் வாசன் மஞ்சள் வீரன் திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என மஞ்சள் வீரன் படத்தின் இயக்குநர் செல் அம் அறிவித்தார். இதையடுத்து, டிடிஎஃப் வாசனுக்கும் இயக்குநர் செல்அத்திற்கும் இடையே வாக்குவாதங்கள் நடைபெற்றது.
மேலும், டிடிஎஃப் வாசனுக்கு பதில் புதிய கதாநாயகனை விரைவில் அறிவிப்பேன் என உறுதி அளித்த இயக்குநர் செல்அம் கூல் சுரேஷை வைத்து படத்தின் பூஜையையும் போட்டார். ஆனால், சில நாட்களிலேய கூல் சுரேஷ் படத்தின் கதாநாயகன் அல்ல. நான் அவரை கதாநாயகனாக அறிவிக்கவே இல்லை எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
வாசனுக்கு நாமம் போட்ட கொள்ளையர்கள்
இந்த நிலையில், டிடிஎஃப் வாசன் அவரது இன்ஸ்டாகிராமில் தனக்கு நடந்த சோகமான நிகழ்வை வடிவேலு டயலாக்குடன் வீடியோவாக பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், சென்னையில் உள்ள டிடிஎஃப் வாசன் கடைக்கு பைக்கில் வந்த 2 பேர் கடையின் பூட்டை உடைத்து, விலை உயர்ந்த ஹெல்மெட்டுகள் உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்றனர். அத்துடன் நில்லாமல், கடையில் வைத்திருந்த பணத்தையும் திருடிச் சென்றுள்ளனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளைத் தான் டிடிஎஃப் வாசன் வெளியிட்டிருந்தார்.
கொள்ளையர்களுக்கு பஞ்ச் வசனம்
இந்த வீடியோவில், சென்னைக்கு வந்து காசு சம்பாதிக்கலாம் என்று பார்த்தால், கையில் இருக்கும் காசு எல்லாம் போய்விட்டதாக வடிவேலு வசனத்தையும் இணைத்துள்ளார்.
அதுமட்டுமா, தன் கடையில் திருட்டு நடந்திருந்தாலும் நான் எதிலிருந்தும் பின்வாங்க மாட்டேன் எனக் கூறியிருக்கிறார். இந்த போஸ்ட்டை பார்த்த இவரது ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வரும் சூழலில், பலரும் அவரை கிண்டல் செய்து வருகின்றனர்.
யார் இந்த வாசன்
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த டிடிஎஃப் வாசன், விலை உயர்ந்த பைக்குகளில் சாகசங்கள் செய்து அதனை யூடியூப்பில் பதிவேற்றம் செய்து வந்தார். மேலும், சாகசங்கள், அதிலுள்ள சிக்கல்கள், பைக்கிற்கு தேவையான விஷயங்கள் குறித்தும் விளக்கிவந்தார். இதனால், இவருக்கு தமிழ்நாடு மட்டுமின்றி, பல மாநிலங்களிலும் ரசிகர்கள் ஏராளமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், போக்குவரத்தை மீறி வாகனம் ஓட்டுவது, அனுமதியின்றி கூட்டம் கூட்டுவது, பொதுமக்களை அச்சுறுத்தும் வண்ணம் வாகனம் ஓட்டுவது, பொது இடங்களில் மக்களை தொந்தரவு செய்வது என பல்வேறு வழக்குகளும் உள்ளது.
2k கிட்ஸ் ஹீரோ
டிடிஎஃப் வாசன் என்ற பெயர் 2கே கிட்ஸ்களுக்கு பரிட்சையமான பெயராக இருந்தாலும், மக்கள் மத்தியில் பிரபலமடைந்தது அவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது தான். இவரது பிறந்த நாளை பூங்கா ஒன்றில் கொண்டாடுவதாக டிடிஎஃப் வாசன் அறிவித்திருந்த நிலையில், பல்வேறு மாநிலங்களிலிருந்தும் இளைஞர்கள் அந்த இடத்தில் கூடினர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்ட பிறகு தான் டிடிஎஃப் வாசன் என்ற பெயர் மக்கள் மத்தியில் உலாவ ஆரம்பித்தது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்