தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ttf Vasan: தைரியமாக இரு அன்பே.. கை பிடித்து காதலர் டிடிஎஃப் வாசனுக்கு ஆதரவாக நிற்கும் ஷாலின்!

TTF Vasan: தைரியமாக இரு அன்பே.. கை பிடித்து காதலர் டிடிஎஃப் வாசனுக்கு ஆதரவாக நிற்கும் ஷாலின்!

Aarthi Balaji HT Tamil
May 31, 2024 07:49 AM IST

TTF Vasan: ஷாலின் சோயா இன்ஸ்டாகிராமில் எந்த நெருக்கடியிலும் உறுதியாக இருப்பேன், எப்போதும் தன்னுடன் இருப்பேன் என்று டிடிஎஃப் வாசன் கையைப் பிடித்தபடி ஒரு படத்தைப் பகிர்ந்துள்ளார்.

தைரியமாக இரு அன்பே.. கை பிடித்து காதலர் டிடிஎஃப் வாசனுக்கு ஆதரவாக நிற்கும் ஷாலின்!
தைரியமாக இரு அன்பே.. கை பிடித்து காதலர் டிடிஎஃப் வாசனுக்கு ஆதரவாக நிற்கும் ஷாலின்!

ட்ரெண்டிங் செய்திகள்

ஷாலின் சோயா இன்ஸ்டாகிராமில் எந்த நெருக்கடியிலும் உறுதியாக இருப்பேன், எப்போதும் தன்னுடன் இருப்பேன் என்று டிடிஎஃப் வாசன் கையைப் பிடித்தபடி ஒரு படத்தைப் பகிர்ந்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு, டிடிஎஃப் வாசன் தனது யூடியூப் சேனலில் இருவரும் காதலிப்பதாக ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

தைரியமாக இரு அன்பே

அதில், “ 'தைரியமாக இரு, அன்பே. நான் எப்போதும் உன்னுடனேயே இருப்பேன். எனக்குத் தெரிந்த சிறந்த நபர் நீங்கள். இப்போது என்ன நடக்கிறது என்பதற்கு நீங்கள் அனுபவிக்கும் செயலுக்கு தகுதியற்றவர் என்று எனக்குத் தெரியும். ஆனா நீங்க எப்பவும் சொல்ற மாதிரி 'நடப்பாட்டுது நல்லதுக்கு. விடு பாத்துக்கலாம் “ என குறிப்பிட்டு உள்ளார்.

6 பிரிவுகளின் கீழ் வழக்கு

டிடிஎஃப் வாசன் கடந்த 15 ஆம் தேதி தனது காரில் சென்னையில் இருந்து மதுரை வழியாக தூத்துக்குடி சென்று உள்ளார். அப்போது அவர் செல்போன் பேசியபடி கார் ஓட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக மதுரை மாநகர ஆயுதப்படை காவலர் மணிபாரதி சார்பில் அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

இந்த புகாரை தொடர்ந்து கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுதல், பொது மக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கு வகையில் வாகனம் இயக்குதல் உள்பட 6 பிரிவுகளின் கீழ் டிடிஎஃப் வாசன் மீது அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனையடுத்து  மே 29  இரவு அண்ணாநகர் காவல் துறையினர் டிடிஎஃப் வாசனை அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

மதுரை நீதிமன்றத்தில் கோரிக்கை

இதற்கிடையில் மதுரை நீதிமன்றத்தில் JM 6 நீதிபதி சுப்புலெட்சுமி முன் டிடிஃஎப் வாசன் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது டிடிஃப் வாசன் தரப்பு வழக்கறிஞர் ஜூன் மாதம் முதல் வராத்தில் டிடிஃஎப் வாசனுக்கு திரைப்பட சூட்டிங் உள்ளது. இதனால் ஜாமின் வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். போலீசார் தரப்பில் நீதிமன்ற காவலில் எடுக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது. பின்னர் மதியத்திற்கு பிறகு வழக்கு விசாரணை நடைபெறும் என நீதிபதி ஒத்தி வைத்தார்.

கிடைத்த ஜாமின்

இந்நிலையில் யூடியூப் சேனல் நடத்தும் இவர் பிரபல படுத்துவதற்காகவே இது போன்ற வீடியோக்களை வெளியிடுகிறார். இவரை இளைஞர்கள் பின்பற்றும் வாய்ப்பு உள்ளது. இவருக்கு நீதிமன்ற காவல் விதிக்க வேண்டும் என்ற அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

அதற்கு மனுதாரர் தரப்பில் ரஜினிகாந்த் சிகரெட் குடிப்பது போல் சினிமா படங்கள் வெளியாவதால் இளைஞர்கள் கெட்டு போகிறார்களா என வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதி சுப்புலெட்சுமி இனிமேல் இதுபோன்ற காரியங்களில் ஈடுபட மாட்டேன் என உறுதி மொழி பத்திரம் தாக்கல் செய்ய வலியுறுத்தி உள்ளார். மேலும் வீடியோவும் வெளியிட வேண்டும் என உத்தரவிட்டு ஜாமின் வழங்கி உள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்