TTF Vasan: யூடியூபர் டிடிஃஎப் வாசனுக்கு ஜாமின் வழங்கியது நீதிமன்றம்.. இப்படி செயல்பட மாட்டேன் என வீடியோ வெளியிட உத்தரவு
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ttf Vasan: யூடியூபர் டிடிஃஎப் வாசனுக்கு ஜாமின் வழங்கியது நீதிமன்றம்.. இப்படி செயல்பட மாட்டேன் என வீடியோ வெளியிட உத்தரவு

TTF Vasan: யூடியூபர் டிடிஃஎப் வாசனுக்கு ஜாமின் வழங்கியது நீதிமன்றம்.. இப்படி செயல்பட மாட்டேன் என வீடியோ வெளியிட உத்தரவு

Pandeeswari Gurusamy HT Tamil
May 30, 2024 04:23 PM IST

TTF Vasan:ரஜினிகாந்த் சிகரெட் குடிப்பது போல் சினிமா படங்கள் வெளியாவதால் இளைஞர்கள் கெட்டு போகிறார்களா என வாதிட்டார். இதையடுத்து மதுரை நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி சுப்புலெட்சுமி இனிமேல் இதுபோன்ற காரியங்களில் ஈடுபட மாட்டேன் என உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்ய வலியுறுத்தி உள்ளார்.

யூடியூபர் டிடிஃஎப் வாசனுக்கு ஜாமின் வழங்கியது நீதிமன்றம்.. இப்படி செயல்பட மாட்டேன் என வீடியோ வெளியிட உத்தரவு
யூடியூபர் டிடிஃஎப் வாசனுக்கு ஜாமின் வழங்கியது நீதிமன்றம்.. இப்படி செயல்பட மாட்டேன் என வீடியோ வெளியிட உத்தரவு

டிடிஎஃப் வாசன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு

டிடிஎஃப் வாசன் கடந்த 15 ஆம் தேதி தனது காரில் சென்னையில் இருந்து மதுரை வழியாக தூத்துக்குடி சென்று உள்ளார். அப்போது அவர் செல்போன் பேசியபடி கார் ஓட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக மதுரை மாநகர ஆயுதப்படை காவலர் மணிபாரதி சார்பில் அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

இந்த புகாரை தொடர்ந்து கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுதல், பொது மக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கு வகையில் வாகனம் இயக்குதல் உள்பட 6 பிரிவுகளின் கீழ் டிடிஎஃப் வாசன் மீது அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனையடுத்து நேற்று ( மே 29 ) இரவு அண்ணாநகர் காவல் துறையினர் டிடிஎஃப் வாசனை அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆவேசத்தில் கொந்தளித்த டிடிஃப் வாசன்

சட்டம் எல்லாருக்கும் ஒன்னுதான்.. போதையில் 2 பேரை கொன்றவங்களுக்கு பெயிலா? நான் யாருடைய உயிருக்கு பங்கம் விளைவித்தேன். 23 வயசு பையன் தானா முன்வந்தா இப்படி செய்வீங்களா.. என்னை பார்த்துதான் மக்கள் கெட்டுப்போறாங்களா? வீதிக்கு ஒரு டாஸ்மார்க் இருக்கு அதை பார்த்து கெட்டுபோக மாட்டாங்களா? என்று செய்தியாளர்களை பார்த்து பேசிய வண்ணம் சென்றார்.

மதுரை நீதிமன்றத்தில் கோரிக்கை

இதற்கிடையில் மதுரை நீதிமன்றத்தில் JM 6 நீதிபதி சுப்புலெட்சுமி முன் டிடிஃஎப் வாசன் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது டிடிஃப் வாசன் தரப்பு வழக்கறிஞர் ஜூன் மாதம் முதல் வராத்தில் டிடிஃஎப் வாசனுக்கு திரைப்பட சூட்டிங் உள்ளது. இதனால் ஜாமின் வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். போலீசார் தரப்பில் நீதிமன்ற காவலில் எடுக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது.  பின்னர் மதியத்திற்கு பிறகு வழக்கு விசாரணை நடைபெறும் என நீதிபதி ஒத்தி வைத்தார். 

இந்நிலையில்  யூடியூப் சேனல் நடத்தும் இவர் பிரபல படுத்துவதற்காகவே இது போன்ற வீடியோக்களை வெளியிடுகிறார். இவரை இளைஞர்கள் பின்பற்றும் வாய்ப்பு உள்ளது. இவருக்கு நீதிமன்ற காவல் விதிக்க வேண்டும் என்ற அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

அதற்கு மனுதாரர் தரப்பில் ரஜினிகாந்த் சிகரெட் குடிப்பது போல் சினிமா படங்கள் வெளியாவதால் இளைஞர்கள் கெட்டு போகிறார்களா என வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதி சுப்புலெட்சுமி இனிமேல் இதுபோன்ற காரியங்களில் ஈடுபட மாட்டேன் என உறுதி மொழி பத்திரம் தாக்கல் செய்ய வலியுறுத்தி உள்ளார். மேலும் வீடியோவும் வெளியிட வேண்டும் என உத்தரவிட்டு ஜாமின் வழங்கி உள்ளார். 

விபத்துக்குள்ளான டிடிஃஎப் வாசன்

கடந்த ஆண்டு காஞ்சிபுரம் அருகே ஆபத்தான முறையில் வீலிங் செய்தபோது விபத்தில் சிக்கனார். இதனைத் தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் மூலம் மீட்கப்பட்ட டிடிஎஃப் வாசன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின், அவர் மீது காஞ்சிபுரம் பாலுசெட்டி சத்திரம் காவல்நிலையத்தினர் பாதசாரிகளின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவித்தல், அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல் பிரிவுகள் உட்பட 5 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்தது.

10 ஆண்டுகளுக்கு ரத்து

இதனைத் தொடர்ந்து இவ்வழக்கில் இருந்து வெளியில் வர ஜாமீன் விண்ணப்பித்த அவருக்கு பலமுறை ஜாமீன் நிராகரிக்கப்பட்டது. அப்போது நீதிபதி, டிடிஎஃப் வாசனின் பைக்கை எரிக்கும்படியும், அவரது யூட்யூப் சேனலை மூடவேண்டும் எனவும் கடுமையாகப் பேசி, ஜாமீனை நிராகரித்தார்.

பின் 10 ஆண்டுகளுக்கு அவரது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்து உத்தரவிட்டது காஞ்சிபுரம் ஆர்டிஓ அலுவலகம். இந்நிலையில் பல்வேறு மேல்முறையீடுகளுக்குப்பிறகு டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன் அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இருசக்கர வாகனம் ஓட்ட மட்டும் தானே கூடாது, அதில் ஏறி அமர்ந்து போஸ் கொடுக்கலாம்ல என்னும் தொனியில், அமர்ந்து தனது யூட்யூப் சேனல் பார்வையாளர்களுக்கான ஒரு வீடியோவை உருவாக்கி வெளியிட்டுள்ளார். அதுவும் சர்ச்சைக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.