' கர்மா உங்கள சும்மா விடாதுடா... அப்படி என்ன என் மேல உங்களுக்கு காண்டு ' - கதறும் டிடிஃ எப் வாசன்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ' கர்மா உங்கள சும்மா விடாதுடா... அப்படி என்ன என் மேல உங்களுக்கு காண்டு ' - கதறும் டிடிஃ எப் வாசன்!

' கர்மா உங்கள சும்மா விடாதுடா... அப்படி என்ன என் மேல உங்களுக்கு காண்டு ' - கதறும் டிடிஃ எப் வாசன்!

Kalyani Pandiyan S HT Tamil
Dec 30, 2024 10:00 PM IST

கர்மா யாரையுமே சும்மா விடாது. மக்கள் மத்தியில் எனக்கு என்று மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது என்று தெரிந்ததோ, அன்றைய தினத்திலிருந்து இப்போது வரை பிரச்சினை எழுந்து கொண்டே இருக்கிறது.

' கர்மா உங்கள சும்மா விடாதுடா... அப்படி என்ன என் மேல் உங்களுக்கு காண்டு ' - கதறும் டிடிஃ எப் வாசன்!
' கர்மா உங்கள சும்மா விடாதுடா... அப்படி என்ன என் மேல் உங்களுக்கு காண்டு ' - கதறும் டிடிஃ எப் வாசன்!

அவர் வெளியிட்ட வீடியோவில், 'உங்கள் எல்லோருக்கும் நடப்பது என்னவென்று நன்றாகவே தெரியும். புதிதாக ஒரு வீடியோவை பதிவிட்டால், அது தொடர்பாக தவறான செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள். அப்படி என்னதான் என்மீது உங்களுக்கு வெறுப்பு என்று எனக்கு தெரியவில்லை. உண்மையில் இது மிக மிக தவறான விஷயம். மொத்தமாக இரண்டு வீடியோக்களை நான் வெளியிட்டு இருக்கிறேன். அந்த வீடியோக்களை பார்த்தாலே உண்மை என்னவென்று உங்கள் எல்லோருக்கும் தெரிந்து விடும். 

பின்னர் ஏன் இவ்வளவு தவறான செய்திகளை வெளியிட்டு என் மீது வழக்கு பதிவு செய்ய முயற்சி எடுக்க வேண்டும். 

என் பேருக்கு களங்கம் 

மக்கள் மத்தியில் ஏன் என்னை கெட்டவன் போல காட்டு முயற்சிக்கிறீர்கள். ஆனால், நீங்கள் நன்றாக இருங்கள். கர்மா என்ற ஒன்று இருக்கிறது. கர்மா இஸ் பூமராங். கர்மா யாரையுமே சும்மா விடாது. மக்கள் மத்தியில் எனக்கு என்று மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது என்று தெரிந்ததோ, அன்றைய தினத்திலிருந்து இப்போது வரை பிரச்சினை எழுந்து கொண்டே இருக்கிறது. 

எல்லாவற்றையும் நான் சட்டப்படி செய்திருந்தும் என் மீது வழக்கு பதிவு செய்தால் நான் என்ன செய்வது. அப்படி இருக்கும் பொழுது நான் ஏன் சட்டப்படி எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்ற கேள்வி வருமா வராதா..? ' என்று பேசி இருக்கிறார். 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.