Trisha: மங்காத்தா பார்ட் 2.. பழிவாங்கிய த்ரிஷா.. விஜய்யை தவிர எல்லோ மற்ற எல்லாருக்கும் பாயசம் - வைரலாகும் மீம்கள்
Trisha: சினிமாக்களில் த்ரிஷாவால் ஏமாற்றப்பட்டு பட்டை நாமம் வாங்கிய ஹீரோக்களின் லிஸ்டில் அஜித்தும் இணைந்துள்ளார். மங்காத்தா படத்தில் தன்னை ஏமாற்றிய அஜித்தை 12 வருடங்கள் கழித்து த்ரிஷா பழிவாங்கிவிட்டதாக ரசிகர்களை வேடிக்கையான கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள்.

அஜித்குமார் - த்ரிஷா ஐந்தாவது முறையாக ஜோடி சேர்ந்து படம் விடாமுயற்சி. மகிழ் திருமேணி இயக்கத்தில் ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
இரண்டு ஆண்டுகள் அஜித்குமார் நடிப்பில் வெளியாகியிருக்கும் விடாமுயற்சி படத்தின் ரிலீஸை ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடினார். 1997இல் வெளியான ஹாலிவுட் படமான பிரேக் டவுன் படத்தின் தழுவலாக விடாமுயற்சி உருவாகியுள்ளது. அத்துடன் மற்றொரு ஹாலிவுட் படம் லாஸ்ட் சீன் அலைவ் என்ற படத்தின் சில காட்சிகளும் பட்டி டிங்கரிங் செய்திருப்பதாக தகவல்கள் பரவுகின்றன.
பழிவாங்கிய த்ரிஷா
இந்த படத்தில் கணவன் - மனைவியாக அஜித் - த்ரிஷா வரும் நிலையில், அஜித்திடம், த்ரிஷா விவாகரத்து கேட்பார். இதற்கு அர்ஜுன் உதவியை அவர் நாடியிருப்பது தெரிய வரும். இதன் பின்னர் நடக்கும் சுவாரஸ்ய திருப்பங்கள் படத்தின் கதையாக உள்ளது.
இந்த காட்சியை பார்த்த பலரும் இது மங்காத்தா பார்ட் 2 போல் இருப்பதாகவும், 13 வருடங்கள் கழித்து அஜித்தை ஒரு வழியாக த்ரிஷா பழிவாங்கிவிட்டதாகவும் பலரும் கருத்துகளை பகிர்ந்தனர்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மங்காத்தா படத்தில் தனது பிரண்ட் அர்ஜுன் ஐடியாப்படி த்ரிஷாவை காதலிப்பது போல் நடிப்பார் அஜித். ஆனால் த்ரிஷா நிஜமாகவே அவர் காதலிப்பார்.
இதையடுத்து தற்போது விடாமுயற்சி படத்தில் இந்த ஜோடி திருமணம் செய்து கொண்டதாக காட்டப்பட்டும் நிலையில், இந்த முறை மீண்டும் அர்ஜுன் உதவியுடன் அஜித்தை, த்ரிஷா ஏமாற்றுவது போல் காட்சி அமைந்துள்ளது.
அஜித்துக்கும் பட்டை நாமம்
இதேபோல் த்ரிஷா தன்னுடன் நடிக்கும் ஹீரோக்களை ஏமாற்றுவதை தனது அறிமுக படத்தில் இருந்தே செய்து வருகிறார். அதன்படி த்ரிஷா ஹீரோயினாக அறிமுகமான மெளனம் பேசியதே படத்தில் சூர்யா, விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிம்பு, கொடி படத்தில் தனுஷ், 96 படத்தில் விஜய் சேதுபதி என த்ரிஷாவிடம் ஏமாற்றி த்ரிஷா பட்டை நாமம் அடித்த ஹீரோக்கள் லிஸ்டில் தற்போது அஜித்தும் இணைந்துள்ளார் எனவும் மீம்கள் பகிரப்படுகின்றன.
த்ரிஷா பாயசம் வைக்காத ஹீரோ
த்ரிஷாவுடன் இணைந்து கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி, லியோ என ஐந்து படங்களில் இணைந்து நடித்த விஜய், அவரிடம் ஏமாறாத ஹீரோவாகவும் இருந்து வருகிறார். அந்த வகையில் த்ரிஷா பாயசம் வைக்காத முன்னணி ஹீரோவாக தளபதி விஜய் உள்ளார்.
த்ரிஷா முதன் முதலில் அஜித் ஜோடியாக ஜி படத்தில் நடித்தார். இதன் பின்னர் கிரீடம், மங்காத்தா, என்னை அறிந்தால் ஆகிய படங்களை தொடர்ந்து தற்போது விடாமுயற்சி படத்திலும் இணைந்துள்ளார். இதில் சுவாரஸ்யமான விஷயமாக அஜித்துடன் இணைந்து நடித்திருக்கும் எந்த ஒரு படத்திலும் கடைசி வரை த்ரிஷா ஜோடியாக இருந்ததில்லை.
முதல் படமான மெளனம் பேசியதே படத்துக்கு பின் 2205இல் வெளியான ஆறு படத்தில் சூர்யாவின் ஜோடியாக நடித்த த்ரிஷா தற்போது 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் சூர்யா 45 படத்தில் இணைந்து நடித்து வருகிறார்.
விண்ணைத்தாண்டி வருவாயா படத்துக்கு முன்னர் சிம்புவடன் அலை என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தார் த்ரிஷா. தனுஷுடன் இணைந்து கொடி படத்திலும், விஜய் சேதுபதியுடன் 96 படத்திலும் நடித்துள்ளார்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்