Trisha Nayantara Fight: நயன்தாராவுடன் ஏற்பட்ட மனக்கசப்பு..! தீர்வை ஏற்படுத்திய அந்த உரையாடல் - த்ரிஷா ஷேரிங்
தனிப்பட்ட முறையில் நயன்தாராவுடன் ஏற்பட்ட மனக்கசப்புக்கு தீர்வை ஏற்படுத்திய அந்த உரையாடல் குறித்து நடிகை த்ரிஷா ஷேரிங் செய்துள்ளார். தொழில் ரீதியாக எங்கள் இருவருக்கும் இடையிலான பிரச்னைகளை ஏற்படுத்தியது எல்லாம் மீடியாக்கள் தான் என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் டாப் நடிகைகளாக த்ரிஷா, நயன்தாரா இருந்து வருகிறார்கள். ஹீரோக்களில் எம்ஜிஆர் - சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் - கமல்ஹாசன், அஜித்குமார் - விஜய், சிம்பு - தனுஷ் என இரு போட்டி நடிகர்கள் இருப்பது போல் ஹீரோயின்களில் த்ரிஷா - நயன்தாரா ஆகியோர் இருந்து வருகிறார்கள்.
இருவரும் தமிழ் சினிமாவில் சுமார் இரண்டு தசாப்தங்களாக நடித்து வருகிறார்கள். இருவரும் ஹீரோயின்களாக மட்டுமல்லாமல், கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்திலும் சில படங்கள் நடித்துள்ளார்.
இந்த இரு துருவங்களை முன்னிலைப்படுத்தி த்ரிஷா இல்லனா நயன்தாரா என்று வடிவேலு பேசும் காமெடி வசனம், அதே பெரியல் ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் படமும் வெளியாகியுள்ளது.
குருவி படத்தால் வந்த உரசல்
விஜய் நடிப்பில் 2008இல் வெளியான குருவி படத்தில் முதலில் நயன்தாரா தான் ஹீரோயினாக நடிப்பதாக இருந்தது. ஆனால் அவருக்கு பதிலாக த்ரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
இதனால் இருவருக்கும் இடையே உரசல் ஏற்பட்டதாக அப்போது செய்திகள் வெளியாகின. அந்த காலகட்டத்தில் இவர்கள் இருவருக்கு சண்டை ஏற்பட்டிருப்பதாக தொடர்ந்து வதந்திகள் வந்தன.
அத்துடன் அவ்வப்போது இவர்கள் இருவரையும் இணைத்து அவ்வப்போது செய்திகளும் வெளியாக பரபரப்பை ஏற்படுத்தி வந்தன.
தனிப்பட்ட பிரச்னை
இந்த சூழ்நிலையில், எங்கள் இருவருக்கும் தொழில்ரீதியாக பிரச்னை இருப்பதாக கூறியது ஊடகங்களதான் என த்ரிஷா கூறியிருப்பதோடு, தனிப்பட்ட ரீதியில் சிறிய பிரச்னை இருந்ததையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக நடிகை த்ரிஷா பிரபல ஆன்லைன் இணையத்தளமான இண்டியாகிளிட்ஸ்க்கு அளித்த பேட்டியில், "நானும், நயன்தாராவும் நீண்ட காலமாக திரைத்துறையில் இருந்து வருகிறோம். எங்களுக்கு தொழில் ரீதியாக ஏற்பட்ட போட்டி, பிரச்னைகளை ஏற்படுத்தியது எல்லாம் மீடியாக்கள் தான்.
அதேசமயம் தனிப்பட்ட ரீதியில் நயன்தாராவுடன் சிறிய மனக்கசப்பு ஏற்பட்டது. அப்போது சில காலம் இருவரும் பேசாமல் இருந்துள்ளோம்." என்றார்.
முற்றுப்புள்ளி வைத்த உரையாடல்
இதற்கிடையே த்ரிஷாவுடனான உரசல் குறித்து நயன்தாராவும் ஏற்கனவே பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். அதில், " இருவருக்கும் இடையிலான உரையாடல் ஒன்று தவறாந புரிதலை ஏற்படுத்தியது.
பின்னர் த்ரிஷாவே தானாக முன்வந்து மீண்டும் பேசி அந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்" என்றார்.
மெகா பட்ஜெட் படங்களில் த்ரிஷா
கடைசியாக த்ரிஷா நடிப்பில் பொன்னியின் செல்வன் சீரிஸ் படங்கள் வெளியாகின. இதில் குந்தவி தேவியாக தோன்றிய த்ரிஷாவின் நடிப்பு ரசிகர்களால் வெகுவாக கவரப்பட்டது.
த்ரிஷா தற்போது மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து தக் லைஃப், அஜித்துடன் விடா முயற்சி, தெலுங்கில் சிரஞ்சீவியுடன் விஸ்வாம்பரா, மலையாளத்தில் மோகன்லாலுடன் ராம், மற்றொரு மலையாள படமான ஐடென்டிட்டி என எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் மெகா பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார். எனவே த்ரிஷாவுக்கு வரிசை கட்டி படங்கள் வெளியாக இருக்கின்றன.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்